இலங்கை – இந்தியா மீனவர்கள் பிரச்சினை

இலங்கை – இந்தியா மீனவர்கள் பிரச்சினை

பாதிக்கப்படுவது மீனவர்கள் தான் – இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பு !

பாதிக்கப்படுவது மீனவர்கள் தான் – இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பு !

 

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்த ஐவர் கொண்ட குழு – இலங்கை மீனவ மீனவ பிரதிநிதிகளுடன் வவுனியாவில் கலந்துரையாடியிருந்தனர் .

மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசமட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுத்து நிரந்தர தீர்வை எட்ட வேண்டும் என கலந்துரையாடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று நடைமுறைப்படுத்தாமையால் வரை தமிழ்நாட்டிலும் வடமாகாணத்திலும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள, வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் அன்னலிங்கம் இந்திய மீனவர்களுடன் வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பு திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் காயப்பட்டனர் – இந்தியா கண்டனம்!

இலங்கைக் கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் காயப்பட்டனர் – இந்தியா கண்டனம்!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியமைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்ய முற்பட்ட போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர் .

இதன்போது , இருவர் படுகாயமடைந்ததுடன் மூவருக்கு சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இந்திய துணைத்தூதவர் சாய் முரளி காயமடைந்த மீனவர்களை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புதுடெல்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சிடம் இந்த விடயம் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . எந்த ஒரு சூழ்நிலையிலும் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்விடயத்தில் இரு அரசாங்கங்களுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ள இலங்கை கடற்படையினர், மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது, உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல், இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர். இதனால் படகில் சில கடற்படையினர் இறங்க முற்பட்டபோது அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆக்ரோஷமாகவும் ஒழுக்கமின்றியும் நடந்து கொண்டனர். இதனாலேயே தாம் தாக்குதல் நடாத்தவேண்டியேற்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து வடக்கு கடல் பிராந்தியத்தில் கடல் வளத்தையும் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தாம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மீனவர்களை என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்த வருடத்திற்குள் மட்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 239 இந்திய மீனவர்கள் 32 படகுகளுடன் கைது !

Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் 25 பேர் வடக்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மீனவர்களின் 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 239 இந்திய மீனவர்கள் 32 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நேற்றிரவு(30) இராமேஸ்வரத்தில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற கடற்படை வீரரொருவர் உயிரிழந்தமை தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் தமது அதிருப்தியை வௌியிட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷெனுக செனவிரத்ன இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரை சந்தித்தபோது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இந்த வி்டயம் தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறிவித்ததாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி S.ஜெய்ஷங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பில் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்ஷங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

 

மீன்பிடித் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக தமிழக முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனவே, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்ஷங்கரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.