சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அபார வெற்றி

cricket1.jpgபங்களா தேஷ் கிரிக்கெட் அணி மே.தீவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரு கிறது. 2 டெஸ்டிலும் வென்று பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதிய முதல் நாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. “நாணயச் சுழற்சியில் வென்ற மே. தீவு முதலில் பங்களாதேஷை “பேட்டிங்” செய்ய அழைத்தது.

பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 246 ஓட்ட ங்கள் எடுத்தது.  முகம்மது அஸ்ரப் 57 ஓட்டமும், தற்காலிக கப்டன் சகிப் அல்-ஹசன் 54 ஓட்டமும் மகமதுல்லா 42 ஓட்டமும் எடுத்தனர். ரோச் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய மே.தீவு அப்துல் ரசாக்கின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 43.4 ஓவரில் 194 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி பெற்றது. மே.தீவில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

மே.தீவு அணியில் சுமித் அதிகபட்சமாக 65 ஓட்டம் எடுத்தார். அப்துல் ரசாக் 39 ஓட்டம் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அவரே ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.இந்த வெற்றி மூலம் 3 போட்டித் தொடரில் பங்களாதேஷ் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2 வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

பஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதி பிரதமர் நாளை இலங்கை வருகை

kalifa-shik-binsalman.jpgபஹ்ரேன் பிரதமர் மற்றும் பிரதிப் பிரதமர் ஆகியோர் நாளை இலங்கை வருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். இவர்களது வருகையையொட்டி கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசேட வரவேற்பு ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

பஹ்ரேன் பிரதமர் செய்க் கலீபா பின்சல்மான் அல்கலிபா எதிர்வரும் 29ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அன்றைய தினம் பல இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை வரும் பஹ்ரேன் பிரதிப் பிரதமர் செய்க் மொஹமட் பின் முபாரக் அல்கலிபா வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து பேச்சு நடத்துவார். இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளன.

ஐ.சி.சி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் சங்கக்கார முதலிடம்

srilanka-cri.jpgசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் துடுப்பாட்டு வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். கொழும்பில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் 130 ஓட்டங்கள் குவித்து அணியை காப்பாற்றியதன் மூலம் 3 வது இடத்தில் இருந்த அவர் முதலாம் இடத் துக்கு முன்னேறி இருக்கிறார். சங்கக்கார ஏற்கனவே 2007ம் ஆண்டு இறுதியிலும், 2008ம் ஆண்டிலும் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

10 நாட்கள் முதலிட அரியணையில் உட்கார்ந்திருந்த இந்திய வீரர் கெளதம் கம்பீர் 2வது இடத்துக்கு இறங்கி உள்ளார். கொழும்பு டெஸ்டில் மொத்தம் 21 ஓட் டங்கள் (2, 10) மட்டுமே எடுத்த பாகிஸ் தான் அணித் தலைவர் யூனிஸ்கானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. 2வது இடத்தில் இருந்த அவர் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்திய வீரர்களில் தெண்டுல்கர் 15வது இடத்திலும், வி. வி. எஸ். லட்சுமண் 17வது இடத்திலும் ஷேவாக் 19வது இடத்திலும் உள்ளனர்.

தரவரிசையில் முதல் 10 இடங்கள் வகிக்கும் வீரர்கள் விவரம் வருமாறு:-

வரிசை வீரர் நாடு புள்ளி
1 சங்கக்கார இலங்கை 862
2 கம்பீர் இந்தியா 847
3 சந்தர்பால் மேற்கிந்தியா 821
4 முகமது யூசுப் பாகிஸ்தான் 818
5 மைக்கேல் கிளார்க் அவுஸ்திரேலியா 802
6 யூனிஸ்கான் பாகிஸ்தான் 801
7 பொண்டிங் அவுஸ்திரேலியா 790
8 சுமித் தென்ஆபிரிக்கா 782
9 ஜெயவர்த்தன இலங்கை 777
10 கல்லீஸ் தென்ஆபிரிக்கா 755

வவுனியா நகர சபைத் தேர்தல் – மு.கா வேட்பாளர்கள் நால்வர் அ.இ.மு.காவில் நேற்று இணைவு

வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் மு. கா வேட்பாளர்களான நால்வர் நேற்று அகில இலங்கை முஸ் லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டு, ஐ. ம. சு. முவின் வெற்றிக்காக உழை க்கப்போவதாக பகிரங்கமாக அறிவித்தனர்.

ஏ. முஸாதிர், எஸ். எம். அபுல்கலாம், இல்முதீன் தஸ்மீம், எஸ். அஜ்மயின் ஆகிய வேட்பாளர்களே இணைந்து கொண்டவர்களாகும். வவுனியா பட்டானிச்சூரில் இடம்பெ ற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே இந்நால்வரும் இணைந்துகொண்டனர். அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், அமீர்அலி, பிரதியமைச்சர் ஹுசைன் பைலா ஆகியோர் முன்னிலையிலேயே இவர்கள் இணைந்துகொண்டனர்.

பேருவளை கோஷ்டி மோதலில் மூவர் பலி நிலைமை கட்டுப்பாட்டில்; பலத்த பாதுகாப்பு

beruwela.jpgபேருவளை மஹகொடை பகுதியில் இரு முஸ்லிம் கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதல் நிலை தற்போது தணிந்து அமைதி நிலவுகிறது.

இரு கோஷ்டிகளுக்கிடையே நேற்று அதிகாலை 1.30 அளவில் ஏற்பட்ட மோதலில் மூவர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனரென பொலிஸார் தெரிவித்தனர். ஆயினும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு அமைதி நிலவுவதாகவும் பொலிஸார் கூறினர். இப் பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றது. வழமை போல் மக்கள் இப்பகுதிகளில் நடமாடுவதைக் காணக் கூடியதாக இருந்தது.

பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியா, தீவைத்து கொளுத்தப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினரும், இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அமைதியைப் பேணுமாறு இரு குழுக்களிடையேயும் முக்கிய பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பள்ளிவாசல் வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. பேருவளை பொலிஸார் மேலதிக புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

“டெஸ்டின் பெருமையை பாதுகாக்க போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்’

cricket1.jpg“டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியமும் பெருமையும் பாதுகாக்கப்பட போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்’ என்கிறார் அன்ட்ரூ பிளிண்டொப். இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் அன்ட்ரூ பிளிண்டொப். தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் ஆஷஸ் தொடருக்குப் பின் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாதுகாப்பது பற்றி பிளிண்டொப் கூறியதாவது;

கடந்த சில ஆண்டுகளாக மக்களின் மனநிலை மாறிவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். “ருவென்ரி20′ கிரிக்கெட் போட்டிகளின் அசுர வளர்ச்சி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

இன்றைய உலகில் சிறிய குழந்தைகளிடம் எவ்வகைப் போட்டிகள் பிடிக்கும் என்று கேட்டால், “கவர்ச்சியும் உற்சாகமும் நிறைந்த “ருவென்ரி20′ போட்டிகள் தான் பிடிக்கும்’ என்று பதில் வருகிறது. இனிவரும் காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் அர்ப்பணிப்புடன் விளையாட வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவது பற்றி எந்த வருத்தமும் எனக்கில்லை. லோர்ட்ஸில் நடந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டுக்குப் பின் இது இம்மைதானத்தில் எனக்கு கடைசி போட்டி என்பதை உணர்ந்தேன். அமர்ந்து மைதானத்தைச் சுற்றிப்பார்த்து எனக்குள்ளாக மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும், எட்பாஸ்டனில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறேன். அப்போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்பதே இப்போதைக்கு எனது கவலை என்றும் பிளிண்டொப் கூறினார்.

“டெஸ்ட் கிரிக்கெட் தனித்துவமானது அது இன்னும் மவுசை இழக்கவில்லை’

cricket1.jpgடெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுசை இழக்கவில்லையென இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.  சமீபகாலமாக ரி20 போட்டி ரசிகர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் பாரம்பரியம் மிக்க டெஸ்ட் போட்டி மெல்ல மறைந்துகொண்டிருக்கிறது என்ற விமர்சகர்களின் கருத்தை கங்குலி மறுத்தார்.

சர்வதேச கிரிக்கெட் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள லண்டன் வந்த கங்குலி நிரூபர்களிடம் கூறியதாவது;

டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு தனித்துவம் வாய்ந்தது.அதன் முக்கியத்துவம் நீடிக்க வேண்டுமென்பதற்காகவே டெஸ்ட் போட்டியுடன் மற்ற போட்டிகளும் இருக்கும்.கிரிக்கெட் விளையாட்டின் மூலவடிவமே டெஸ்ட் போட்டிகள்தான்.முன்னாள் வீரர்கள் பலர் அதில் சிறப்பு பெற்றுள்ளனர்.அதன் முக்கியத்துவத்தை யாரும் எப்போதும் மறக்கமுடியாது.

இந்தியாவைப் பொறுத்தவரை மகேந்திரசிங் தோனி தலைமையிலான அணி சமீபகாலமாகவே சிறப்பாக விளையாடி வருகிறது.கடந்த 2 ஆண்டுகளிலோ அல்லது அதற்கு முன்னரோ வெளிக்காட்டிய ஆட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பார்களேயானால் விரைவில் உலகில் முதல் அணியாக இந்தியா திகழும் என்றார் கங்குலி.

டெஸ்டிலிருந்து ஓய்வுபெற்ற வாஸுக்கு ஒருநாள் அணியில் இடமில்லை

chaminda-vass.jpgபாகிஸ் தானுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அனுபவ வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸுக்கு இடம் கிடைக்கவில்லை. எனினும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மாலிங்க பண்டார ஆகியோருக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது. அத்துடன் காயத்தினால் அவதிப்பட்டு வந்த முத்தையா முரளிதரன் மற்றும் லசித் மாலிங்க ஆகியோரும் 15 பேர் கொண்ட அணியில் இணைக்கப்பட்டனர்.

இதில் காயத்துக்கு உள்ளாகியுள்ள அதிரடி ஆட்டக்காரர் டி.எம்.டில்ஷான் சேர்க்கப்படவில்லை. பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக உபுல் தரங்க மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று முடிவடைந்த பாகிஸ்தானுடனான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற 35 வயதான சமிந்த வாஸ் வரும் 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டி வரை இலங்கை அணிக்காக ஒருநாள் மற்றும் இருபது20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

எனினும் அவருக்கு தொடர்ந்து இலங்கை ஒருநாள் அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. வாஸ். எஸ்.எஸ்.சி. டெஸ்டில் ஒரு விக்கெட்டை மாத்திரமே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதில் 32 வயதான திலன் சமரவீர இலங்கை ஒருநாள் அணியில் இணைக்கப்படுவது நான்கு ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். அவர் கடைசியாக 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதேபேõன்று சுழற்பந்து வீச்சாளர் மாலிங்க பண்டார அணிக்கு திரும்புவது இரண்டு ஆண்டுகளின் பின்னராகும்.

இது தவிர, ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் சகலதுறை ஆட்டக்காரர் பார்வீஸ் மஹ்ரூபிற்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைபாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் தம்புள்ளையில் வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

அணி விபரம்

சங்கக்கார (தலைவர்/வி.கா), முத்தையா முரளிதரன், சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன, திலான் சமரவீர, சாமர கபுகெதர, அன்ஜலோ மத்தியூஸ், நுவன் குலசேகர, லசித் மாலிங்க, அஜந்த மெண்டிஸ், திலின கண்டம்பி, மாலிங்க பண்டார, திலான் துஷார, இஸுரு உதான, உபுல் தரங்க.

பேருவளையில் முஸ்லிம் குழுக்களிடையே கலவரம் : இருவர் பலி; 9 பேர் காயம்

beruwela.jpgபேருவளை பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் முஸ்லிம் சமூக குழுக்களுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 9 பேர் வரை காயமடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

பள்ளிவாசலும் தீயிடப்பட்டதாகவும், இதையடுத்து, தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கை அணி தொடர் வெற்றி – ஆட்டநாயகன் சங்கக்கார; தொடர்நாயகன் நுவன் குலசேகர

srilanka-cri.jpgஇலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் தொடர் வெற்றியைக் கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றி தேல்வியின்றி முடிவடைந்தது. இலங்கை அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்து 391 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போட்டியை இடைநிறுத்திக் கொண்டது.

இதுவரை எந்த அணியும் 4 வது நாளில் 492 ஓட்டங்களைச் சேர்த்து வென்றதாக சரித்திரம் இல்லை. இதற்கு முன்னர் 7 விக்கெட்டுக்கு 418 ஓட்டங்களைச் சேர்த்து வெற்றி பெற்றதே சாதனை இருந்து வருகிறது அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2003ல் மேற்கிந்தித் தீவுகள் அந்தச் சிறப்பைப் பெற்றது.

இலங்கை, பாகிஸ்தானுக்கிடையிலான ஒரு நாள் போட்டி எதிர்வரும் 30ம் திகதி தம்புள்ளையில் நடைபெறும்.

PAKISTAN
1ST INNINGS: 299
SRI LANKA
1ST INNINGS: 233
PAKISTAN
2ND INNINGS:
425-9 decl
SRI LANKA
2ND INNINGS

T. Paranavitana c Alam b Malik   73
M. Warnapura c Malik b Kaneria   31
K. Sangakkara not out   130
M. Jayawardene c Akmal b Kaneria   2
T. Samaraweera c Akmal b Ajmal   73
A. Mathews not out    64
Extras: (b1, lb7, nb9, w1)   18
Total (for 4 wkts, 134 overs)  391
To bat: Tillakaratne Dilshan, Rangana Herath, Chaminda Vaas, Thilan Thushara, Nuwan Kulasekera.
Fall of wickets: 1-83 (Warnapura), 2-139 (Paranavitana), 3-155 (Jayawardene), 4-277 (Samaraweera).
Bowling: Gul 12-0-65-0 (nb5), Aamer 21-5-46-0 (nb1), Younus 8-0-25-0 (w1),
Ajmal 43-9-95-1, Malik 14-1-38-1 (nb3), Kaneria 36-3-114-2.