கருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருந்து அச்சுறுத்தல் கடிதம்

karunanithi.jpgதமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் பெயரில் அச்சுறுத்தல் விடுத்து மர்மக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை நகர காவற்துறை ஆணையாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதிக்குத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய மத்திய அரசின் உள்துறையிடமிருந்து ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ‘இசெட் பிளஸ்’ அளவுகோலின்படி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 3ஆந் திகதியன்று முதல்வரின் கோபாலபுர இல்ல முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சின்னம் அச்சடிக்கப்பட்ட தாளில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பல்லி
    பல்லி

    தலைவர் வாக்கு சீட்டை பெற அணுதாபஅலை வருமென நிங்கள் நினைத்தன் விளைவே இந்த கடிதமாக இருக்குமென ஜெயலலிதா சொல்லுவாரே. காரனம் ஜெயலலிதா இப்படி புலிகள் அச்சுறத்தல் இருக்குதென சொல்லும் போதெல்லாம் அப்படியான இலக்கிய சுவைநகை கொடுத்தவரல்லவா நீங்கள். இருப்பினும் தாங்கள் ஜெயலலிதாவுக்காக ஈழ தமிழர்மீது பகையை காட்ட வேண்டாமே. புலி வேறு ஈழ தமிழர் வேறு என்னும் உங்கள் பேச்சு உன்மை ஆகவே ஈழ தமிழர் தமிழக பொலிசாரால் வேதனை படுத்தும்படி உங்கள் செயல்கள் இருக்காதென பல்லி நினைப்பது தமிழனாய் நியாயம்தானே.

    Reply
  • தேர்தல் ஸ்டண்ட்மாஸ்டர்
    தேர்தல் ஸ்டண்ட்மாஸ்டர்

    தேர்தல் சமயத்தில் இப்படிப்பட்ட குழப்பங்கள் தமிழகத்திற்குள் காமடி விளையாட்டுக்கள். ஆனால் சீரியஸாக சில விஷயங்களை முடிக்க வேண்டிய இலங்கைத் தமிழர்களும் அல்லவா காமடி பண்ணுகிறார்கள். தொழிற்சாலையும், தொழிலாளர்களும் இல்லாத, சி.டபிள்யு.ஐ. யின் விலையாட்டுக்கள் காமடியில்லாமல் என்ன. உஷாரில்லாமல் விட்டிருந்தால், இலங்கைத் தமிழர்கள் வெள்ளைக் காரர்களிடம் காட்ட எடுத்த, எடுக்கும், “இரத்தம் சொட்ட, சொட்ட வெளியிடும் புகைப்படங்களை”, “போஸ்டர் அடித்து” கலைஞர் தேர்தலுக்காகப் பயன்படுத்தியிருப்பார். ஜெயித்த பிறகு “லாஜிக்கை” கேட்டால், இந்த அச்சுறுத்தல் கடித விளையாட்டை, அப்போது செய்திருப்பார்.

    Reply