இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடியும், அனுரவின் மொழியில் தமிழ் மக்களுக்குத் தீர்வு: ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதியுடனான வாழ்க்கை !

பிரதமர் மோடியும், அனுரவின் மொழியில் தமிழ் மக்களுக்குத் தீர்வு: ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், கௌரவம் மற்றும் நீதியுடனான வாழ்க்கை !

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் மலையகத் தமிழ் பிரதிநிதிகளையும் சந்தித்து முக்கியக் கலந்துரையாடல்கள் நடத்தினார்.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, “இலங்கையின் தமிழ் சமூக தலைவர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணம். தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன். அவர்கள் இருவருமே எனக்குத் தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்தவர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி எனும் மூன்று முக்கியத்துவமிக்க அம்சங்களுடனான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். தமது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் தமிழர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் எனவும் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலைய தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மலையகத் தமிழர்களுக்காக 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலய நிர்மாணம், மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல முக்கிய முயற்சிகளுக்காக இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

 

இந்திய சண்டியனை வைத்து இலங்கையை மிரட்டும் சமன்பாடு இனியும் வேலை செய்யுமா..? –

இந்திய சண்டியனை வைத்து இலங்கையை மிரட்டும் சமன்பாடு இனியும் வேலை செய்யுமா..?

மோடியின் இலங்கை வருகையின் பின்னணி என்ன..?

முன்னாள் இராஜதந்திரி தர்மகுலசிங்கம் ஐயம்பிள்ளையுடனான நேர்காணல்

 

மாகாண சபை பற்றி மோடியிடம் கோள் மூட்டுவோம் என பூச்சாண்டி காட்டும் சீ.வி.கே !

மாகாண சபை பற்றி மோடியிடம் கோள் மூட்டுவோம் என பூச்சாண்டி காட்டும் சீ.வி.கே !

 

மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சிவஞானம், “எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவருடனான சந்திப்பில் முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டுவருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல விடயங்கள் தொடர்பாகவும் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தொடரும் பா.ஜ.க அடக்குமுறை – விகடனை முடக்கிய மோடி !

இந்தியாவில் தொடரும் பா.ஜ.க அடக்குமுறை – விகடனை முடக்கிய மோடி !

 

இந்திய பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட காரணத்தால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் ஊடக நிறுவனமான விகடன் நூற்றாண்டினை தாண்டி இயங்கி வரும் நிலையில், அவர்களது வார இதழுக்கான அட்டைப்படத்தில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக சித்திரம் வரையப்பட்டிருந்தது.

முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் பெப்ரவரி 10ஆம் திகதி, அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது.

அந்த சித்திரத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தியதாக கூறி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக-வினர், பிரதமர் மோடி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்ணாமலை புகார் அளித்திருந்தார். இந்த சூழலில், அண்ணாமலை புகாரின் அடிப்படையில் விகடன் செய்தி நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியை சித்தரித்து வரையப்பட்ட கார்ட்டூனுக்கு எதிராக விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலரும் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்று தெரிவித்து வருகின்றனர்

இலங்கையையும் – இந்தியாவையும் இணைக்க கடலுக்கடியில் சுரங்கப்பாதை – மோடியிடம் கோரிக்கை !

தமிழ்நாட்டையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை கடலுக்கு அடியில் தமிழ்நாட்டின் தென் பகுதியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

மேலும், பொருளாதார ரீதியில் இந்தியாவை மற்றும் இலங்கையை சாலை மூலம் இணைப்பதன் பயன் மிகப் பெரியதாகும் எனவும் இந்தியா, இலங்கையில் வாழும் மக்கள் இதன்மூலம் பாரிய நன்மையடைவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்