ரோஹிங்யா அகதிகள்

ரோஹிங்யா அகதிகள்

ரோஹிங்கியா அகதிகளை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் – ஐ.நா நம்பிக்கை !

ரோஹிங்கியா அகதிகளை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் – ஐ.நா நம்பிக்கை !

அகதிகளாக வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் என்று நம்புகிறோம் என ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ப்ரான்ச் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ப்ரான்ச் மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர ஆகியோருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாக்கும் விதம் குறித்து பாராட்டுக்களை தெரிவித்தார்.

அந்த மக்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பாமல் பாதுகாப்பான ஒரு நாட்டில் தங்க வைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை அவதானம் செலுத்தியுள்ளதாக கூறிய ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே, அதுவரை ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் என்று நம்புகின்றோம் என தெரிவித்தார்

ரோஹிங்கியா அகதிகள் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து முல்லையில் போராட்டம் !

ரோஹிங்கியா அகதிகள் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து முல்லையில் போராட்டம் !

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

 

போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர், முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அந்த மாவட்டத்தின் சிவில் நிர்வாக கண்காணிப்பு இன்றி தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இராணுவ மயமாக்கல் சூழலுக்குள் அகதிகளை தங்கவைப்பது சர்வதேச மனிதாபிமான நியமங்களுக்கும் அடிப்படை மனிதாபிமான விழுமியங்களுக்கும் மாறானதாகும்.

 

எனவே இந்த அகதிகளை மீரியானவில் உள்ள அகதிகள் மையத்திற்கு அல்லது வேறொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதுடன் அப்பிரதேச சிவில் நிர்வாக கண்காணிப்புக்குள் அவர்களை கொண்டுவரவேண்டும். இலங்கை என்பது ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு எனும் வகையில் இலங்கை சர்வதேச அகதிகளின் புகலிட மையமாக மாறுவதை நாம் விரும்பவில்லை. தற்போதுள்ள அகதிகளை சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு அமைய நடத்தவேண்டும் என்பதையே அரசாங்கத்திடம் வேண்டுகின்றோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.