வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

தமிழ் மக்கள் எம் பக்கம்” – தமிழ் தலைவர்களுக்கு கடுப்பேத்துகின்றார் வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத்

தமிழ் மக்கள் எம் பக்கம்” – தமிழ் தலைவர்களுக்கு கடுப்பேத்துகின்றார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

‘தமிழ் மக்கள், நாடாளுமன்ற தேர்தலில் திசைகாட்டியை தெரிவு செய்து அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கும் எமக்கே ஆதரவு வழங்குவார்கள் ஆகவே தமிழ் கட்சிகள் காணும் கனவு பலிக்காது. தமிழர்களை எம்மிடம் இருந்து பிரிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘தமிழ் மக்களுக்குத் தெரியும் தேசிய மக்கள் சக்தி நல்லதொரு திசையைக் காட்டுகின்றது’ என்றும் அவர்கள் ‘சொன்னதையே செய்வார்கள்’ என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மேலும் ‘வடக்கு தமிழ்க் கட்சியினர் எம்மை விமர்சனம் செய்வதால் தமிழ் மக்களின் ஆதரவை எம்மிடம் இருந்து பிரிக்க முடியாது’ எனவும் ‘மக்களின் அரசியல் பொருளாதார கோரிக்கைகள் எம்மால் நிறைவேற்றப்படும்’ எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கருத்து தெரிவிதுள்ளார்.

வடக்கு கிழக்கில் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரத்தை தாங்க முடியாது தமிழ் தேசியக் கட்சிகள் தலைவெட்டப்பட்ட கோழிகள் போல் திக்குத் திசை தெரியாமல் ஓடித்திரிந்து உள்ளடக்கமற்ற உளறல்களை வெளியிடுகின்றனர். உள்ளுராட்சி சபைகளுடன் தொடர்பற்ற விடயங்களைப் பேசி மக்களை இனவாத உசுப்பேத்தலுக்குள் தள்ள எண்ணுகின்றினர்.

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் ஜேவிபி மன்னாரில் வென்றால் மன்னார் பறிபோய்விடும் என்கிறார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மனிதப்புதைகுழிகள் பற்றிப் பேசுகின்றார். ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளுராட்சித் தேர்தலுக்கு பிரதமர் ஏன் யாழ்ப்பாணம் வருகின்றார், ஜனாதிபதி ஏன் யாழ்ப்பாணம் வருகின்றார் என்று கேள்வி எழுப்புகின்றார். தமிழரசுக் கட்சியும் தன் பங்கிற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோருகின்றது. எல்லா தமிழ் கட்சிகளுமே, தேசிய மக்கள் சக்தி தேர்தல் இடம்பெற்று இவ்வளவு காலமாகியும் தேசிய மக்கள் சக்தி ஒரு ஆணியையும் புடுங்கவில்லை எனக் கோரஸ் போடுகின்றனர்.

ஆனால் தாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளுராட்சி சபையை, மாகாணசபையை, பாராளுமன்ற ஆசனத்தை தந்த மக்களுக்கு எந்த ஆணியைப் புடுங்கினார்கள் என்பதைச் சொல்லவில்லை. இனிமேலாவது உள்ளுராட்சி சபையில் எந்த ஆணியைப் புடுங்கபோகிறார்கள் என்பதையும் சொல்லவில்லை.

ஆனால் தமிழ் மக்கள் ஏதோ ஜேவிபியும் என்பிபியும் வெவ்வேறு என்று தவறாக நினைப்பதாக தமிழ் கட்சிகள் முட்டாள்தனமாக நம்புகின்றனர். தமிழ் மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும் என்பிபி இன் மீது ஏறியிருந்து சவாரி செய்வது தமிழ் மக்களுக்குத் தெரியும். கடிவாளம் ஜேவிபியின் கையில் இருப்பதை நன்கு தெரிந்து தான் தமிழ் மக்கள் ஜேவிபிக்கு வாக்களிக்கின்றனர். இது தெரியாமல் சுரேஸ் பிரேமச்சந்திரன் தான் இதை முதன்முதலில் கண்டு பிடித்து புட்டு புட்டு வைப்பதாக கதைசொல்கின்றார். ஈபிஆர்எல்எவ் போல் சில கட்சிகளுக்கு இது தான் கடைசித் தேர்தலாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில் ஜேவிபி மட்டுமே உள்ளுராட்சி சபையில் அவ்வவ் பிரதேசங்களுக்கு என்ன செய்வோம் என்பதை மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றனர். யாழ் மாவட்ட மாநாகர முதல்வருக்கான வேட்பாளராக விரிவுரையாளர் கபிலனை அறிவித்து தங்களது வேலைத்திட்டங்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஏனைய கட்சிகளுக்கு மாநகர முதல்வருக்கான வேட்பாளரை அறிவிக்க முடியாமல் உள்ளனர்.

59 இலங்கையர், ரஷ்ய இராணுவத்தில் உயிரிழப்பு! இன்னமும் 500 பேர் யுத்தத்தில் !

59 இலங்கையர், ரஷ்ய இராணுவத்தில் உயிரிழப்பு! இன்னமும் 500 பேர் யுத்தத்தில் !

 

ஜனவரி 20ஆம் திகதி வரையில் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளனர். அவர்களில் 59 பேர் உக்ரைன் போர்முனையில் கொல்லப்பட்டுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் நேற்றுத் தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட இலங்கையர்களின் நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டமை தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் நாட்டிலுள்ள உறவினர்களுடன் அவர்கள் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்தவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் இராணுவ வீரர்கள் எனவும் அவர்கள் அதிக சம்பளம் தரப்படும் எனக் கூறி இணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய கூலிப்படை நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு முகவர்களாக செயல்பட்டதற்காக ஓய்வுபெற்ற இரண்டு ஜெனரல்கள் மற்றும் ஆறு பேரை இலங்கை பொலிசார் கடந்த ஆண்டு கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இஸ்ரேல் இராணுவத்திலும் இலங்கை இந்திய முன்னாள் இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். தனியார் மயமாக்கலின் மற்றுமொருகட்டமாக இராணுவத்தை வெளியேயிருந்து எடுக்கும் நவகாலனித்துவச் சிந்தனை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க உள்ளது. மேற்கு நாடுகள் தங்கள் நலனுக்காக தங்களுடைய படைகளை இறக்காமல் கூலிப்படைகளைக் களமிறக்கி யுத்தத்தை நடாத்தும் கைங்கரியம் வரும்காலங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பயிற்றப்பட்ட இந்தக் கூலிப் படைகள் நாட்டிற்குத் திரும்பி வருகின்ற போது அவர்கள் வன்முறையாளர்களாகவும் சர்வதேசத்தின் புலனாய்வு முகவர்களாகவும் சொந்த நாட்டிற்கு எதிராக சதி செய்பவர்களாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. இவை பற்றிய சட்டமூலங்கள் இயற்றப்படுவதுடன் இவர்கள் பற்றிய விபரங்களையும் அரசு உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோக மையமாக இலங்கை – அமைச்சர் விஜித ஹேரத் !

உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோக மையமாக இலங்கை – அமைச்சர் விஜித ஹேரத் !

உலக நாடுகளுக்கு எரிபொருளினை விநியோகிக்கின்ற மையமாக இலங்கை மாற்றமடையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போதுஇ ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் சீனாவின் சினோபெக் நிறுவனம் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. இதன்மூலம் உள்ளுர் சந்தைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும். இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எந்த நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறித்து சினோபெக் நிறுவனமே இறுதி முடிவுகளை எடுக்கும் என தெரிவித்தார்.

சிங்கப்பூர் எந்தவொரு எரிபொருளையும் உற்பத்தி செய்யாத ஒரு நாடாக உள்ளது. எனினும்இ அந்த நாடு இன்று உலகின் பல நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒரு மையமாகச் செயற்படுகிறது என குறிப்பிட்ட விஜித ஹேரத்இ எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையும் அவ்வாறானதொரு எரிபொருள் மையமாக மாற்றமடையும் என்றார்.

2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க அரசாங்கம் திட்டம் !

அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் சுற்றுலாத் துறையின் தரத்தை அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கை இலங்கை அடைந்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

“சுற்றுலா துறையில் தரத்தை அதிகரிக்க வேண்டும். சுற்றுலாத்துறை தரத்தை அதிகரிப்பதன் மூலம் உயர்தர சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க முடியும். சுற்றுலா என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, இது நமது வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது.” அவர் கூறினார்.

சுற்றுலா விசாவில் வரும் சில சுற்றுலாப் பயணிகள் நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்த அமைச்சர், சுற்றுலாத் துறையில் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றார்.

இலங்கையின் எரிசக்தி துறையில் ஏகோபித்த உரிமையை பெறுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், உறுதியான திகதி உள்ளிட்ட விடயங்கள் இதுவரையில் இறுதிப்படுத்தப்பட வில்லை. எவ்வாறாயினும், இலங்கையின் பார்வையில் ஜனாதிபதியின் இந்திய விஜயம் மிகவும் முக்கியமானதாகும்.

இதற்கு பிரதான காரணம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டெல்லி விஜயத்தை ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

இலங்கை – இந்திய இணைப்புத் திட்டங்களை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து இருதரப்பு பேச்சுக்களில் முக்கிய விடயமாக கருதப்படும்.

குறிப்பாக, ரணிலின் காலத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் ஒப்பந்தம், திருமலை பொருளாதார வலயத் திட்டம், மன்னாரில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் பணியை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கியமை உட்பட கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி திட்டமும் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் இந்த ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்திருந்தார்.

மேலும் இலங்கையின் எரிசக்தி துறையில் ஏகோபித்த உரிமையை பெறுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னர் இவ்வாறான அறிவிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையானது இருதரப்பு பேச்சுக்களில் இந்திய முதலீடுகள் தொடர்பில் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் விடயங்களாக இருக்கும்.

மறுபுறம், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை இந்தியா கடந்த காலத்திலிருந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு இந்தியாவுக்கு எரிச்சல் ஊட்டும் விடயமாகவே உள்ளது.

இதனாலேயே, இலங்கையுடன் சீனா நெருக்கமாகச் செயற்படுவதற்கும், சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைவதற்கு சீனா அனுமதிப்பதற்கும் இந்தியா எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

2015ஆம் ஆண்டிலிருந்து இந்தியா பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இத்தகைய எதிர்ப்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும், சில சந்தர்ப்பங்களில் ஆட்சி மாற்றங்களுக்கு கூட இந்த எதிர்ப்புகள் வழிவகுத்தன.

இதனாலேயே இந்த டிசம்பர் மாதம் வரை சீனக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

எனவே, ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது, சீன விவகாரம் மற்றும் இருதரப்பு இணைப்பு திட்டங்களின் எதிர்காலம் போன்ற தலைப்புகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

அதே போன்று சீன – இந்திய நெருக்கடிகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீண்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.