வெள்ளத்தில் மூழ்கியது நுவரெலியா!
நுவரெலியாவில் இன்று ஏப்ரல் 28 ஆம் திகதி பெய்த பலத்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக நுவரெலியாவில் அதிகமான தாழ்நிலப் பகுதிகள் முற்றாக மூழ்கியுள்ளன.
சில பிரதான வீதிகளில் மழை நீர் நிரம்பியுள்ளதுடன், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்துக்கு முன்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அத்தோடு, தோட்டங்களை அண்டிய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
