COVID-19

COVID-19

இதுவரையில் 2524 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் – இலங்கை காதார அமைச்சு

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2524 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2828 ஆக அதிகரித்துள்ள நிலையில் 293 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் தற்போது வரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.79 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் வியாபித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவலால் வல்லரசு நாடான அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இன்னும் சில மருத்துவ பரிசோதனைகள் எஞ்சியுள்ளதால், கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதனால், மனித குலத்திற்கு இன்னும் பெரும் சவாலாகவே கொரோனா வைரஸ் விளங்கி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,79,99,273  -ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  6,87,807- ஆக உள்ளது.  கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  1,13,18,851- ஆக உள்ளது.

இந்தியாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா – 24 மணி நேரத்தில் 50,000க்கும் மேற்பட்ட நோயாளர்கள்.

இந்தியாவில்  கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தினம் தினம் உச்சத்தை எட்டி வருகிறது.  இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 57,118 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கடந்த  24 மணி நேரத்தில் 764 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம்  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,511- ஆக உள்ளது. 10 97,374  கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 1,93,58,659-பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 5.25 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை லங்காபுர கொரொனா தொற்று விபரம் – வெளியானது P.C.R பரிசோதனை அறிக்கை முடிவுகள்.

லங்காபுர பிரதேச செயலகத்தில் இனங்காணப்பட்ட புதிய கொரோனா தொற்றாளரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (31) உறுதிப்படுத்தப்பட்டதாக அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர் வைத்தியர் பீ.சஞ்சய தெரிவித்தார்.

இதேவேளை, பொலன்னறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருங்கி பழகிய 158 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் இரவு P.C.R பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட 158 பேரின் குறித்த முடிவுகள் அறிக்கை நேற்று இரவு கிடைக்கப்பெற்ற நிலையில், குறித்த அறிக்கையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர், வைத்தியர் பீ.சஞ்சய தெரிவித்தார்.

P.C.R பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தரப்பினர்களுக்கு இடையில், பிரதேச செயலக உறுப்பினர்கள், பிரதேசவாசிகள், தொற்றாளரின் உறவினர்கள் போன்று பொலிஸ் அதிகாரிகள் சிலரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2815 ஆக அதிகரித்துள்ளது.எவ்வாறாயினும், 2391 பேர் இதுவரையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 413 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

கொரோனா உயிரிழப்பு 6.75லட்சத்தை தாண்டியது !

உலகம் முழுவதும் கொரோனதொற்றுக்கு  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.75 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,75,757 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்து உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 1,74,53,103 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,921,667 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,467 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 1464 பேர் உயிரிழந்தை தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1.44 லட்சத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 46.34 லட்சத்தை தாண்டியது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 22.83 லட்சத்தை கடந்துள்ளது.
சீனாவில் நேற்று 127 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை காலை தெரிவித்துள்ளது. சீனா தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 100 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது.
புதிய பாதிப்புகள்  123 உள்நாட்டில் பரவியது, 112 தொலைதூர மேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங்கிலும், மீதமுள்ளவை வடகிழக்கு மாகாணமான லியாவோனிங்கிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா அச்சம் – பொலனறுவை லங்காபுரவில் 1000 பேருக்கு PCR பரிசோதனை.

பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டது . இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வெளியிட்டிருந்தார் . குறிப்பாக லங்காபுர பிரதேச செயலக பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட P.C.R பிரசோதனைகளில் குறித்த நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து லங்காபுர பிரதேச செயலகம் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததும் நோக்கத்தக்கது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பொலநறுவை , லங்காபுர பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் நெருங்கி செயற்பட்ட ஆயிரம் பேரிடம் PCR பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது . அதற்கமைய அவற்றின் முடிவுகள் கிடைத்த பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது . நேற்று இரவு மாத்திரம் குறித்த கொரோனா நோயாளிக்கு அருகில் செயற்பட்ட 325 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . பலருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகினால் பயணத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது