இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

“எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்..” – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

“எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்..” என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை அரசியல் ரீதியாக அபிவிருத்தி செய்வதில் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச  தனிமையான பயணத்தை மேற்கொள்வார் என்றால் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய வழியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த போது ,

நாட்டின் அபிவிருத்திக்கு அமைச்சரவையை கோட்டாபய நியமிக்க வேண்டும். அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு சரியான அரச உத்தியோகத்தர்களை நியமித்து அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அரசதலைவர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடியாமல் அரசாங்கம், வீழ்ச்சியடையும் என நம்புகிறேன். ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும்.

அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு முகங்கொடுத்து எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கல்லெறிவார்கள்.

இதேவேளை, எல்என்ஜி விநியோகம் மற்றும் எல்என்ஜி மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதை தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பதாக இராஜாங்க அமைச்சர் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

“நிர்வகிக்க முடியாவிட்டால் புதிய நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதே தீர்வு.” – இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது சிறந்ததாகும். தமக்கு தேவையான அரசாங்கத்தை தோற்றுவிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கிராமிய கலை கலாசார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள விரக்தி நிலை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் செல்கிறது. தவறுகள் திருத்திக் கொள்ளப்படுவது அவசியமாகும்.விவசாயத்துறை தொடர்பில் மாற்றுத்திட்டங்களை செயற்படுத்துவது அவசியமானதாகும். உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார நிபுணர்களின் எதிர்வு கூறல் குறித்து விவசாயத்துறை அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.