முல்லைத் தீவில் புதுமாத்தளன் பகுதியில் அமைந்துள்ள மக்கள் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் செஞ்சிலுவைச் சர்வதேசகுழு தனது மனிதாபிமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அந்த அமைப்பின் பேச்சாளர் செய்தி ஏஜென்ஸி ஒன்றுக்கு இத்தகவலை நேற்றுத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள மக்களுக்குமான மனிதாபிமானப் பணிகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணிகளை முன்னெடுக்க நூற்றுக்கு மேற்பட்ட தொண்டர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் புதுமாத்தளன் பகுதியில் இருந்து மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள். அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் எமது பணியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளனர் என்றார் அவர்.