சிறிதரன் எம்.பி.

சிறிதரன் எம்.பி.

சிறிதரன் வருவார் முன்னே இந்தியா வரும் பின்னே ! வடக்கு தொழிற்சாலைகளை தமிழர்களிடம் கொடாமல் இந்தியாவிடம் கொடுக்க கோருகின்றார் !

சிறிதரன் வருவார் முன்னே இந்தியா வரும் பின்னே ! வடக்கு தொழிற்சாலைகளை தமிழர்களிடம் கொடாமல் இந்தியாவிடம் கொடுக்க கோருகின்றார் !
வடக்கின் தொழிற்சாலைகளை தமிழர்களிடம் கொடுக்காமல் இந்தியாவிடம் கையளிக்க கோருகிறார் பா உ சிறிதரன். சிறிதரன் வருவார் முன்னே இந்தியா வரும் பின்னே என்பது போல் வடக்கை இந்தியாவிடம் கையளிக்கும் திட்டத்துக்கு பா உ சிறிதரன் முழு முயற்சி எடுத்து வருகின்றார். அதன் ஒரு கட்டமாக வடக்கின் உப்பளங்களை இந்தியாவிடம் கையளிக்குமாறு கோரியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் பிரச்சாரங்களில் வடக்கில் உள்ள தொழிற்சாலைகளை மீள இயக்குவதற்கு உறுதியளித்திருந்தது. அதன்படி வடக்கின் அபிவிருத்திக்கு கணிசமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன் அமைச்சர் குழு காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் அச்சுவேலி கைத்தொழில்பேட்டை என்பனவற்றை பார்வையிட்டனர். ஆனையிறவு உப்பளத்தையும் வினைத்திறனுடன் இயங்கச் வைக்க வேண்டும் என்பது தேசிய மக்கள் சக்தியின் இலக்காக உள்ளது.
இதனை அறியாதவராக பா உ சிறிதரன் வடக்கின் பொருளாதாரத்தை வளப்படுத்த உங்களின் திட்டம் என்ன என நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர், வடக்கு – கிழக்கில் இருந்த பல தொழிற்சாலைகள் இயங்காமல் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இப்போதும் மூடப்பட்டு அங்கிருந்த இரும்புகள் களவாடப்பட்டு சீமெந்து அத்திவாரங்கள் மட்டுமே உள்ளன. அவ்விடத்தில் சீமெந்து தொழிற்சாலையை உருவாக்க வசதிகளைக்கூட உருவாக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
பா உ சிறிதரன், தேசிய மக்கள் சக்தி அமைச்சர்குழு தொழிற்சாலைகளைப் பார்வையிட்டு சில வாரங்களுக்குப் பின் நேற்றுக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தேசிய மக்கள் சக்தி தனியாரோடு, அரச – தனியார் கூட்டுத் தாபனமாகச் செயற்படுத்த எண்ணியுள்ளது. இதற்காக புலம்பெயர் தமிழர்களுக்கும் அழைப்பு விடுத்தள்ளது. ஆனால் இவற்றைக் கணக்கெடுக்காமல் வடக்கு கிழக்கு பிரதேசங்களை இந்தியாவுக்கு அடகு வைக்கும் திட்டங்களை பா உ சிறிதரன் முன்வைத்துள்ளார்.
பா சிறிதரன் அண்மையில் இலங்கைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களைச் சிறையில் சென்று நலன் விசாரித்தது தொடர்பில் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன் அயலவர் திருவிழாவுக்குத் தமிழகம் சென்று வந்த பா உ சிறிதரன் அங்கும் வடக்கு மீனவர்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்திய மீனவர்கள் கடல்வளத்தை மட்டும் அழித்துவிடவில்லை. அவர்கள் கொண்டுவரும் போதைப் பொருட்கள் வடக்கின் இளைஞர் சமூகத்தையும் அழிக்கின்றது. ஆனால் பா உ சிறிதரனும் ஏனைய தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனமாகவே உள்ளனர்.

இலங்கை அரசு தெற்கோடு கை கோர்க்க, தமிழ் தேசியம் மேற்கிற்கு மனுக் கொடுக்கின்றது !

இலங்கை அரசு தெற்கோடு கை கோர்க்க, தமிழ் தேசியம் மேற்கிற்கு மனுக் கொடுக்கின்றது !

உலக சனத்தொகையின், உலக சந்தையின் மிகப்பெரும் நாடுகளான சீனா – இந்தியாவோடு இலங்கை மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஜனாதிபதியின் சீன விஜயம் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளமை பல்வேறுபட்ட பரஸ்பர ஒப்பங்தங்களிலும் வெளிப்பட்டு நிற்கின்றது. உலகின் சிறிய தீவுகளில் ஒன்றான இலங்கை உலகின் மிகப்பெரும் சந்தையைக் கொண்டுள்ள, பொருளாதார பலத்தைக் கொண்டுள்ள நாடுகளாலும் கௌரவிக்கப்பட்டுள்ளமை தேசிய மக்கள் சக்திக்கு கிடைத் வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே 21 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகி உள்ளது.

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு ஜனாதிபதி நாடு திரும்பினார். நாடு திரும்புவதற்கு முன் காலையில் நிலையான அபிவிருத்தி மூலம் கிராமிய மறுமலர்ச்சியைக் கண்ட சென் கி மாதிரி கிராமத்தையும் தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப விவசாய மையத்திற்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அபிவிருத்தியை ஜனநாயகப்படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு இவை உதவும்.

சீனா கடன்பொறிக்குள் நாடுகளைத் தள்ளிவிடுகின்றது என்ற மேற்கு நாடுகளதும், அவர்களது ஊடகங்களினதும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எடுபட்டு, சீனாவின் முதலீடுகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தபோதும், அவை பொருளாதார விருத்திக்கான அடிக்கட்டுமானங்கள் என்பது வெளிச்சத்திற்கு வருகின்றது. இனிவரும் காலங்களில் இந்துசமுத்திரப் பிராந்தியம் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் முக்கிய பாதையாக அமைய இருப்பதும் இதற்கான காரணங்களாக சொல்லப்படுகின்றது.

ஆனால் இதனைக் கடுகளவும் புரிந்துகொள்ளாத தமிழ் தலைமைகள், ரோ புலிகளின் மதியுரைஞர் மு திருநாவுக்கரசு போன்றவர்களின் உலுத்துப்போன கதையாடல்களை வைத்துக்கொண்டு சீனாவுக்கு எதிராக எங்களைப் பயன்படுத்துங்கள் என்று சன்னதம் ஆடுகின்றனர். மறுபக்கம் எங்களுக்கு சீனாவின் புலமைப் பரிசிலும் வேண்டாம், படிப்பும் வேண்டாம் என்று யாழ் பல்கலைக்கழகம் அடம்பிடிக்கின்றது. கோட் ரை கட்டிய வெள்ளைக்காரன் அமெரிக்காவில் ஐரொப்பாவில இருந்து வந்து விசாரிக்க வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு, தற்போது உயிரோடு இல்லாதவர்களின் உறவுகள் வலிந்து கேட்கின்றனர். தமிழ் தேசியமும் அதற்கு பூஸ்ட் கொடுக்கின்றது.

தமிழ் தேசியத்திற்கு சர்வதேச அரசியல் புரியவில்லை என்பது ஒரு பக்கம், தங்கள் வீட்டு தெரு முழுக்க ஜேவிபி வந்த விடயமே இவர்களுக்கு நவம்பர் 15ம் திகதி தானே தெரிய வந்தது. அதுவரைக்கும் அவர்கள் ஊழல், மோசடி என்று போதையேறி மயக்கத்தில் இருந்தனர். கோமாவிலிருந்து எழும்பிய தமிழ் தேசிய மாமாக்களுக்கு கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையில், சர்வதேசத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. மீண்டும் வெள்ளாள வெள்ளைக்கார ‘தொரைகளைச்’ சந்தித்து இன்னமும் கண்காணி வேலை எடுக்கத் திரிகின்றார்கள்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் தோல்வியடைந்து, தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்ற மனோகணேசன் பிரித்தானியத் தூதுவர் அன்ட்ரூ பற்றிக்கைச் சந்தித்துள்ளார். இலங்கையின் சமூக பொருளாதார தேசத்தைக் கட்டியெழுப்புவது பற்றியும் மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும் அங்குள்ள குறைபாடுகள் பற்றியும் பிரித்தானிய ‘தொரை’யிடம் முறையிட்டுள்ளார்.

இதேசமயம் பா உ சிறிதரன் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான் செஸ் அமோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ உள்ளடங்கிய குழவினரை கொழும்பில் சந்தித்துள்ளார். அவர்களிடம் தமிழர்கள் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வொன்றையே எதிர்பார்ப்பதாக வலியுறுத்தி உள்ளார். இச்சந்திப்பின் இறுதியில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எவ்வாறு முன்மாதிரியாக, இதுவரை நடந்திராத வகையில், ஜனநாயகப்படியும், இனவாதமில்லாமலும், வன்முறையில்லாமலும் நடத்தப்பட்டது என்பதைச் சொல்லும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு அறிக்கையின் பிரதியை சிறிதரனிடம் கையளித்தனர்.

ஆனால் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினையை இனவாதத்திற்கு எதிராக போட்டியிட்டு தமிழ் மக்களுடைய கணிசமான ஆதரவோடு ஆட்சிபீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியோடு இது தொடர்பில் உரையாட, இவர்கள் தயாரில்லை. தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்த தமிழ் மக்களின் ஆதரவைப் பெறாத, இனவாதத் தலைவர்களான ஜே ஆர் ஜெயவர்த்தனா, ரணசிங்க பிரேமதாச, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க என எல்லோருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தியை தீண்டத் தகாததாக நடத்த முற்படுகின்றனர்.