பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதி மற்றும் உதவி கொறடாக்களாக ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதி கொறடாகவாக பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் ஜயந்த கெடகொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஆளும் கட்சியின் உதவி கொறடாக்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்மகுமார, மொஹமட் முஸ்ஸமில் மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த பதவிகளுக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் ஜயந்த கெடகொட ஆகியோர் ஆளும் கட்சியின் பிரதம கொறாடாவான அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பாராளுமன்றம்
பாராளுமன்றம்
இலங்கையினுடைய 9 ஆவது பாராளுமன்ற பொதுத்தேர்தல் நாளைய தினம் நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குச்சாவடிகளில் கிருமி நீக்கம் செய்தல் , வாக்குப்பெட்டிகளை தேர்தல் மையங்களுக்கு கொண்டு செல்லல் என அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடைபெற்றுக்கோண்டிருக்கின்ற நிலையில் புதிய அறிவித்தல் ஒன்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள ஒன்பதாவதுவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெறும் என குறி்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறப்பு வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

