இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஆசிய வலய நாடுகளில் இலங்கைப் பெண்கள் கல்வியில் முன்நிலையில் – நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி !

ஆசிய வலய நாடுகளில் இலங்கைப் பெண்கள் கல்வியில் முன்நிலையில் – நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி !

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான சட்டங்கள் இயற்றப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அவர் ஆசிய வலய நாடுகளில் இலங்கை கல்வியில் முன்நிலை வகிப்பதையும் அப்போது சுட்டிக்காட்டினார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு பிரதமர் மேலும் உரையாற்றிய போது சுதந்திரத்துக்கு பின்னராக 75 வருட காலத்தையும் நாங்கள் விமர்சிக்கவில்லை. அரசியல் கட்டமைப்பையே சாபம் என்கிறோம். இலவச கல்வி மற்றும் இலவச சுகாதாரம் ஆகியவற்றால் பெண்கள் முன்னேற்றமடைந்துள்ளார்கள். ஆசிய வலய நாடுகளில் இலங்கையின் பெண்களின் கல்வி தரம் முன்னிலையில் உள்ளது. கல்வித்துறையின் ஊடாகவே ஆண் – பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்த முடியும். ஆகவே ஆண்களின் கல்வி நிலை குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.

சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும். அரசியலமைப்பு பேரவைக்கு இந்த ஆணைக்குழுவுக்கான நியமனங்கள் தொடர்பான பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியும் ! பிரதமர் ஹரிணி

அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியும் ! பிரதமர் ஹரிணி

 

அரசியல் தலையீடு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றிருந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். நாட்டை சரியான பாதைக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு தேவையான மாற்றங்களைச் செய்யவும் தவறுகளை திருத்திக்கொள்ளவும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாது. அதற்கு அரச அதிகாரிகள், மத தலைவர்கள் போன்று நாட்டு மக்களும் முன்வர வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய மகளிர் பேரவை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, “நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் நாம் சரியான இடத்தை வந்தடைந்துள்ளோம். பெண்களை பொருளாதாரத்துடன் இணைக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது. அதற்கான தடைகளை படிப்படியாக குறைத்து வருகிறோம். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

பெண்கள் தங்கள் வீட்டில் தங்கள் பொறுப்புகளை சரியாக நிர்வகிக்கின்ற அதேநேரம் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் பாலர்ண பாடசாலைகள், பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சுகாதார சேவைகளை அபிவிருத்தி செய்துவருகிறோம்” என்றார்.

எங்களை மக்கள் பாதுகாக்கிறார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய !

எங்களை மக்கள் பாதுகாக்கிறார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய !

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அரலகங்வில மகாவலி திரையரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. இந்த அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் பாதுகாக்கப்பட்டு, நாட்டில் மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் கடந்த தேர்தலில் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமது அரசுக்கு உள்ளது. அதற்காக அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்யப்பட்டு தரவுகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த நாட்டின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க அரசு சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முந்தைய அரசுகளின் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளில் ஆசிரியர்களுக்கான சரியான திட்டம் இல்லை. ஆசிரியர்களின் மனப்பான்மையை வளர்ப்பதிலும், ஆசிரியர் பயிற்சி அளித்து, ஆசிரியர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதிலும், நவீன கல்வி அறிவை அவர்களுக்கு வழங்குவதில் நமது அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. என்றார்

பா.உ இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து !

 

சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர், அவரது உதவியாளர் மற்றும் வாகனத்தின் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவரது உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.