எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘சுற்றப்பறச் சூழலுடன் நட்பான சந்தை அடிப்படையிலான விவசாயக் கண்காட்சி’ என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தொனிப்பொருளில் இக்கண்காட்சியை நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுற்றுப்புறச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் தொழில்நுட்பம் தொடர்பான ஆக்கத்திறன்களை விவசாயிகளும், பொதுமக்களும் அறிந்து கொள்ளக்கூடியதான கணிகாட்சியாக இது அமையும் என யாழ்ப்பாண விவசாயப் பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்துள்ளார்.