இலங்கை தமிழர்களை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். அவர்களின் நலனுக்காக வரும் 14ம் தேதி சார்பில் தேமுதிகவினர் கூட்டு பிரார்த்தனை செய்வார்கள் என கட்சி தலைவர் விஜயகாந்த தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேமுதிகவினர் இலங்கை தமிழர்களுக்காக மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் இருந்தனர். அறிவழியில் போராட்டம் நடத்தினர்.
சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டு இலங்கை ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. லட்சக்கணக்கான தமிழர்களை இடம் பெயரச் செய்து துன்புறுத்திகிறது. தற்போது யுத்தப்பகுதியில் இருக்கும் சுமார் 1 லட்சம் தமிழ் மக்களை சுட்டுகொன்று மிகப்பெரிய மனித பேரழிவை இன்னும் சில நாட்களில் நடத்தவுள்ளது.
தமிழக அரசோ முதல்வர் கருணாநிதி தலைமையில் பேரணி நடத்துவதும், மத்திய அரசுக்கு மனுபோடுவதும், இலங்கை இறையாண்மையில் இந்திய அரசு தலையிட முடியாது என்றும் தெரிவிக்கிறது.
சோனியாகாந்தி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி போல் செயல்பட வேண்டுமென்று கூறிவிட்டு, தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அடையாளப்படுத்தி கொண்டார்.
விமான சேவையை நிறுத்து…
இலங்கை அரசுக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்திய அரசு விமான போக்குவரத்தை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படாத நிலையில் தமிழினத்திற்கு மிகப்பெரிய வரலாற்று துரோகத்தை இழைத்து வருகின்றன. ஒருபுறத்தில் ஐயோ என்று கதறும் இலங்கை தமிழ் மக்கள், மறுபுறத்தில் ரத்த கண்ணீர் மட்டுமே வடிக்கும் தமிழ்நாட்டு மக்கள்.
இலங்கை தமிழர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்…
இலங்கை தமிழ் மக்களை காப்பாற்ற எனக்கு தெரிந்த ஒரேவழி, கடவுளிடம் வேண்டுவது தான். இனி ஆண்டவன் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.
இலங்கை தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஏப்ரல் 14ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணிக்குள் தமிழ்நாட்டு மக்கள் இலங்கை தமிழர்களுக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆலயங்களிலும், மசூதிகளிலும், மாதாகோவில்களிலும் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு தங்கள் ஒற்றுமையையும், உணர்வையும் உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ரு கேட்டுக்கொள்கிறேன். ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பது பழமொழி என்றார் விஜயகாந்த்.
thevi
நல்லது விஜயகாந்த் அவர்களே!
நீங்கள் தமிழ் ஈழம் வராமல் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை என்ற சபதம் பற்றி மறு பரிசீலனை செய்யவும். தங்கள் மகனுக்கு ஏன் பிரபாகரதன் என பெயரிட்டீர்கள்?
nada
தொப்புள்கொடி உறவு கைகழுவி விட்டார்
tamil boy
We know you all will do such a thing – now only thing you will say karma and GOD.
good luck your bussiness.
thurai
தமிழனை ஆண்டவர்கள் எப்போ இறந்து விட்டார்கள். தமிழகத்தில் ஆழ்வது திராவிடமும், சினிமாவும். இலங்கையில் ஆழ்வது பயஙகரவாதம்.
கடவுளிற்கே உரிதான அன்பு தமிழனிடம் தோன்றாதவரை அடிமை வாழ்வே என்றும்.
துரை
பார்த்திபன்
விஜயகாந்த் ஏன் ஆண்டவனை அழைக்கின்றீர்கள். உங்களைப் போன்றவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக அப்பப்போ ஈழத் தமிழர்களுக்காக பிலிம் காட்டுவதை நிறுத்தினாலே பிரைச்சினை பாதி தீர்ந்துவிடும்.
Thambiah Sabarutnam
முட்டாள்களின் முட்டாள்தனமான போராட்டம்
தமிழ் வெறி புலி வெறி கொலை வெறி
வெறியில் இருக்கும் வெறியர்கள்
சாமர்த்தியம் சாதுரியம் சாணக்கியம் எதுவும் அறவே கிடையாது
அரசியல் திட்டம் ராணுவ திட்டம் எதுவும் கிடையாது
தெரிந்ததெல்லாம் கொலை செய்வது தற்கொலை குண்டு வெடிப்பது
வெளிநாட்டு தமிழனுக்கு பிலிம் காட்டுவது
கோடிக்கணக்கில் காசு சேர்த்து சொகுசாய் இருப்பது
தமிழனை கடவுளாலும் இனி காப்பாற்ற முடியாது என செல்வநாயகமும் சொல்லிவிட்டு போய் விட்டார்.