தன்கட்சியை சேர்ந்த குடுமி ஜெயாவின் ஊழல்களை கேள்வி கேட்க முடியாத உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண ஆளுநர் நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி !

அண்மையில் வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் அண்மித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி  ரணிலை கைப்பொம்பையாக பாவித்து தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகி, வட மாகாண ஆளுநர் பதவியை அரசியல் இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் முன்வைத்துள்ளார்.

இலஞ்சமாக வழங்கப்பட்டதா வட மாகாண ஆளுநர் பதவி | Bribery Charges Against Northern Governor

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். குறித்த செவ்வியில் மேலும் பேசிய அவர்,

“ தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகியமைக்காக கொடுக்கப்பட்ட இலஞ்சத்தை பதவியாக பெற்றுக்கொண்டவரே தற்போதைய வடக்கு ஆளுநர். அவர் நிச்சயம் பெற்றிருக்கக் கூடாது, வடக்கு மாகாண ஆளுநர் பதவியை பெறுவதற்காகவே தேர்தல் ஆணைக்குழுவில் இருந்த பதவியை இழந்தது உண்மை.

ஒரு பதவியை பெறுவதற்காக இன்னுமொரு பதவியை இழந்து இருப்பது மக்கள் நலன் சார்ந்த விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், ஆளுநர் பதவியை விட ஜனநாயக முறைமையோடு சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் பதவியென்பது முக்கியமான ஒன்று.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் எனும் முக்கியமான பதவியை துறந்து, இந்த ஆளுநர் பதவியை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட அம்மையாரை நான் கவலையோடு பார்க்கிறேன்.” என அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக உடனடியாக குரல் கொடுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் தன்னுடைய கட்சிக்காரர் செய்த ஊழல்களுக்கு மட்டும் துணைபோகின்ற ஒரு அவலமான நிலையும் – அதனை கண்டிக்காத நிலையம்  காணப்படுகின்றது.

இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்திருந்தது.  ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிந்திருந்த நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பிலும் – பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பிலும் தேசம் நெட் அதிக கவனம் செலுத்தி இருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளராக உள்ள ஜெயசந்திரன் எனும் குடுமி ஜெயா தொடர்ச்சியாக பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டவர் என்பதுடன் – சாதிய மனோநிலையில் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பாக அச்சமுதாயத்தின் பெண்களை தன்னுடைய இச்சைகளுக்காக பயன்படுத்துகின்ற ஒரு அராஜகப் போக்கில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார். பொதுவெளியில் கூட பெண்களை மிக இழிவாக தரக்குறைவாக கதைக்கக்கூடிய மனோநிலையில் உள்ள குறித்த ஜெயச்சந்திரன் என்பவரை ஆதரிக்கின்ற –  அவருடைய சக பாடிகளுள் ஒருவரே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான  உமாசந்திரா பிரகாஷ் ஆவார்.

“ஆம், தமிழ் ஒரு பொது உடமை, உலகத்தில் முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ்” என்ற வாக்கியத்தோடு முகநூலில் வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் உள்ளார். ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டு வந்ததில் இவருக்குள்ள பங்கை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தான் ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டுவரவில்லை என்றும் ஆனால் ஜெயந்திரனுடைய உறவுகள் பற்றித் தனக்குத் தெரியும் என்றும் அவருடைய சினேகிதிக்குத் தெரிவித்துள்ளார். ஜெயந்திரனுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு அரசியல் வேறு அதனால் தான் அவருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க தான் முன்வந்தாக இவர் தன்னுடைய சினேகிதிக்கு விளக்கமளித்துள்ளார். தன்னை பெண்ணியவாதியாகவும் காட்டிக்கொள்ளும் உமாசந்திர பிரகாஷ் ஜெயந்திரனின் தாய்வழி உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உமாசந்திர பிரகாஷ் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மூன்று பெண்களின்: ஜெயந்திரனின் கொடுமை தாங்காமல் விவாகரத்துக்குக் கோரி நிற்கும் இரு பிள்ளைகளின் தாய், திருமணமாகாமலேயே குழந்தையுடன் தற்போது ஜெயந்திரனின் கீழ் அடி உதை வாங்கி வாழும் ஒரு பெண் குழந்தையின் தாய், குழந்தை முகம் கலையாத தற்போது வசீகரிக்கப்பட்ட பெண் – என அனைவரின் அவலத்தையும் நன்கு அறிந்தவர். ஆனாலும் ஜெயந்திரனின் பணத்துக்காக லக்ஸ் ஹொட்டலுக்காக இவற்றை சகித்துக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகம் லக்ஸ் ஹொட்டலிலியே இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் நேற்றையதினம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் உமாசந்திர பிரகாஷ் மேற்கண்டவாறு ஆளநர் நியமனம் பற்றி விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *