இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி உட்பட்ட இந்திய தலைவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியான செய்தியை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் மறுத்துள்ளார். இந்திய உளவுத் துறை விடுத்துள்ள அந்த எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து சி.என்.என்-ஐ.பி.என் எனும் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் மின்னஞ்சல் விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழர்களின் அவலத்தையும், அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் மறைக்கவும், திசை திருப்பவும் இப்படிப்பட்ட விஷமத்தனமாக பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகள் தாக்கலாம் என்று இந்தியாவின் உளவுத் துறை வெளியிட்ட எச்சரிக்கை, இந்திய மக்களை திசைதிருப்பும் நடவடிக்கை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது. சோனியா காந்திக்கோ அல்லது அவருடைய பிள்ளைகளுக்கோ எங்களிடமிருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று நடேசன் தெரிவித்துள்ளார்.
மாயா
இதுமாதிரி சொல்ற ஆக்களைத்தான் நீங்கள் போட்டீங்க?
நானே கதைத்த ரெண்டு பேர் புலிகளால எங்களுக்கு ஆபத்தே வராது எண்டாங்க.
1 கதிர்காமர்
2 ஜெயராஜ் பர்ணாந்து புள்ளே
நீங்க சொல்லுவீங்க
நாங்க நம்பவேணும்
தலைவர் பறந்திட்டதா செய்தி உண்மையா?
பார்த்திபன்
அட உப்படித்தான் காசியானந்தன் மூலம் ராஜிவ்காந்தியுடன் சமரசம் பேசியவாறே அவரைப் போட்டுத் தள்ளினீர்கள். பின்பு மாட்டுப்பட்டதும் அது ஒரு துன்பியல் சம்பவம் என்றீர்கள். அதுபோல் இதுவும் மாட்டுப்பட்டால் இதுவும் இன்னொரு துன்பியல் சம்பவம் என்றுவிட்டால்ப் போச்சு.
accu
புலிகளால் தனக்கு எந்தவித ஆபத்தும் வராது என முழுமையாக நம்பிய மகேஸ்வரியை போட்டுத்தள்ளிய கோழைகள் தானே நீங்கள். எப்ப புலி புல்லுத் தின்ன வெளிக்கிட்டது?
chandran.raja
நடேசண்னை உங்களில் எந்த குறையும் இல்லை நீங்கள் ஒரு இனவாதியும் அல்ல உங்கள் வாழ்வே இதற்கு நல்ல உதாரணம். இவ்வளவு காலமும் எப்படி காலம்தள்ளி வாழ்தீர்கள் என்பதே எமக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் எப்படி இதற்குள் புகுந்து கொண்டீர்கள் என்பதே கேள்வியாக உள்ளது. சில வேளை ஊர்வாசனையாகவும் தோஷமாகவும் இருக்கலாம். அதையெல்லாம் நாம்புரிந்த கொள்ளக்கூடியதே! சந்தர்பத்தை பயன்படுத்தி எப்படியாவது இராணுவத்தின் கட்டுப்பாடு பகுதிக்கு வரப்பார்கவும். மனிதவாழ்வு ஒரு முறையே எஞ்சியுள்ள காலத்தை அர்த்தமுள்ளதாக்கலாம். மற்றும் படி புலிதலைவரின் கொள்கை விளக்கங்கள் இனிமேல் தேவையில்லை என்றே நினைக்கிறேன். முப்பதுவருட புலிஇயக்கதின் கொள்ளை விளக்கங்கள் தெருவில் அடிபட்டு சிதைந்து போய் விட்டது இந்த விளக்கங்களை தமிழ்-சிங்களமக்கள் விளங்கிக்கொண்டதை விட உலகமக்கள் பாண்டித்தியம் பெற்று விட்டார்கள் என்பதே நிதர்தன உண்மை.
murugan
அது மட்டுமல்ல டக்ளஸின் சகோதரரை பேசவென்று கூப்பிட்டு உயிரை எடுத்தவர்கள் அல்லவா புலிகள். அமிர்தலிங்கம் வீட்டு தேனீர் சூடு ஆறுவதற்குள் அவரின் குருதியை குடித்தவர்கள் அல்லவா புலிகள். புலிக்கு ஒரு போதும் புல்லு சரிவராது என்பதே வரலாற்று உண்மை.
இளங்கோ
புலிகள் தான் முடிந்து விட்டார்கள் என்று …. மார்தட்டும் போது ஏன் இப்படி சோனியா பயப்படுவது மாதிரி நடிக்கிறீர்கள்.? எல்லாம் வரும் தேர்த்தலில் ஒரு அபிமானத்தை ஏற்படுத்த ஒரு முஸ்தீபு தானே. வேணுமானால் ஏமாந்த சோணகிரி யாராவது இருந்தால் சொல்லுங்கோ.
என்னை போல பலர் ராஜீவ் காந்தி அனுப்பிய மக்களை பாதுகாக்கும் படையால் மானபங்க படுத்தபட்ட போது ………………….. யாராக இருந்தாலும் அப்படி ஒரு மனத்தாங்கல் தான் வரும். தனுவும் அப்படியான ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.
விடுதலைக்காக வெளிக்கிட்ட பல இயக்கங்களை கூறு போட்டு அவர்களை மோத விட்டு கூத்து பார்த்த ராஜிவ் அரசு இன்று தமிழ் மக்கள், போராளிகள் மீது இரசாயன வாயு அடிக்கும் அளவுக்கு தமிழ் மக்களை எதிரியாக பார்க்கும் அளவுக்கு தமிழ் மக்கள் இந்திய அரசுக்கு என்ன செய்தார்கள்? ஒன்றுக்கு மட்டும் என்னால் மன்னிப்பு கேட்க முடியும். அதாவது சகோதர இயக்க மோதலில் கொல்லப்பட்ட உண்மையில் தமிழரின் விடுதலைக்காக போராடவென்று வந்த போராளிகள். இதன் பொறுப்பையும் சோனியாவின் காங்கிரஸ் அரசு ஏற்குமா?
thevi
என்னை போல பலர் ராஜீவ் காந்தி அனுப்பிய மக்களை பாதுகாக்கும் படையால் மானபங்க படுத்தபட்ட போது ………………….. யாராக இருந்தாலும் அப்படி ஒரு மனத்தாங்கல் தான் வரும். தனுவும் அப்படியான ஒருவர் என்பதில் சந்தேகமில்லை”
பெண்களை மானபங்கம் செய் என்ற ஒரு சூழ்நிலையை வேண்டும் என்றே புலிகள் ஏற்படுத்தினார்கள். ஒப்பந்தத்தை குழப்பியடித்து விட்டு இன்று சனங்களுக்குள் போய் ஒளிந்து கொண்டதுதான் தேசியத்தலைவரின் தந்திரோபாயம்.
உங்களுக்கு தலைக்குள் ஒன்றும் இல்லை ஆனால் எல்லாப்பழிகளையும் அடுத்தவன்மேல் போடுவதில் கில்லாடிகள்.
விடுதலைக்காக வெளிக்கிட்ட பல இயக்கங்களை கூறு போட்டு அவர்களை மோத விட்டு கூத்து பார்த்த ராஜிவ்”
இப்ப இப்படி சொல்லுகிறீர்களே ஏன் உங்களால் அந்த சதியில் இருந்து தப்பிக்க முடியவில்லை. உங்களுடைய கெட்டித்தனம் அவ்வளவுதான்! மற்றவரை குறை சொல்லி ஒரு பலனும் இல்லை.
WANNIYAN
//புலிகள் தான் முடிந்து விட்டார்கள் என்று …. மார்தட்டும் போது ஏன் இப்படி சோனியா பயப்படுவது மாதிரி நடிக்கிறீர்கள்.? //இளங்கோ.
எதிரி வீரனென்றால் ஆபத்து எதிர்த்திசையில் மாத்திரம்தான். ஆனால் புலிகள்தான் கோழைகளாச்சே! எப்போது முதுகில் குத்துவார்களென்று யாரும் எதிர்பார்க்க முடியாதல்லவா? ராஜீவின் மார்பில் பாய்ந்த வளர்த்த கடாவல்லவா புலிகள்? ஆகவே சோனியா எச்சரிக்கையாக இருப்பதில் என்ன தவறு?
//விடுதலைக்காக வெளிக்கிட்ட பல இயக்கங்களை கூறு போட்டு அவர்களை மோத விட்டு கூத்து பார்த்த ராஜிவ் அரசு//
சகோதர இயக்கத்தவர்களை உயிருடன் கொழுத்திய புலிகளுக்கு அப்போது இது விளங்க வில்லையோ?
பார்த்திபன்
//விடுதலைக்காக வெளிக்கிட்ட பல இயக்கங்களை கூறு போட்டு அவர்களை மோத விட்டு கூத்து பார்த்த ராஜிவ் அரசு – இளங்கோ//
இளங்கோ; ஊர்மிளாவிற்காக பிரபாவும் உமாவும் சண்டை போட்டதும் ராஜிவ் சொல்லித் தானோ நடந்தது ??