சிறையில் வருண் காந்தி: மேனகாவுக்கு அனுமதி மறுப்பு

rahul.jpgமத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வருண் காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். தீவிரவாதிகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதை தொடர்ந்து, பிலிபிட் சிறையில் இருந்து இட்டா சிறைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவரை சந்திக்க அவரது தாயார் மேனகா காந்தி சென்றார். “தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும் ஒரு கைதியை வாரத்துக்கு 2 முறை மட்டுமே சந்திக்க சட்டத்தில் இடமுண்டு. அவரை ஏற்கனவே ஒரு முறை சந்தித்து விட்டதால் 8-ந் தேதிக்கு பிறகே சந்திக்க முடியும்” என்று கூறி மாவட்ட கலெக்டர் கவுரவ் தயாள் அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். இது பற்றி மேனகா காந்தி கூறுகையில், “இது எனக்கு இழைக்கப்பட்ட அநீதி. மாயாவதி ஒரு தாயாக இருந்தால் உணர முடியும். நியாயமற்றது, சட்ட விரோதமானது” என்று கூறினார்.

Show More
Leave a Reply to indiani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பல்லி
    பல்லி

    இதுநான் நினைக்கிறேன் நேரு குடும்ப பிரச்சனை என. அதனால் இதில் எமக்கு என்ன வேலை. அவர்களாச்சு அவர்கள் குடும்பம் ஆச்சு. வருண் சித்தி சிந்திப்பார் அது வரை பொறுமை காப்பதுதான் தங்கள் பேச்சுக்கு தண்டனை.

    Reply
  • indiani
    indiani

    இவர்கள் எந்த அளவுக்கு எம்மை எல்லாம் முட்டாள் ஆக்குகிறார்கள் என்பதை நீங்கள் கட்டாயம் விளங்கவேண்டும் வருண் காந்தியை எதிர்காலத்தில் இந்திரா காங்கிரஸ்க்கு எதிரான ஒரு பலம் பொருந்திய நிலையில் கொண்டுவர வேண்டும் என்றால் வருண் காந்தியை சில தடலைகள் என்றாலும் சிறைக்கும் இதபோன்ற பிரச்சினைகளில் திட்டமிட்டு ஈடுபடுத்துவார்கள் எனது கணிப்பு இதுதான் இந்த விடயத்தில் அரசும் காங்கிரஸ்ம் தவிர்க்க முடியாதபடி செயற்ப்படும்.

    இந்த விடயத்தில் ஆளும் வர்க்கங்கள் மிக சரியாக தமது பாதைகளை தெரிவு செய்வார்கள் நீங்கள் பொறுத்திருங்கள் இனிவரம் காலங்களில் ஒரு நாள் வருண் காந்தி இந்தியப் பிரதமராக வருவார் அன்றும் நாம் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருப்போம். எது எப்படி இருப்பினும் காந்தி குடும்பம் ஆட்சியில் இருக்கும்.

    Reply