இலங்கை பாராளுமன்றம்
இலங்கை பாராளுமன்றம்
மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியல் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டார்.
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசாரிக்க சென்ற போது இவ்வாறு தன்னை தாக்கியதாக அவர் முறையிட்டுள்ளார்.
‘ இன்று 2.30 மணியளவில் நான் எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குச் சென்றேன். இதன்போது நான் கேட்டேன். இந்த நேர ஒதுக்கீடு எவ்வாறு இடம்பெறுகிறது என்று. இன்றைய நாள் எனக்கு எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. நாளை எனக்கான நேரம் இருக்கிறதா? இல்லையா? என கேட்க சென்றேன். அங்கே அதிகாரிகள் இருந்தனர். மற்றைய அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். நாளை பிற்பகல் எனக்கு நேரம் ஒதுக்கித் தருவதாக அவர்கள் எனக்கு கூறினார்கள். இந்த வரிசையை எப்படி செய்கிறீர்கள் என நான் கேட்டேன். பின்னர் சுஜித் என்ற நபரிடமும் மற்றொரு நபரிடம் சென்று பேச சொன்னார்கள். அவர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றனர். அவர்கள் நினைந்தவாறு தீர்மானிக்க முடியாது. கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறினேன். இதன்போது சுஜித் என்ற நபர் என்னை தாக்கினார். என்னை தாக்க முடியாது. இவருக்கு என் தந்தையின் வயது. இவரை தாக்கி நானே சீபிஆர் செய்ய வேண்டி வரும். அதனால் தாக்கவில்லை.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை. தகாத வார்த்தைகளை பிரயோகித்து பேசினார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா சபையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மற்றுமொரு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என சபையில் தெரிவித்தார்.
சுய நிர்ணய உரிமையுடன் கூடிய பிரிந்து போகும் உரிமையை கோருபவர்கள் யார்..? ஐ.எம்.எப்பிடம் பெற்ற கடனை மீள செலுத்தாமல் விட முடியுமா..?
அரசியல் ஆய்வாளர் – தமிழ் சொலிடாரி முக்கியஸ்தர் சேனனுடனான பரபரப்பான கலந்துரையாடல்..!
இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
24.09.2024 திகதியிடப்பட்ட 2403/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியது.
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த தீர்மானத்தை ஆதரித்தார்.
91 வயதாகும் ஆர் சம்பந்தன் தற்போது சுகயீனமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முறையாக நடந்து கொள்ளாவிட்டால் அதனை எதிர்கொள்ளும் அதிகாரம் வழங்கும் வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நாளை சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த வரைவை தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் மரியாதை, ஒழுக்கம் என்ற ஒன்று இல்லையா என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, நாடாளுமன்றத்தின் ஒழுக்கம் மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், இங்கிலாந்தின் நாடாளுமன்ற நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடு என்ற ரீதியில் முன்னோக்கிப்பயணிப்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அத்தியாவசியமானதாகும். பாராளுமன்றமே அரசாங்கம் என்ற பொறிமுறைக்குள் செயற்படாது தூரம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்பதை தமிழ் கட்சிகளிடம் தெரிவிக்க விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (மே1) காலை 10 மணிக்கு கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் இடம்பெற்றது.
கட்சி சார்பின்மையை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
எனினும் கட்சி ஆதரவாளர்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அவரால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு சற்று முன்னர் இக் கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது.
அந்த விசேட அறிவிப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
எனது முயற்சி அரசியல் அல்ல. நாட்டின் பொருளாதாரத்தை முறையாகக் கையாள்வதும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுமாகும்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதோடு, அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் காரணமாகவே நாம் முன்னோக்கிச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட்டது.
அதனை அமுல்படுத்தி 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே எனது இலக்கு மொத்த தேசிய உற்பத்தியை ஆண்டுக்கு 6 – 7 சதவீதம் என்ற அளவில் விரைவாகக் கொண்டு வரக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.
2048 இல் நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை மாற்றமடைந்திருக்க வேண்டும்.
குறுகிய கால அரசியல் பற்றி சிந்திக்காது 2048 ஐ பற்றி சிந்திக்க வேண்டும். மீண்டும் பாராளுமன்றத்துக்கான மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள புதிய பாதையில் பயணிக்க வேண்டும்.
நாடு என்ற ரீதியில் முன்னோக்கிப் பயணிப்பதற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வருட இறுதிக்குள் இது குறித்து இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.
இனப்பிரச்சினை விடயத்தில் தூரம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என தமிழ் கட்சிகளிடம் தெரிவிக்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனில் பாராளுமன்றமே அரசாங்கம் என்ற பொறிமுறைக்குள் செயற்படுமாறு அழைப்பு விடுகின்றேன் என்றார்.
ஒரு இலட்சம் குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் மூளையை எடுத்து பச்சையாக சாப்பிடுவதற்காக சீனாவுக்கு அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தங்களால் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார்.
சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் விவகாரம் நாட்டின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது. இருப்பினும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, அதிக எண்ணிக்கையிலான வன விலங்குகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சட்ட விதிகள் எதுவும் இல்லை. இந்தச் சட்டத்தின்படி, வனவிலங்குகளை விற்பனை செய்வதில் ஈடுபடக் கூடாது என்று ஒப்பந்தம் செய்துள்ளதால், பணத்திற்காக நம் நாட்டில் விலங்குகளை ஏற்றுமதி செய்ய முடியாது.
வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வது அன்னிய செலாவணியை கொண்டு வர உதவாது. ஆனால், அரச அதிகாரி ஒருவரின் மனைவி திரைமறைவில் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.
மேலும், குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் மூளையை பச்சையாக சாப்பிடும் சிறப்பு உணவு தயாரிக்கும் முறை சீனாவில் நடந்து வருவதாகவும் அமெரிக்காவிலிருந்தும் அதிக அளவில் குரங்குகளுக்கான முன்பதிவு கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குரங்குகள் மனிதர்களின் உடல் அமைப்பைப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன, எனவே, அவை இறுதி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும். குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த ரன்வெல்ல, நாட்டை நாசப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களை ஏற்றுமதி செய்ய தீர்மானம் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த குரங்குகளால் பயிர்களில் பெரும் பங்கு அழிந்து வருகிறது. எனினும் அவற்றை ஏற்றுமதி செய்வது அதற்கான தீர்வாகாது. பயிர்களைப் பாதுகாப்பதற்கான தீர்வுகளை நாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ளோம், ஆனால் அரசாங்கத்தில் யாரும் அவற்றைக் கேட்கத் தயாராக இல்லை. பயிர்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியோர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கே முதலிடம் பெறுவார். எனவே, அவரையும் எங்காவது ஏற்றுமதி செய்யவேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.