இலங்கை போக்குவரத்து சபை மீது பிரயாணிகள் வைத்துள்ள நம்பிக்கை இழக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. அதனைக் காப்பாற்றுவோம் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். பலங்கொட பஸ் டிப்போவை 37ஆவது மாதிரி டிப்போவாகத் தரமுயர்த்தும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அண்மையில் நடைபெற்ற இவ்வைபத்தில் உரையாற்றிய அமைச்சர், தற்போதைய அரசாங்கம் இலங்கை போக்குவரத்துச் சபையை சரியான பாதையில் கொண்டு செல்கிறது. போக்குவரத்துச் சபை ஊழியர்களின் அர்ப்பணிப்புடனான சேவை காரணமாக அதன் பஸ்களின் எண்ணிக்கை 5200 ஆக அதிகரித்துள்ளது என்று மேலும் குறிப்பிட்டார்.