இராஜாங்க அமைச்சர் டயனாகமகே

இராஜாங்க அமைச்சர் டயனாகமகே

“சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க களியாட்ட விடுதிகளோ, மதுபானங்களோ எவையும் இல்லை.”- சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனாகமகே கவலை !

“மக்கள் பணத்தை செலவழிப்பதற்கான வழிவகைகளை நான் உருவாக்குவேன்.” என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனாகமகே தெரிவித்துள்ளார்.

பகலில் வெளிநாட்டவர்களை ஆக்கிரமிப்பதற்கான கலாச்சார ரீதியாக கவரக்கூடிய விடயங்கள் இலங்கையில் காணப்படுகின்றன ஆனால் இரவுவாழ்க்கை என வரும்போது அதன் போட்டியாளர்களுடன் போட்டிபோட முடியாத நிலையில் இலங்கை உள்ளது என அவர் எக்கனமி நெக்ஸ்டிற்கு தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் தாய்லாந்து போன்ற நாடுகளில் காணப்படும் வீதியோர கடைகள் மற்றும் நள்ளிரவு களியாட்டம் போல இலங்கை சுற்றுலாப்பயணிகளிற்கும் உள்ளுர் மக்களிற்கும் இரவின் பின்னர் மேற்கொள்ளக்கூடிய செயற்பாட்டுகளிற்கான வாய்ப்பை வழங்கவில்லை  குறைந்தளவே வழங்குகின்றது.

சுற்றுலாப்பயணிகள் இரவில் பொருட்களை  கொள்வனவு செய்ய விரும்பினால் எந்த கடைகளும் திறந்திருப்பதில்லை. அவர்கள் நடனமாட விரும்பினால் இசையை ரசிக்க விரும்பினால் மது அருந்த விரும்பினால்  உணவருந்த விரும்பினால் இந்த நாட்டில் என்ன இருக்கின்றது.?

இலங்கை இரவில் மரணித்த தீவை போல காணப்படுகின்றது. களியாட்டங்களிற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதால் வெளிநாட்டு நாணய வருகை வீழ்ச்சியடைந்துள்ளது. பணத்தை செலவிடக்கூடிய நிலையில் உள்ள இலங்கையர்கள் தங்கள் பணத்தை செலவிட வெளிநாடுகளிற்கு செல்கின்றனா .?

அவர்கள் எங்கள் பணத்தை வெளிநாடுகளிற்கு கொடுக்கின்றனர் இதற்கு என்ன காரணம் இலங்கையில் அவர்கள் அனுபவிக்க எதுவுமில்லை.

என்னை விமர்சிப்பவர்கள் கசினோ மற்றும் விபச்சார கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட இரவு வாழ்க்கை பற்றி மாத்திரமே சிந்திப்பவர்கள் அவர்களால் பரந்துபட்ட அளவில் சிந்திக்க முடியாது. மக்கள் பணத்தை செலவழிப்பதற்கான வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டதே தனது நோக்கம்.

பொருளாதாரம் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வதற்காகவே இதனை செய்ய விரும்புகின்றேன். கடைகள்  பொருட்கொள்வனவு  இசை போன்றன காணப்படவேண்டும்.

கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அபிவிருத்தியிலிருந்து பிரிக்கவேண்டும். எங்களிற்கு வரலாறு தேவை கலாச்சாரம் தேவை ஆனால் அதன் அர்த்தம் அத்துடன் நீங்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்  நாட்டின் அபிவிருத்தியை தடுக்கவேண்டும் என்பதல்ல .

நாட்டை ஏதாவது ஒரு வழியில் அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போதெல்லாம் மக்கள் மத கலாச்சார விடயங்களை கையில் எடுத்துள்ளனர் அது இன்று எங்களை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்