முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் இந்திராதேவி என்ற யுவதி கடந்த மாதம் 18 ஆம் திகதி பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஸ்ரீலங்கா – பாகிஸ்தான் சவேட் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம் இல்லாமல் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருந்தார்.
தந்தையை இழந்த நிலையில் சாதித்த குறித்த யுவதியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி கௌரவித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் (11) குறித்த யுவதியை ஜனாதிபதி கௌரவித்தோடு அவருக்கு நினைவு பரிசினையும் வழங்கி கௌரவித்துள்ளனர்.
வவுனியா பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து யுவதி ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவால் கௌரவிக்கப்பட்டுள்ளதோடு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அண்மையில் இந்துகாதேவியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேரில் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.