இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள்

இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள்

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்கள் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் வேண்டுகோள் !

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்கள் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுவதை உறுதி செய்யுமாறு ஆளுநர் வேண்டுகோள் !

உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை திறப்பு விழாவில் தெரிவித்தார்.

பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை மரக்கறி பொதுச் சந்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், பௌதீக வளங்களின் முன்னேற்றம் என்பது அபிவிருத்திக்கு இன்றியமையாதது. அதேபோன்று தனித்து பௌதீக வளங்களின் முன்னேற்றம் மாத்திரமும் அபிவிருத்தியாகிவிடாது. எங்களின் சேவையை மேம்படுத்தும்போதுதான் அபிவிருத்தி முழுயடையும். எனவே மக்களுக்கு தரமான, அன்பான, விரைவான சேவையை வழங்க முன்வரவேண்டும் என குறிப்பிட்டார்.

அங்கு மேலும் பேசிய ஆளுநர், கௌரவ ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றது. அதைச் சிறப்பாக செயற்படுத்தவேண்டும். மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையை உருவாக்கவேண்டும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக்காலம் – அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாளை (20ஆம் திகதி) முதல் உள்ளூராட்சி நிறுவனங்கள் பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

அதன்படி, அந்த நிறுவனங்களின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் நாளை (20) முதல் ஆணையர்கள் மற்றும் செயலாளர்களின் கீழ் வைக்கப்படும்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் அந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி ஆரம்பமானது.

எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கு மட்டும் தனித் தேர்தல் நடத்தப்பட்டதன் காரணமாக, அதன் உத்தியோகபூர்வ பதவிக்காலம் 2018 ஒக்டோபர் மாதம் ஆரம்பமானது.

அரசியலமைப்பின் பிரகாரம் 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நான்கு வருட காலத்திற்குப் பின்னர் கடந்த வருடம் மார்ச் மாதம் 20ஆம் திகதியுடன் முடிவடையவிருந்தது. தனது அதிகாரத்தின் பிரகாரம் பதவிக்காலத்தை ஒரு வருடத்திற்கு நீடிக்க விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதன்படி அந்த 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

அந்த நிறுவனங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்பதாலும், இதுவரை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறாததாலும், உள்ளூராட்சி நிறுவனங்கள் அரசு அதிகாரிகளின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.

இதன்படி, 29 மாநகர சபைகளின் அதிகாரம் மாநகர ஆணையாளர்களின் கீழும், 36 நகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் அந்த நிறுவனங்களின் செயலாளர்களின் கீழும் இருக்கும்.

எல்பிட்டிய உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறமை குறிப்பிடத்தக்கது.