நான் நளவன் என்பதால் என்னை ஆவாக்குழு, போதைப்பொருள் கடத்துபவன் என்கின்றனர் என யாழ்ப்பாண சிவில் சமூக நிலைய தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
அருண் சித்தார்த் தொடர்பிலும் அவர் மீதான விமர்சனங்கள் தொடர்பிலும் – யாழ்ப்பாணத்திலுள்ள சாதிய அடக்குமுறை தொடர்பிலும் தேசம் திரையுடன் இடம்பெற்ற நேர்காணல்.
முழுமையான காணொளியை காண கீழேயுள்ளLink ஐ கிளிக் செய்யவும்..!
T. Shan
சாதிகள் இல்லாத தமிழர் பூமி உருவாக வேண்டும். யாழ் இந்துக் கல்லூரி என்றுமே அதைத்தான் ஊட்டி வளர்த்தது. அது இன்றுவரை உள்ள அதிபர் வரை தொடர்கிறது. தொடரும்.
ஆனால் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோர் என பொதுவாக இனங்காணப்பட்டவர்களுக்கு யாழ் இந்துவில் இடம் கொடுக்கப்படவில்லையாயின் அதன் உண்மைத் தன்மையை அறியாது sensitive ஆன area களை touch பண்ணி பிரபல்யம் தேடுவதற்கா thesamnet முயல்கின்றது என்ற ஐயப்பாடுகள் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.
உண்மையில் சமூக அக்கறை கொண்ட வலைப்பதிவாக thesamnet இருக்குமாயின் அவர்கள் எவ்வாறு சமூகவிரோதச் செயல்களுக்கு துணை போகின்றவர்கள் என பொதுவாக இனங்காணப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள்?
-கவலைகளுடன்
T. Shan
இன்னுமொரு மாறுபட்ட எடுத்துக்காட்டு …
டொமினிக் ஜீவா- ஒரு சிறந்த சமூக சிந்தனையாளர். தமிழ் இலக்கியவாதி.
1993/1994 ம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு சிறப்பு விருந்தினராக எமது பாடசாலைக்கு ( யாழ் இந்துக் கல்லூரிக்கு ) அழைத்து இருந்தோம். முழு ஆதரவையும் யாழ் இந்துக்கல்லூரியின் நிர்வாகம் தான் தந்தது.
அன்று , அவர் தான் சிறு வயதில் பள்ளியில் தொடங்கி சமூகத்தில் சந்தித்த சவால்களை எல்லாம் தகர்த்து எவ்வாறு வளர்ந்தார் என்று ஒரு நீண்ட தனது வாழ்க்கை அனுபவத்தை எம்மோடு பகிர்ந்து கொண்டார். எவ்வாறான சாதியக் கொடுமைகளை எமது சமூகம் செய்து இருந்தது. அவற்றை தகர்க்க யாழ் இந்துக் கல்லூரி என்றுமே பின் நிற்கப் போவது கிடையாது. அவ்வாறான பாசறையில் இருந்து வந்தவர் தான் இன்றைய அதிபரும்.
நான் அறிய ஈழத்திலே சாதியத்தை பார்த்து அனுமதி கொடுக்கும் இழிவு நிலை , புகழ் பூத்த பாடசாலைகளில் குறிப்பாக தமிழர் விடுதலைப் போராட்டங்கள் ஆரம்பித்த காலங்களின் பின்னர் நடைபெறவே இல்லை.
இலங்கைப் பேரினவாத மற்றும் இராணுவ புலனாய்வு மற்றும் அவர்களினால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் என்பவற்றின் ஆசீர்வாதங்களுடன் சமூகவிரோதச் செயல்கள், வாள் வெட்டு , போதைப் பொருள் பாவனை என்று இன்று எமது சமூகம் அங்கு வலிந்து உருவாக்கப்பட்ட பல சவால்களை எதிர்நோக்கி சந்தித்துக் கொண்டு இருக்கின்றது . அவ்வாறானவர்களை அடையாளம் கண்டும் , நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கி செல்கின்றார்கள்.
இதுதான் உண்மை.