விஸ்வா

விஸ்வா

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளார்கள் உள்ளதாக  தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரக் கல்விப்பணியகம் வெளியிட்டுள்ள இத்தகவலில், தனிப்பட்ட முறையிலும் பாலியல் மையங்களிலும் இரகசியமாக இவர்கள் செயற்பட்டு வருவதால் துல்லியமான கணக்கெடுப்புக்களை மேற்கொள்ள முடியாமலுள்ளதாக சுகாதாரக்கல்விப்பணியகத்தின் ஊடக இணைப்பாளர் டொக்ரர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும், எயிட்ஸ் கட்டப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் நாடு முழுவதும் 30 ஆயிரம் தொடக்கம் 40ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘மசாஜ்’ நிலையங்கள், நடமாடும் பாலியல் மையங்கள் ஊடாகவும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயம். இருவரின் நிலை கவலைக்கிடம்!

இன்று (Aug 08 2010) மட்டக்களப்பு – கல்முனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரம்புக்கணையை சொந்த இடமாகக் கொண்ட  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.  பயணம் செய்து கொண்டிருந்த இவர்களின் முச்சக்கரவண்டி எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.  படுகாயமடைந்துள்ளவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கை ஆடைத்தொழிற்சாலைகளில் யாழ்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

SriLanka_MAS_Factoryதென் இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 70 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழ். செயலகத்தில் நடைபெற்ற பயிற்சி நெறியொன்றின் மூலம தொழில்உறவுகள் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இவ்வேலைவாய்ப்ப வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27, 28, 29ம் திகதிகளில் மாவட்ட திட்டமிடல் செயலகத்தினால் 145 மாணவர்களுக்கு ஆடைத் தொழிற்சாலைத்துறை சம்பந்தமான செயலமர்வு நடத்தப்பட்டது.  இவர்களில் 70 பேருக்கே தற்போது இவ்வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான உணவு, தங்குமிடவசதிகள் என்பன குறித்த நிறுவனங்களால் வழங்கப்படும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

வன்னியில் மீள்குடியேற்றப்படும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்!

IDP_Camp வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த 4ம் திகதி ஆரம்பமான இந்நடவடிக்கைகள் இம்மாதம் 30 திகதி வரை நடைபெறும் என கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவுகள் என்ற அடிப்படையில் இம்மீள்குடியேற்ற நடவடிக்கைககள் நடைபெற்று வருகின்றன.  இறுதிக்கட்ட போரின் போது வன்னியிலிருந்து வெளியேறி வவுனியா அகதிமுகாம்களில் இருந்து பின்னர் வெளி மாவட்டங்களில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

IDP_Campவெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களுக்கான இறுதிக்கட்ட மீள்குடியேற்ற நடவடிக்கை இதுவென அறிவிக்கப்பட்டள்ளதால் பெருமளவிலான மக்கள் தற்போது கிளிநொச்சியிலுள்ள தங்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியமரும் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளநொச்சி மத்திய கல்லூரியில் அமைந்துள்ள இடைக்கால முகாமில் வைத்து கிளிநொச்சிப் பகுதி மக்களுக்கான இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலை 9 மணியிலிருந்து மாலை வரை இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலில் கிராமசேவையாளரின் பதிவுகள், பின்னர் சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரின் பதிவுகள் மற்றும், அவர்களால் புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னர் இராணுவத்தினரின் பதிவுகளும் பின்னர் அவர்களாலும் புகைப்படம் பிடிக்கப்படுகின்றன. அதன் பின்னர் அவ்வப்பகுதி சிவில் நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவுள்ள இராணுவத்தினர் பதவுகளுக்குற்படுத்தப்பட்ட மக்களை அவர்களின் காணிகளில் கொண்டு சென்று விடுகின்றனர். முன்னர் இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 12 கூரைத் தகரங்கள் கொடுக்கப்பட்டன. பின்னர் தறப்பாள்கள் கொடுக்கப்பட்டன. தற்போது எதுவும் கொடுக்கப்படாத நிலையில் தங்கள் வீடுகள் அழிவடைந்த, சேதமுற்ற நிலையில் மிகவும் வசதியற்ற நிலையில் மக்கள் தங்களது காணிகளில் மீள்குடியமர்ந்து வருகின்றனர்.

இதே வேளை, படைத்தரப்பின் பதிவுகள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்வுகளின் போது மக்கள் நீண்ட நேரங்கள் வரிசைகளில் காத்திருந்து பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வன்னியில் மீண்டும் குண்டுச்சத்தங்கள்!

Control_Explosionவன்னிப் பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் குண்டுச்சத்தங்களின் அதிர்வுகளை பல சந்தர்ப்பங்களில் கேட்க முடிகிறது. இன்றும் (08-08-2010) கிளிநொச்சிப் பகுதிகளில் இச்சத்தங்களை கேட்க முடிந்தது. படையினரால் மீட்கப்படும் வெடிபொருட்கள் சில சமயங்களில் வெடிக்கவைக்கும் போது இச்சத்தங்களை  மக்களால் உணரமுடிகின்றது. எனினும் கடந்தகால போரின் கொடுமைகளில் சிக்கியிருந்த மக்கள் இவ்வாறான ஒலிகளை கேட்கும் போது அச்சமடைகின்றனர். போரின் நினைவுகள் அவர்கள் மனங்களில் மீண்டும் எதிரொலிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, யாழ்.குடாநாட்டிலுள்ள மக்கள் வன்னி நிலமைகள் தொடர்பாக பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். வன்னியில் சில இடங்களில் சண்டை நடைபெறுவதாகவும், விமானக்குண்டு வீச்சுக்கள் சில பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தங்களுக்குள்  வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் வன்னிப்பகுதிகளில் சில சமயங்களில் கேட்கும் வெடிகுண்டு சத்தங்கள் படையினரால் மீட்கப்படும் அல்லது, அவர்களால் செயலிழிக்கச் செய்யப்படும் குண்டுகளின் ஒலி என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்துடன் இனிமேல் எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொள்ளாது. – ஐக்கிய தேசியக் கட்சி

Praba_Ganesan_MPஎதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இனிமேல் அரசாங்கத்தில் இணைப்பதில்லை என்ற வாக்குறுதியை மீறி பிரபாகணேசன், திகாம்பரம் ஆகிய இருவரையும் நேற்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தமது அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டதால் ஐக்கிய தேசியக் கட்சியினர் சீற்றமடைந்துள்ளனர். ( ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட்ட பிரபா கணேசன், திகாம்பரம் ஆகியோர் ஆளும் கட்சியில் இணைந்தனர்!!! )

தமது கட்சிக்கும் அரசாங்கத்திற்குமிடையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இனிமேல் நடைபெற மாட்டாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா நேற்று நடாளுமன்றில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அரசமைப்புத் திருத்தம் தொடர்பான சநதிப்புகள் நடைபெற்று வந்தன. இதன் ஒரு கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்வது தொடர்பாக உரையாடிய போது இனிமேல் அவ்வாறு நடைபெறாது என ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதியை மீறி நேற்று ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான இருவரை ஜனாதிபதி அரசாங்கத்தில் சேர்த்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக இனிமேல் அரசாங்கத்துடன் எவ்விதப் பேச்சுக்களும் நடைபெற மாட்டாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

நடாளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூறும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை உருவாக்கவது, 17வது திருத்தச்சட்டம், தேர்தல் முறையை மாற்றுதல் என்பவை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அரசாங்கத்திற்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இதில் பல விடயங்களில் தமது ஆதரவை அரசிற்கு வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியும் தெரிவித்திருந்தது. இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்கும் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்றும் இடம்பெறவிருந்தது இச்சந்திப்பும்  நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு இன்னும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களே தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி மாணவன் படுகொலை வழக்கில் சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது!

சாகச்சேரி மாணவன் படுகொலை வழக்கில், சந்தேக நபரான சார்ள்சிற்கு நிபந்தனைகளுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது. சாகவச்சேரி மாணவன் கபிலநாத் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஈ.பி.டி.பியின் தென்மராட்சிக்குப் பொறுப்பாக இருந்த சாள்ஸ் என்றழைக்கப்படுகின்ற சூசைமுத்து அலெக்ஸாண்டர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் கடந்த புதன் கிழமை இவ்வழக்கு விசாரணைக்க எடுக்கப்பட்ட போது, பிணை வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் படியே இப்பிணை வழங்க முடியும் என சாவகச்சேரி நீதவான் அப்பிணை மனுக் கோரிக்கையை நிராகரிதிருந்தார். பின்னர், மேல் நீதி மன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டு மேல்நீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க நேற்று வியாழக்கிழமை சாவகச்சேரி நீதவான் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் சந்தேகநபரை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அகதி முகாம்களிலுள்ள மக்களுக்கு வெப்ப நோய்கள் பரவுகின்றன.

IDP_Campஅகதி முகாம்களிலுள்ள மக்கள் தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு ஆளாகி வருகின்றனர். வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து இன்னமும் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில் வவனியா, யாழ்;ப்பணம் அகிய பகுதிகளிலுள்ள முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தோல்நோய், அம்மைநோய், கண்நோய் முதலான நோய்த் தாக்கங்களுக்குள்ளாகியுள்ளனர்.

IDP_Campயாழ்.குடாநாட்டில் இராமாவில், மணற்காடு ஆகிய முகாம்களிலுள்ள வடமராட்சிக் கிழக்குப்பகதிகளைச் சேர்ந்த மக்களும் இந்நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

”வெற்றி எவ்.எம் வானொலி நிலையம் மீதான தாக்குதலில் அரசாங்கத்திற்கோ அதன் ஆதரவாளர்களுக்கோ தொடர்பில்லை” அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

rambukella.jpgவெற்றி எவ்.எம் வானொலி நிலையத்தின் மிதான தாக்குதலுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர் கெஹலியரம்புக்வெல தெரவித்துள்ளார். அரசாங்கத்தின் ஆதரவு குழுவொன்றே இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வர்த்தகப் போட்டிகள் காரணமாக எவரும் இதனைச் செய்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். வெற்றி எவ்.எம், சியத எவ்.எம் ஆகிய வானொலிகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுபவை அதனால் அரசாங்கமோ அதன் ஆதரவாளர்களோ இத்தாக்குதலை மேற்கொள்வில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட்ட பிரபா கணேசன், திகாம்பரம் ஆகியோர் ஆளும் கட்சியில் இணைந்தனர்!!!

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மனோ கணேசனின் சகோதரருமான பிரபா கணேசன் மற்றும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் ஆகியோர் August 04 2010 ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். இன்று காலை அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்டதுடன், August 04 2010  நாடாளுமன்றத்தில் அரசாங்க வரிசையிலும் அமர்ந்து கொண்டனர்.

பிரபா கணேசன் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார் என்ற செய்தியை முதலில் ஜனநாயக மக்கள் முன்னணி மறுத்த போதும், தற்போது இந்தியா சென்றிருக்கும் மனோ கணேசன் பிரபா கணேசனை கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியின் செயலாளர் ந.குமரகுருபரனுக்கு இது குறித்து தாம் அறிவித்துள்ளதாகவும், தெரிவித்துள்ளார். அத்துடன் பிரபா கணேசன் தமது முதுகில் குத்திவிட்டதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கியதேசிய கட்சியோடு இணைந்து போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.