விஸ்வா

விஸ்வா

கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

rsambanthan.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மலைவர் இரா. சமப்நதன் சுகவீமுற்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வரம்நிலையில். நேற்று செவ்வாய் கிழமை இந்தியத்தூதுவர் அசோக் கே. குhந்தா வைத்திய சாலைக்குச் சென்று சம்பந்தினன் உடலநலம் குறித்து விசாரத்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இருதயக் கோளாறு காரணமாக தமிழ் நாட்டில் சிகிச்சை பெற்று வந்தார். மீண்டும் அவர்சிகிச்சைக்காக தமிழ் நாட்டுக்கு செல்லவேண்டிய வேளையில் திடீரென அவர் சுகவீனமற்ற நிலையில்  கொழும்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர் சம்பந்தன் மாதத்திற்கு பாராளுமன்றம் செல்லாதிருப்பதற்கான பிரேரனை செப்ரம்பர் 23ல் பாராளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்டு இருந்தது. வயதடைந்துள்ள இவர் அண்மையில் இந்தியாவில் சிகிச்சை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பந்தருடைய உடல்நிலை வலுஇழந்து செல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலுவும் இழந்து செல்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைமை மாவை சேனாதிராஜாவா சுரேஸ் பிரேமச்சந்திரனா என்ற போட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நெருக்கடியை உண்டு பண்ணியுள்ளது.

கடும் மழை காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் பாதிப்பு.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக இலங்கையில் நாடு முழுவதுமாக 55ஆயிரத்து 520 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 250 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தினால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களை தங்க வைப்பதற்காக நாடு முழுவதும் 22 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் தங்க வைத்து பராமரிப்பதற்கு சிரமமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் மாவட்டத்தில் அதிகளவு மக்கள் வீடுகளை இழந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். தெற்கிலும் மலையகப் பகுதிகளிலும் வெள்ளம், மற்றும் மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 20 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் மழையால் வீதிகள் சேதமடைந்துள்ளன. அங்கு அதிகளவு புகைமூட்டம் காணப்படுவதால் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலையும் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் தாழ்நிலங்களில் மழைவெள்ளம் தேங்கி நிற்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லமுடியவில்லை. வடக்கில் வன்னி மற்றும், யாழ்.குடாநாட்டில் கடும் மழை பெய்து வருகின்றது பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கின்றது. வன்னியில் தறப்பாள் கூடாரங்களில் தங்கியுள்ள மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இம்மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்காலநிலை டிசெம்பர் மாதம் இறுதிவரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காணாமற்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கு பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.

காணாமற் போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கான நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இதனடிப்படையில் பிரதேசசெயலகங்கள் ஊடாக பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.மேலதிக பதிவாளர் நாயகம் என். சதாசிவம் ஐயர் தெரிவித்துள்ளார்.

கடந்த போர்க்கால சம்பவங்களின் போது காணாமல்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்வதற்கு நடாளுமன்ற அங்கீகாரம் வழங்கியுள்ளது. அது சட்டநடைமுறைக்கு உட்படுத்தப்பட்டதும் அது தொடர்பான சுற்றுநிருபத்தை அரசு வெளியிடும். அதனைத் தொடர்ந்து விரைவில் காணாமல்போனவர்களை இறந்தவர்களாக பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகும். காணாமல் போனவர்களின் உறவினர்கள் பதிவுகளை மேற்கொள்வதற்கு முன்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து கொள்வது பொருத்தமானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

யாழ், முல்லை மாவட்டங்களில் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐம்பது கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

santira_sri.jpgயாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிருத்தித் திட்டங்களுக்கென ஐம்பது கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். இம்மாவட்டங்களில் தற்போதும் அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாவட்டங்களில் உள்ளூராட்சி நிர்வாகத்தை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இவ்விரு மாவட்டங்களிலும் 115 உள்ளூர் வீதிகள் 39 கோடி 30 இலட்சம் ரூபா செலவில் திருத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் முல்லை மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, பாண்டியன்குளம், துணுக்காய் மற்றும், கரைதுரைப்பற்று ஆகிய பிரதேச சபைக் கட்டடங்களும் இந்நிதி மூலம் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் இன்று கடமைகளைப் பொறுப்பெற்றார்.

புதிய நீதி அமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பதவியேற்றுள்ளார். இன்று திங்கள்கிழமை காலை அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலை செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சட்டமா அதிபர் மொஹான் பீரிசுக்கு தெரிவித்துள்ளதாகவும், இக்கைதிகளின் விடுதலை குறித்து பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

இன்று முதல் நீதிஅமைச்சு சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து பணியாற்றும் எனவும் அவர் கூறினார். நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வலிகாமம் வடக்கில் நேற்று 970 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன. டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டனர்.

வலிகாமம் வடக்கில் 970 குடும்பங்கள் நேற்று சனிக்கிழமை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு, வித்தகபுரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் அவர்கள் மீள்குடியமத்தப் பட்டுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று சனிக்கழமை காலை 8மணிக்கு மீள்குடியேற்ற நிகழ்வு இடம்பெறும் என குறித்த மக்களுக்கு அறிவிக்கப்பட்டதால் கொட்டும் மழையிலும் மக்கள் அந்நேரத்திற்கு கீரிமலைக்கு வந்தடைந்தனர். ஆனால், பிற்பகல் 2மணிக்கே மீள்குடியேற்ற நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு ஐயாயிரம் ரூபா பணமும், சிமெந்து பக்கற்றுக்கள், கூரைத்தகடுகள் என்பனவும் வழங்கப்பட்டன.

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டிற்குப் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இம்மீள்குடியேற்ற நிகழ்வில் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

970 குடும்பங்களைச் சேர்ந்த 3448 பேர் இவ்வாறு மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இந்நிகழ்வில் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா தமிழ் மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒன்றுபட்டு உழைப்பதற்கு தயாராகவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் திருடர்களால் தொல்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்ள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகள் கதவுகள், யன்னல்களற்ற நிலையில் காணபடுவதாலும் பல வீடுகள் முற்றாக சேதமடைந்து தற்காலிக வீடுகளில் மக்கள் தங்கியிருக்கும் நிலையிலும் திருடர்கள் இரவு நேரங்களில் அவர்களின் உடமைகளை திருடிச் செல்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதிகளில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்களின் வீடுகளில் அண்மைய நாட்களாக சைக்கில்கள். மோட்டார் சைக்கில்கள் உள்ளிட்ட அவர்களின் உடமைகள் பல திருடர்களால் களவாடிக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் திருப்தியளிப்பதாகவுள்ளது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் திருப்தியளிக்கவில்லை என அதில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடனான சந்திப்பு மிகவும் திருப்தியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியில் நேற்று யாழ்.பொது நூலகத்தின் முன்பாக நடைபெற்ற உழவு இயந்திரங்கள் கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உயைாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இப்பேச்சுவார்த்தையானது திருப்தியானதாகவும், நம்பிக்கை தருவதாகவும், முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாகவும் உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட அனைத்துக்கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார்.

இந்திய வெளியுறவு அமைச்சருடனான தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சந்திப்பு நடைபெறவில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடனான தமிழ்கட்சிகளின் அரங்கத்தின் சந்திப்பு நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இன்று இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை சந்திப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் கிருஸ்ணாவிற்கு நேரமின்மை காரணமாக இச்சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்கட்சிகளின் அரங்கத்தின் முக்கியஸ்தரும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைச்சர் கிருஸ்ணா இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை விஜயத்தை நிறைவு செய்து கொண்டு இந்தியா செல்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் இந்தியத் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.

Kirishna_SM_ExternalAffairsMinister_Indiaவட மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண மக்களுக்கும் தென்னிந்தியாவிலுள்ள மக்களுக்கும் உள்ள உறவு தொடர்பாக தெரியாவிட்டால் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவு பூரணமடையாது என யாழ்ப்பாணத்தில் வைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல நூற்றாண்டு காலமாக இந்தியாவின் வரலாறு கலாசாரம், சமயம், வர்த்தகம் போன்றவற்றுடன் தொடர்புபட்டே இருந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிப்பதற்கு இதுவே பொருத்தமான காரணம் எனவும் அவர் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை யாழப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இந்திய அரசின் உதவியுடனான நூறு உழவு இயந்திரங்களையும் வழங்கி வைத்தார்.

._._._._._.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் இன்று திறப்பு- 27 Nov 2010

MR&SM_Kirishnanஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கிறார். இன்று காலை யாழ்ப்பாணம் செல்லும் அவர், விவசாயிகளுக்கு 500 டிராக்டர் வண்டிகளைக் கையளிப்பதுடன், யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் துணைத் தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார்.

அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற் கட்டமான 1,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அரியாலையில் அங்குரார்ப்பணம் செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி செல்லும் இந்திய வெளிவிவகார வட பகுதிக்கான புகையிரதப் பாதை அமைக்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமைக்கப்படவுள்ளன. மதவாச்சியிலிருந்து மடு வரையும், மடுவிலிருந்து தலை மன்னார் வரையிலும், ஓமந்தையிலிருந்து பளை வரையிலுமாக அமைக்கப்படவுள்ளன.