விஸ்வா

விஸ்வா

செப்ரெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் விவசாயக் கண்காட்சி!

Agriculture_in_Jaffnaஎதிர்வரும் செப்ரெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘சுற்றப்பறச் சூழலுடன் நட்பான சந்தை அடிப்படையிலான விவசாயக் கண்காட்சி’ என்று இதற்குப்  பெயரிடப்பட்டுள்ளது. இதன் தொனிப்பொருளில் இக்கண்காட்சியை நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுற்றுப்புறச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் தொழில்நுட்பம் தொடர்பான ஆக்கத்திறன்களை விவசாயிகளும், பொதுமக்களும் அறிந்து கொள்ளக்கூடியதான கணிகாட்சியாக இது அமையும் என யாழ்ப்பாண விவசாயப் பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச குழுவினர் பூனகரிக்கு விஜயம்.

Namal_Rajaparksaபாராளுமன்ற உறுப்பினரும் ‘இளைஞர்களுக்கான நாளை’ என்ற அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் நேற்று (Aug 11 2010) பூனகரிப் பகுதிக்கு விஜயம் செய்தனர். பூனகரிப் பிதேசத்தின் காரைக்காய்தீவு மகாவித்தியாலயம், ஞானிமடம் அ.த.க பாடசாலை, நல்லூர் மகாவித்தியாலயம் உட்பட பூனகரி  கோட்ட பாடசாலைகளுக்கு இக்குழுவினர் விஜயம் செய்து அப்பாடசாலைகளின் குறைபாடுகள் மாணவர்களின் கல்விநிலை என்பனவற்றை ஆராய்ந்தனர்.

இதே வேளை, அப்பகுதி பொதுமக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்ததோடு அப்பிரதேச விவசாய நடவடிக்கைகளுக்கான உதவிகளை மேற்கொள்வது, பாடசாலைகளைப் புனரமைப்பது, கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது போன்ற மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகள எடுப்பதாகவும் இக்குழுவினர் உறுதியளித்தனர்.

இக்குழுவில் நாமல் ராஜபக்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என தமிழ் பயணிகளிடம் கொள்ளையிட்டு வந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

fort-railway-stationபுகையிரத்தில் பயணிகளிடம் கொள்ளையடித்து வந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என்று தங்களைக் கூறிக்கொண்டு, அதற்கான போலி அடையாள அட்டைகளையும் காண்பித்து, புகையிரத்தில் பயணம் செய்யும் தமிழ் மக்களை அச்சுறுத்தி, அவர்களிடமிருந்து பணம் நகைகளை இவர்கள் அபகரித்து வந்தள்ளனர்.

விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

fort-railway-stationபொலகாவல, மீரிகம, வெயங்கொட, ராகம மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் இவர்கள் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெயங்கொட, கட்டான ஆகிய பகுதிகளில் வைத்து இந்நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் பலவந்தமாக பாலியல் தொழில்களில் ஈடுபடுத்தப்படும் இலங்கை யுவதிகள்!

இலங்கையைச் சேர்ந்த பெண்கள் சிங்கப்பூரில் பாலியல் தொழில்களில் பலவந்தமாக ஈடுபடுத்தப்படுவதாகவும் இது தொடர்பாக குற்றப்புலனபய்வு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இலங்கையிலிருந்து நடன நிகழ்சிகளுக்கு என சிங்கப்பூருக்கு அழைத்துச்செல்லப்படும் யுவதிகளே இவவாறு பாலியல் தொழிலுக்குட்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பெண்களை ஏமாற்றி அழைத்துச் செல்லும் நபர்கள் பெருமளவு பணத்தை இதன் மூலம் சம்பாதிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நவடிக்கையில் பிரதான நபராக செயற்பட்ட ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related News:

பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

Police_Logoயாழ். குடா நாட்டில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புகளின் போது பல குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட 66 பேர் சிக்கியுள்ளதாக யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இவ்வாறான அதிரடி நடவடிக்கையின் போது, நூற்றுக்கும்  மேற்பட்டோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இனங்காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை வைத்திருந்தமை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள், ஆகியார் இவர்களில் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட அதிரடி நடவடிக்கைகள் யாழ்.குடாநாட்டிலும் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் இதன்மூலம் குற்றச்செயல்களை பெருமளவில் தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் வடபகுதி நடனக் கலைஞர்களுக்கு சென்னையில் குறுங்கால நடனப் பயிற்சி.

வடமாகாணத்திலுள்ள இளம் நடனக் கலைஞர்களுக்கு தென்னிந்தியாவில் குறுங்கால நடனப் பயிற்சி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடனப் பயிற்சி சென்னைப் பல்கலைக்கழகத்தில் மூன்று வாரங்கள் நடைபெறும் எனவும், இதற்காக 1.6 மில்லியன் ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மேற்கொண்டுள்ளார். வடக்கில் வளர்ந்து வரும் நடனக் கலைஞர்களை ஊக்குவிக்கவும், நடன நுட்பங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யவும் இப்பயிற்சி நடைபெறுவள்ளதாகவும், இதற்கென 16 ஆண், பெண் நடனக்கலைஞர்கள் வடக்கிலிருந்த தெரிவு செய்யப்பட்டுள்ளதாவும், விரைவில் அவர்கள் சென்னைக்குப் பயணமாகவுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம்பெண் வடமராட்சியில் மயங்கிய நிலையில் மீட்பு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை மீட்கப்பட்ட இவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துன்னாலை குடவத்தைப் பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பெண்ணின் கூக்குரல் கேட்டதாகவும் பயம் காரணமாக எவரும் அப்பகுதிக்குச் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றுக் காலை நெல்லியடிப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் இப்பெண் மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பெண் எதற்காக துன்னாலைப் பகுதிக்குச் சென்றார்? அவரை யாரும் கடத்திச் சென்றார்களா? என்பன குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். உயர் பாதுகாப்பு வலயங்களில் விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு யாழ். படைத்தலைமையிடம் யாழ். அரச அதிபர் கோரிக்கை!

Mahinda_Hathrusinge_Major_Genயாழ். உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள விவசாயக் காணிகளில் எதிர்வரும் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி cவிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பிரதான தொழிலாகவும், குடாநாட்டு பொருளதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழ்வது விவசாயம் ஆகும்.  போரின் காரணமாக மிக நீண்டகாலமாக யாழ்.குடாநாட்டில் விவசாயம் நலிவுற்றுள்ளது. தற்போது போர் முடிவுற்ற நிலையிலும் பல விவசாயக் காணிகள் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் சிக்கியிருக்கின்றன.

உயர்பாதுகாப்பு வலயத்தில் தங்களின் ஊர்களை இழந்தவர்கள் இன்னமும் அகதிகளாகவே அவல வாழ்க்கை வாழ்கின்றனர். போரின் பின் ஏனைய இடங்களில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் நிலையிலும் குறித்த மக்கள் மட்டுமே இன்னும் அகதிகளாக வாழ்கின்றனர். இந்த மக்களின் வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் வயற்காணிகளில் மக்கள் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அத்துடன் குடாநாட்டில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட இடங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவும் அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபரின் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகளைப் பரிசீலித்து விரைவில் நிறைவேற்றுவதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி ஹத்துருசிங்கா உறுதியளித்துள்ளார் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் பிச்சை எடுப்பவர்களின் தொகை அதிகரிப்பு!

யாழ்.குடாநாட்டில் பிச்சை எடுப்பவர்களின் தொகை திடீரென அதிகரித்துள்ளது. தெருக்களிலும் ஆலய சுற்றாடல்களிலும், பேருந்துகளிலும் இவர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர். தென்பகுதிகளிலிருந்தும் பிச்சைக்காரர்கள்; தற்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பலர் வன்னி யுத்தத்தில் ஏற்பட்ட காயங்ளைக் காட்டி பொதுமக்களிடம் பிச்சை கேட்கின்றமையiயும் அவதானிக்க முடிகின்றது.  முன்னர் யாழ். குடாநாட்டில் பிச்சை எடுப்பவர்கள் குறைவாகவே காணப்பட்டனர். தற்போது யுத்தம் முடிவடைந்து பாதைகள் திறக்கப்பட்ட பின்னர் இவர்களின் தொகை அதிகரித்துள்ளது.

யாழ். பேருந்து நிலையத்தில் பிச்சை எடுப்பவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கைகயில் ஈடுபட்டுள்ள போதும் பிச்சைக்காரர்களின் தொகை அதிகரித்துக்கொண்டே போகின்றமை குறிப்படத்தக்கது.

வடமராட்சிக் கிழக்கு மக்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர் என யாழ். அரச அதிபர் தெரிவிப்பு!

imalda.jpgவடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த மக்கள் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் பொது வடமாராட்சிக்கிழக்கு மக்களும் இடம்பெயர்ந்தனர். அவாகள் இன்னமும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படவில்லை. அவர்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி மக்களின் பிரச்சினைகளையும் அவர்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும் தான் உணர்ந்துள்ளதாகவும் அம்மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற அமைச்சிடம் ஏற்கனவே வடமாரட்சிக்கிழக்க மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.