தற்கொலைகள்

தற்கொலைகள்

பல்கலைகழக தமிழ் மாணவர்களிடையே மலிந்து போகும் தற்கொலைகள் – கிளிநொச்சியில் மீண்டும் ஒரு பல்கலைகழக மாணவி தற்கொலை !

கிளிநொச்சி, கோனாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கிளிநொச்சி கோனாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியுமான வசந்தகுமார் டீலக்சியா என்பவரே தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் வீட்டில் தூக்கிட்டிருந்த நிலையில்  சகோதரனால் மீட்கப்பட்டு கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து, குறித்த சடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழர் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களிடையே தற்கொலைகள் மலிந்து போய் காணப்படுவதுடன் இதன் நீட்சியால்  கல்விகற்ற இளைஞர் தலைமுறை ஒன்றை நாம் இழந்துகொண்டிருக்கின்ற ஒரு துர்ப்பாக்கியமான சூழலும் உருவாகியுள்ளது. கடந்த ஜுலை 30 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக பட்டதாரி மாணவி ஒருவர் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்திருந்தார். அது போல ஜுன் மாதம் தென் இலங்கை பல்கலைக்கழகங்களில் கற்ற இரண்டு யாழ்ப்பாண மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தனர். இதேவேளை கடந்தமாதம் (ஆகஸ்ட்) கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த சந்திரமோகன் தேனுஜன் (22) என்ற பல்கலைகழக மாணவன் தற்கொலைசெய்து இறந்திருந்த நிலையில் இன்று இந்த தற்கொலை பதிவாகியுள்ளது.

இலங்கையில் அதிகரித்துள்ள தற்கொலைகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ள இலங்கை மனநல விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் குறிப்பிட்ட போது,

கடந்த 3 வருடங்களில் மாத்திரம் 9,700  தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்தில் மாத்திரம் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை அதற்கு முன்னைய வருத்துடன் ஒப்பிடும் போது 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

மேலும் தற்கொலை செய்துகொண்டவர்களில் நூற்றுக்கு 83 வீதமான ஆண்களும், 17 வீதமான பெண்களும் உள்ளடங்குகின்றனர். தற்கொலை செய்துகொண்டவர்கள்  கல்வி கற்ற தரப்பினர் என்பதுடன்  உயிரிழந்தவர்களில் 40 வீதமானவர்கள் சாதாரண தரத்தில் சித்தி அடைந்து உயர்தரத்தில் கல்வி கற்றவர்களாவர்.

இதேவேளை தற்கொலை செய்து கொண்டவர்களில் 22 வீதம் பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் 35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் எகிறும் தற்கொலைகள் – தற்கொலை செய்யும் 83 வீதமானோர் ஆண்களே..! நாளொன்றுக்கு 9 தற்கொலைகள்!

இலங்கையில் 4 மணித்தியாலத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை செய்துகொள்வதாக பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

 

இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் 40 வீதமானோர் கல்வி கற்றவர்கள் எனவும் அவர்களுள் 22 பேர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் எனவும் குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்வோர் தொடர்பான செய்திகள் அண்மை நாட்களில் அதிகளவில் பதிவாகியுள்ளது.

 

தனிநபர்கள் தற்கொலை செய்து கொள்வதுடன் சில சந்தர்ப்பங்களில் குடும்பமாகவும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.  இந்நிலையில் இது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின் போது தற்கொலை செய்துக்கொள்வோரின் எண்ணிக்கை தற்போது சடுதியாக அதிகரித்து வருகின்றமை வெளிக்கொணரபட்டுள்ளது.

 

நாட்டில் தற்கொலை செய்துக்கொள்ளும் தரப்பினரின் எண்ணிக்கை வருடமொன்றுக்கு 10 வீதத்தால் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் வருடமொன்றுக்கு 3000 இற்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்வதாகவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 

கடந்த 3 வருடங்களில் மாத்திரம் 9,700 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்தில் மாத்திரம் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை அதற்கு முன்னைய வருத்துடன் ஒப்பிடும் போது 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

 

மேலும் தற்கொலை செய்துகொண்டவர்களில் நூற்றுக்கு 83 வீதமான ஆண்களும், 17 வீதமான பெண்களும் உள்ளடங்குகின்றனர். தற்கொலை செய்துகொண்டவர்கள் கல்வி கற்ற தரப்பினர் என்பதுடன் உயிரிழந்தவர்களில் 40 வீதமானவர்கள் சாதாரண தரத்தில் சித்தி அடைந்து உயர்தரத்தில் கல்வி கற்றவர்களாவர்.

 

இதேவேளை தற்கொலை செய்து கொண்டவர்களில் 22 வீதம் பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் 35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொழில் செய்வோர்களில் விவசாயத்தில் ஈடுபடும் தரப்பினர் இந்த தற்கொலை முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். மேலும் இலங்கையை பொருத்தமட்டில் 4 மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றார்.

 

இதேவேளை இது தொடர்பில் மனநல விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் கருத்து தெரிவிக்கையில்,

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த 3 வருடங்களில் மாத்திரம் 9,700  தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்தில் மாத்திரம் 3406 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை அதற்கு முன்னைய வருத்துடன் ஒப்பிடும் போது 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

மேலும் தற்கொலை செய்துகொண்டவர்களில் நூற்றுக்கு 83 வீதமான ஆண்களும், 17 வீதமான பெண்களும் உள்ளடங்குகின்றனர். தற்கொலை செய்துகொண்டவர்கள்  கல்வி கற்ற தரப்பினர் என்பதுடன்  உயிரிழந்தவர்களில் 40 வீதமானவர்கள் சாதாரண தரத்தில் சித்தி அடைந்து உயர்தரத்தில் கல்வி கற்றவர்களாவர்.

இதேவேளை தற்கொலை செய்து கொண்டவர்களில் 22 வீதம் பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களில் 35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொழில் செய்வோர்களில் விவசாயத்தில் ஈடுபடும் தரப்பினர் இந்த தற்கொலை முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். மேலும் இலங்கையை பொருத்தமட்டில்  4 மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றார்.

இதேவேளை இது தொடர்பில் மனநல விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே அதிகளவிலான தற்கொலை சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம் என்றாலும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடும் தரப்பினரை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும். இதன் மூலமாகவே இந்த மரணங்களை தடுக்க முடியும்.

ஒருவர் மன ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மனநோயாளர் என அடையாளம் காணப்படாமையே இந்த நிலைக்கு மற்றுமொரு காரணமாகும். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முறையாக சிகிச்சை வழங்கப்படாமையும் இதற்கு காரணமாக அமைய முடியும்.

ஒருவர் பொருளாதார ரீதியாக அல்லது மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறும் போது பலர் இதனை கருத்திக்கொள்வதில்லை. அவர்கள் கூறும் விடயங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

தற்கொலை செய்ய போவதாக கூறும் ஒருவருக்கும் நாம் உதவிகளை செய்வதில்லை. பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது?  மன அழுத்தத்தை எவ்வாறு இல்லாமல் செய்வது போன்று நாம் கவனம் செலுத்தும் போது தற்கொலைகள் இடம்பெறுவதை குறைக்க முடியும்  என அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள் – ஒரு வாரத்தில் ஆறு தற்கொலைகள் !

அண்மையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக தவறான முடிவுகளை எடுத்து தங்கள் உயிரினை மாய்த்க்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கின்றது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1 வாரத்தில் மாத்திரம் நான்கு தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மூன்றும் குமுழமுனை பிரதேசத்தில் ஒன்றும் என பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்கலை மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.

அண்மைய காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் தமிழ் சமூகத்தில் என்ன நிலை என்பதை எடுத்து காட்டுகின்றன.

 

பொறியியல் மாணவர்கள் இருவர் தற்கொலை – பொறுப்புக் கூறவேண்டியது யார்?

தமிழ் சமூகத்தில் இடம்பெறும் தற்கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய இடத்தில் பலர் உள்ளனர். அதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு பெரும் பங்குண்டு. ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடப்பதோ வேறு. 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் துறைத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் ஒருவர் துணைவேந்தர் முன்னிலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு, அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளது. ஆனாலும் அது தன் சமூகப் பொறுப்பிலிருந்து விடுபட முடியாது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் வருடாந்தம் ஒரு மாணவராவது தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையுள்ளது.

 

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவனான மன்னாரைச் சேர்ந்த கியூமன் மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையில் தூக்கிட்டு உயிர் மாய்த்திருந்தார்.

 

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில் தூக்கிட்டு உயிர் மாய்த்திருந்தார்.

 

இது தொடர்பான மேலதிகமான தகவல்களை அறிய கீழுள்ள தேசம் திரை Link ஐ Click செய்யவும்.

 

மட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலைச்சாவுகள் – 90 நாட்களுக்குள் 38 தற்கொலைகள் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையிலான 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மாச் 31 ம் திகதி வரையான 3 மாதத்தில் 17 வயது சிறுவர் தொடக்கம் 76 வயது வரையிலான ஆண் பெண் உட்பட 38 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் 27 வயதுடைய நற்குணராசா கிரிதர்ஷன் என்ற இளைஞன் சம்பவதினமான நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வீட்டின் அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரை அங்கிருந்து காப்பாறி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் மகளுடன் வாழ்ந்துவரும் 76 வயதுடைய தந்தையார் மகளுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி களுவங்கேணி மயானத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

அவ்வாறே அதே பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவரும் தனியார் கம்பனியில் கடமையாற்றிவரும் அம்பகஸ்கவ பிரதேசத்தைச் சோந்த 43 வயதுடைய வீரசிங்க என்பவர் சம்பவதினமான நேற்று இரவு தொலைபேசியில் மனைவியுடன் சண்டை பிடித்துவிட்டு அறையில் நித்திரைக்கு சென்றவர் அங்கு கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஜனவரி தொடக்கம் 38 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும் அண்மை காலமாக மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வவுனியாவை அடுத்தடுத்து சோகத்தில் ஆழ்த்திய தற்கொலைகள் – மருத்துவபீடத்துக்கு தெரிவான முதல் நிலை மாணவன் தற்கொலை !

வவுனியாவில் தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தில் 2016ம் ஆண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3 ஏ எடுத்து மருத்துவபீடத்துக்கு தெரிவாகிய பிரபல வைத்தியரின் மகனான செந்தில்காந்தன் லக்சிகன் நேற்று தற்கொலை செய்துள்ளார்.

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின் பின்னர் இவர் தாய் மண்ணில் இருதயசிகிச்சை நிபுணராக வரவிரும்புவதாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று தேசிய ரீதியில் 39வது இடத்தையும் பெற்ற இவர் தற்கொலை செய்ததற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

வவுனியாவில் தொடர்ச்சியாக தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம் முடியுமுன் மற்றுமொரு மாணவனின் உயிரிழப்பு வவுனியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.