தமிழ் மக்கள் கொல்லப்படுவதை ஐ.நாவால் தடுக்க முடியவில்லை : ஜோன் ஹோம்ஸ் மீது புலிகள் குற்றச்சாட்டு

nada-_jhon.jpgஐக்கிய நாடுகள் சபை தனது உறுப்பு நாடான இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படும் போது அதனை தடுக்க முடியாத நிலையில் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகத் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அக்கடிதத்தில் ‘’எமது பகுதியில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களும் மனிதாபிமான உதவிகளும் சென்றடையும் வண்ணம் வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக விடுத்துள்ள வேண்டுகோளை எமது அமைப்பு வரவேற்கின்றது. உடனடியான போர் நிறுத்தம் வேண்டும் என்ற எமது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். ஒவ்வொரு தடவையும் நாம் இதனைக்கூறுவதும் உங்களுக்கு தெரிந்ததே.

ஆனால், அரசு அதனை நிராகரித்து வருகின்றது. போர் நிறுத்தத்தை நிராகரிப்பதுடன் சுதந்திரமான பத்திரிக்கையாளர்களும், மனிதாபிமான அமைப்புக்களை சேர்ந்தோரும் எமது பகுதிக்கு வந்து கண்காணிப்பில் ஈடுபடுவதையும், உதவி புரிவதையும் அரசு தடுத்தும் வருகின்றது. அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடக்க வேண்டும் என எமது அமைப்பிடம் இருந்து எதிர்பார்க்கும் உலகம், அதே அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளை மதித்து நடக்குமாறு தன்னை ஜனநாயக நாடாக கூறிக்கொள்ளும் சிறிலங்கா அரசை கோருவதுடன் நாள் தோறும் எறிகணை வீச்சுக்களினால் கொல்லப்படும் மக்களின் மனித அவலங்களை நிறுத்தவும் முன்வர வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு என்னும் வரையறைக்குள் அடங்கவில்லையா? சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை அனைத்துலக சமூகம் நிறுத்துவதற்கு முன்வராத போது அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பிற்கு துணை போவதாகவே நாம் கருத முடியும். சிறிலங்கா .நா. சபையில் உறுப்புரிமையுள்ள நாடு. ஆனால் அதன் உறுப்பு உரிமையுள்ள நாடு ஒன்று நாள் தோறும் ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவிப்பது தொடர்பாக .நா. அதிக கவனம் கொள்ளவில்லை. ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணி தாய்மார்களும் எறிகணை வீச்சுக்களினாலும், பட்டினியாலும் நாள்தோறும் இறப்பை சந்தித்து வருகின்றனர்.

சிறிலங்காவில் இருந்து தமிழ் மக்களை முழுவதுமாக இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையையே அரசு மேற்கொண்டு வருகின்றது. சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளை எதிர்க்கும் முகமாகவே தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். எமது அமைப்பும் அவ்வாறே உருவாகியது ஆனால், உலகம் எமது அபிலாசைகளை இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை.

தமிழ் மக்கள் தமது அடிப்படை மனித மற்றும் பொது உரிமைகளுக்காகவும், சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும், அடக்குமுறையான சட்டங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவுமே போராடி வருகின்றனர். தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் அழித்தொழிப்பு போரில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கும், தமது வாழ்க்கையை வாழ்வதற்கும், பிள்ளைகளை காப்பாற்றவும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், அனைத்துலக சமூகம் அடிப்படை காரணங்களை புரிந்துகொள்ள மறுப்பதுடன், ஆயுதங்களை கீழே போடுமாறு மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றது. எதற்காக? நாட்டில் உள்ள தமிழ் இனத்தை அழித்த பின்னர் சிங்கள மக்கள் எஞ்சிய மக்களை அடக்கி ஆட்சி புரிவதற்காகவா? வன்னியில் இருந்து மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. அனைத்துலக சமூகம் தமிழ் மக்களின் நிலையில் இருந்தால் அவர்கள் விருப்பத்துடன் அரசின் பாதுகாப்பு தேடி செல்வார்களா? அரச படையினரின் எறிகணைத்தாக்குதலில் உங்களின் ஒரு பிள்ளை கொல்லப்பட்ட பின்னர் மறுநாள் ஏனைய பிள்ளைகளுடன் நீங்கள் அதே அரசின் பாதுகாப்பு தேடிச் செல்வீர்களா?

.நா.வின் நிதி உதவியில் இயங்கிவரும் தங்கும் முகாம்களில் கூட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கப்படுவதில்லை. அங்கு மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஏனைய மக்களும் அங்கு செல்ல வேண்டும் என அனைத்துலக சமூகம் எவ்வாறு எதிர்பார்க்கலாம். மக்களை பலவந்தமாக தடுத்துவைக்க வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளுக்கு இல்லை. தமிழ் மக்களே உங்களுக்கு இதனை தெரிவிப்பார்கள்.

.நா.வின் பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் அவர்கள் கூட வவுனியாவில் மக்கள் தங்கியுள்ள முகாமுக்கு சென்று முயற்சிக்கவில்லை. முகாமுக்கு செல்லும் போது சுதந்திரமான மொழிபெயர்ப்பாளர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் மக்களோ, மருத்துவர்களோ, உதவி அமைப்புக்களோ ஏதாவது கருத்தை தெரிவித்தால் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் என அரசு குற்றம் சுமத்தி வருகின்றது. ஆனால், அரசினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்களை சுற்றி சிறிலங்கா அரசின் கடுமையான கண்காணிப்பு உள்ள போது அவர்கள் எவ்வாறு உண்மையை கூறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to GNANI Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

28 Comments

  • மலைமகன்
    மலைமகன்

    நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நேற்று மாலை வன்னியில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனுடன் தொலைபேசியின் ஊடாக உரையாடியுள்ளார். இந்த உரையாடல் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலக பிரதானி புலித்தேவன் இது தொடர்பில் கருத்துரைக்கையில்,

    தமிழர் பிரச்சினையின் தற்போதைய நிலை தொடர்பாகவும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில், இலங்கையின் நிலவரம் தொடர்பாக பேசப்பட்ட பிந்திய நிலைகள் தொடர்பாகவும் உரையாடப்பட்டதாக தெரிவித்தார். இந்த உரையாடலின் போது, இலங்கை நிலவரம் தொடர்பில் சர்வதேசத்தின் நிலை குறித்து, சொல்ஹெய்ம் விளக்கமளித்தார்.

    சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சொல்ஹெய்ம் இதன் போது தெரிவித்துள்ளார். அதேநேரம், நடேசனும் தமிழர் படுகொலைகள் குறித்து தகவல்களை வழங்கியதாக புலித்தேவன் இன்று காலை குறிப்பிட்டார்.

    நாள்தோறும் வன்னியில் சிறிய நிலப்பரப்புக்குள் கட்டுண்டுள்ள சிறுவர்கள் பெண்கள் உட்பட்ட 100 பொதுமக்கள் வரை படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படுவதாக நடேசன் இதன் போது குறிப்பிட்டார். இந்தநிலையில், கொலைகளை நிறுத்தி உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என நடேசன், சொல்ஹெய்ம்மிடம் வலியுறுத்தினார்.

    அத்துடன் தமிழர்கள், இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறையின் கீழ் வாழ விரும்பவில்லை என்றும், அவர்கள், தமிழ்தேசம் என்ற அபிலாசையுடன் வாழ விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்த நடேசன், இதற்கு சர்வதேச முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என சொல்ஹெய்மிடம் தெரிவித்தார்.

    Reply
  • santhanam
    santhanam

    ஏன் இந்த தடுமாற்றம் ஏரிக் சொல்ஹெய்ம் யிடம் கேட்டே மகிந்தவை பதவியில் அமர்த்தினீர்கள். காலம் கடந்த ஞானம்.

    Reply
  • சீவன்
    சீவன்

    அது மட்டுமா எரிக் சொல்கைம் முதுகில குத்திட்டார் என்டு கடந்தமாதம் புலிகளின் நோர்வே பொறுப்பானவர் அனைத்து நோர்வே ஊடகத்திலும் அறிக்கை போட்டவர். நோர்வே புலி எரிக் என்ட வன்னி புலி எரிக்குக்கு தொலைபேசி எடுத்து மன்னிப்பு கேட்டுதாம்.

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளுக்கு ஷோட் மெமரி வியாதிதான்.

    வா வா என்று வலிந்து…… இழுத்தாங்க.
    இப்ப நிறுத்து நிறுத்து என்று ஒப்பாரியா இருக்கு.

    ஐநா வரவேண்டாம். போரை நிறுத்தினால் போதும். ஐநா சென்ற நாடுகளில் என்ன நடந்தது எங்களுக்கு தெரியுமென்றவர்கள் ஐநா யுத்தத்தை நிறுத்தவில்லை என்று கோபப்படுறீங்களே? மீசையும் வேணும் கூழும் வேணுமென்றால் இதுதான் நிலமை.

    சொல்கெய்ம் கூப்பிட்ட மாதிரி என்னவோ எழுதியிருக்கிறீங்க? நடேசன் அழுதழுது கூப்பிட்டவராம். அங்கயும் கெளரவ பிரச்சனை. சொல் எப்பவோ கைவிட்டுட்டார். தேசத்தின் குரல் கடைசி மரண வாக்கு மூலத்தில நல்லாத்தான் போட்டு கொடுத்துட்டு போனார். தெரியும்தானே தமிழனின் குணம்.

    மகிந்த உண்மையில தலைவர் சொன்னது போல யதார்த்தவாதிதான். அடுத்தவங்க எல்லாம் முதுகெலும்பில்லாதவர்கள்தான்.

    Reply
  • indiani
    indiani

    புலிகள் தாம் தமது மக்களை கொலை செய்வதை இன்று வரை நிறுத்தவில்லை பிறகு எப்படி ஜ நாவை கேட்க முடியும் முதலில் நீங்கள் சில நடவடிக்கைகளாக உங்கள் கேடயமாக இருக்கும் மக்களை தாமாக போக விரும்பும் மக்களை போக விடுங்கள் பிறகு எல்லோருமாக கேட்போம்.

    Reply
  • thamilan
    thamilan

    புலிகளின் பிரதேசத்திலிருந்து தமிழ்மக்களை இராணுவத்தின் ஆட்கள் சிலர் கொண்டு சென்று சேர்த்து வருகின்றனர். உள்ளே உண்மையாக என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இவர்களின் பசப்பு வார்த்தைகளில் நம்பிச்செல்லும் அப்பாவிகளின் நிலை உண்மையில் பரிதாபகரமானதாக உள்ளது.

    புலிகளின் பகுதியிலிருந்து செல்லும் மக்கள் மாத்தளன் எனும் பகுதியிலிருந்து அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவர்கள் முதலில் அங்குள்ள சிறுகடல் பகுதியூடாக சென்று அதற்கு அப்பாலுள்ள இராணுவத்தினரின் காவல் நிலைகளுக்கு சென்று சேருகின்றனர். இவ்வாறு செல்லும் மக்களை முதலில் சிறுகடலின் கரைப்பகுதியில் தம்மிலிருந்து 50மீற்றர் தொலைவில் நிறுத்தி ஆண்கள் பெண்கள் அனைவரையும் உடைகளை கழற்றுமாறு சொல்கின்றனர் (உடலில் வெடிமருந்துடன் வந்துள்ளனரா என பரிசோதிக்க) இதில் கொடுமை என்னவெனில் பெண்கள் அங்குள்ள ஆண்கள் அனைவரின் முன்னும் முற்றிலுமாக நிர்வானப்படுத்தப்படுவதுதான். இக்காட்சியை புலிகளின் பகுதியிலிருந்து புலிகள் ஏதும் செய்யமுடியாத நிலையில் மனக்கொதிப்புடன் தொலைநோக்கியில் அவதானித்துள்ளதுடன் அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும் காட்டியுள்ளனர்.

    இதன் பின்னர் உள்ளே அழைத்துச் செல்லப்படுவதுடன் இந்தக் கொடுமை முடிகிறதா என்றால் அதுதான் இல்லை. உள்ளே சென்றதும் வந்த அனைவரினதும் உடமைகள் அனைத்தும் முற்றிலுமாக பரிசோதிக்கப்பட்டு அவர்கள் கொண்டுவந்த பணம் நகை என்பன இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றன. பின்னர் மீண்டும் அவ்கள் அனைவரும் நிர்வானமாக்கப்பட்டு (ஆண்கள் பெண்கள்) 100 மீற்றர்கள் நடக்கவிடப்படுகின்றனர். இதனை 20 மீற்றர் தூரத்திலிருந்து இராணுவத்தினர் பார்த்து இரசிக்கின்றனர். அதன்பின்னர் உடைகளை கொடுத்து அணிந்து கொள்ளுமாறு கூறுகின்றனர். பின்னர் ஒரு சி.டி.எம்.ஏ தொலைபேசி ஒன்றை கொடுத்து அவுட் ஸ்பீக்கரில் விட்டு அவர்களிடமிருந்து ஒரு இலக்கத்தை பெற்று அதற்கு டயல் செய்து கொடுக்கின்றனர். அதில் தாம் சுகமாக வந்து சேர்ந்து விட்டதாகவும் ஏனையவர்களையும் வருமாறு சொல்லி கதைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பின்னர் இவர்கள் அனைவரையும் வாகனத்திலேற்றி தர்மபுரம் விசுவமடு கிளிநொச்சி ஒட்டுசுட்டான் எனப்பிரித்து இரண்டு கிழமைகள் ஆண்களை அங்குவைத்து மரந்தறித்தல் காவலரன் அமைத்தல் போன்ற வேலைகள் செய்விக்கின்றனர். பெண்கள் அங்குள்ள கொமான்டர்களின் ஒருநாள் தேவைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் புலி என்றும் புலிச்சந்தேக நபர் என்ற போர்வையிலும் பலர் காணாமல் போகின்றனர். இதன்பின்னரே இவர்களி எஞ்சியோர் முகாங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்களை இங்குவைத்து வேலைவாங்குவோர் சிங்களம் தெரிந்த புலிகளின்பிரதேசத்திலிருந்து சென்றவர்களாவர்

    இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் 100 வீதம் உண்மையானது தகவல் தந்தவரின் பாதுகாப்பு கருதியும் தகவல் கிடைத்த ஊடகத்தின் இரகசியத்தன்மை கருதியும் தகவல் கிடைத்த வழியை இங்கு குறிப்பிடவில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தமிழன் என்ற புனைப் பெயரை வைத்துக் கொண்டு எப்படி உம்மால் இப்படி எமது பெண் சகோதரிகளைப் பற்றிய கேவலமான கருத்துகளை பதிய முடிகின்றது. உமது சகோதரிகள் தாய் போன்றவர்கள் வன்னியில் மாட்டுப்பட்டிருந்தால் இப்படி புலிகளுக்கு வால் பிடிக்க மோசமான கதைகளை புரளிகளாக கிளப்பியிருப்பீரா?? உமமைப் போன்றவர்களுக்கு எமக்கு ஒரு கண் போனாலும் பறுவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டுமென்ற பேராசையில் இப்படிக் கதைகளை கட்டி விடுகின்றீர். நாளை அந்தச் சகோதரிகளின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படும் என்ற எண்ணம் கொஞ்சமும் உம் போனறவர்களுக்கு வருவதுமில்லை. யார் எக்கேடு கெட்டால் உமக்கென்ன பாதிக்கப்படுவது உமது சகோதரிகளா அல்லது தாயா??

    Reply
  • BC
    BC

    Thamilan, இதே பொய் கதையை சில நாட்களுக்கு முன்பும் தேசத்தில் இணைத்தீர்கள். இப்போ மறுபடியும் அதே முயற்ச்சி. நீங்களும் புலியின் திரைகதை வசன குழுவில் ஒருவரோ?

    Reply
  • thamilan
    thamilan

    பார்த்தீபன்
    எல்லா உண்மைகளுக்குமே உள்ள பொதுக்குணம் என்னவெனத் தெரியுமா? ஆமாம் உண்மைகள் எப்போதுமே கசக்கும்…. புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்திலிருந்து பார்க்கும்போதே இராணுவத்தினர் தாம் தூர நின்று கொண்டு பெண்கள் உட்பட அனைவரினதும் உடைகளை கழற்றுமாறு கூறி பார்ப்பதை தெளிவாக பார்க்க முடிகிறது. பெண்சகோதரிகளைப்பற்றி கேவலமாக எழுதுகிறேன் என்று கூறுகின்றீர்களே சிங்களவனை நம்பிச்செல்லும் எமது பெண் சகோதரிகளின் உண்மை நிலை இதுதான் இதை ஏன் உணர மறுக்கிறீர்கள். வன்னியிலுள்ள உண்மை நிலைகளை எழுதுபவர்கள் எல்லாம் புலிகளுக்கு வால்பிடிப்பவர்கள் என்றும் புலியின் திரைக்கதை வசனக்குழுவில் உள்ளவர் என்றும் புரணிபாடுகிறீர்கள்….. எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இருகண்ணும் போகவேண்டும் என்ற பேராசையில் இப்படிக்கதைகளை கட்டி விடுவதாக கூறியுள்ளதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை! எமது மக்கள் எமக்கு எதிரிகள் அல்லவே. இந்த விடயங்களையும் எழுதும் எனது சகோதரியும் அவரின் குழந்தைகளும் உறவுகளும் இன்னும் மானத்துடன் வன்னிமண்ணிலேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இனிமேலும் வாழ்வார்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    தமிழன் என்பவன் எப்படி எல்லாம் இருப்பான் என்பதுக்கு இந்த தமிழன் ஒரு உதாரனம். சரி இதுநடக்க வில்லையென்றோ அல்லது அது எப்படி நடந்தது என்றோ இங்கு பல்லி ஒரு பெண்ணின் உனர்வை அறுவைசிகிச்சை செய்ய வரவில்லை. தமிழன் புலி பற்றி எழுத பல விடயம் உள்ளது. மக்கள் இன்னல்களும் அப்படிதான். இவைகள் தெரியா விட்டால் யாரிடமாவது(தலைவர் போல்) எழுதி வாங்கி உமது கருத்தாக எழுதும். தேசம் நண்பர்கள் குறைநினைக்க மாட்டோம். அதை விட்டு மூன்று பத்து ரூபா என சந்தையில் சட்டை வித்தது போல் பெண்களின் உடுப்பை தயவுசெய்து களட்ட வேண்டாம். புலிகள் தூரத்தில் இருந்து பூதகண்னாடியில் பார்த்ததாகவும் அதை மக்களுக்கு காட்டியதாகவும் தங்கள் சிறுகதை முடிகிறது. அப்படியானால் ஏன் பூத கண்ணாடியில் தெரிந்த அந்த கொடூர செயலை செய்த ஆண்மீகவாதிகளை தாக்கவில்லை.?? அதென்ன மக்களுக்கு கூப்பிட்டு காட்டுவது?? இதால் யாருக்கு லாபம்?? சுத்தி வளைத்து எழுதினால் இது (நீங்கள் பார்த்தது ) புலியின் செயலாகதான் படுகிறது. எதிரிமீது பழி போட இதை விட மோசமான காரியங்களும் புலி செய்யும் என்பது கடந்த கால அனுபவம். (அரசு செய்யாதென்று பல்லி சொல்லவில்லை புலியும் செய்யும் என்பது தமிழனுக்கும் தெரியுமென நினைக்கிறேன்)
    பல்லி தொடரவே செய்யும்.

    Reply
  • மாயா
    மாயா

    பாவம் தமிழன். சிங்களவனை விட மோசமாக நடந்து கொள்கிறீர்கள்? உண்மையில் சிங்களவனிடம் செத்தாலும் பரவாயில்லை. தமிழனிடம் அடிமைப்பட்டு சாகக் கூடாது?

    ஏன் தெரியுமா? தமிழன் தன் சுயநலத்துக்காக எதையும் செய்யக் கூடியவன்.கதைக்கக் கூடியவன். சிங்களவனுக்கு அந்தக் குணம் இல்லை. இருந்திருந்தால் இங்க எழுதுற யாரும் வெளிநாடுகளுக்கே வந்திருக்க முடியாது. சிங்களவன் வெளிநாடு போற எவனிடமும் கப்பம் பெறயில்ல. யாரையும் பொறுப்பு வச்சுப் போட்டு போ என்று கூட சொல்லயில்ல.

    ஆனா தங்கத் தமிழன் என்ன செய்யிறான்? நாட்டுக்குள்ளேயே போறதுக்கு விடுறான் இல்லை. என்ன கொடுமை. வன்னிக்குள்ள போய் நின்று கொண்டு வன்னி மக்களையே ஆளுறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை? புலிகள்தான் கப்பம் கேக்கிறது.கப்பம் கொடுத்தால் வெளிய விடுவாங்க. இல்லை ஒருத்தரை பிணை வைக்கவேணும்.

    இப்பவும் குற்றுயிரும் குலை உயிருமா இருக்கிற ஆக்களுக்கு சிங்களவன் கொடுக்கிற ஆறுதலில் ஒரு சதமேனும் புலியால இல்லை. இது உலகம் வெகு கெதியா உணரப் போகுது. இது அரச பயங்கரவாதமில்லை. புலிப் பயங்கரவாதம்:lankaenews.com/tamil/news.php?id=1043

    புலிகளின் பகுதிகளில் இருந்து வெளியேற முயன்றவர்களுக்கு புலிகள் கொடுத்த தண்டனை. புலி புலி என்று உயிரை விட்டு வாழ்ந்த அந்த மக்களுக்கு கொடுத்த சன்மானம். இதை புலிகள் செய்யவில்லை என்று சொல்ல வேண்டாம். இது வந்தவர்கள் சொன்னவை. இதை புலிகள் அரசு போட்ட குண்டுகள் என்று அதிலும் லாபம் பெற முயன்றார்கள்.

    படங்களை பாருங்க. சுத்தி நிக்கிற யாராவது அழுறாங்களா? ஐயோ என்று கதறுறாங்களா? இல்லை. வேடிக்கை பார்க்கிறாங்க. சும்மா நடந்து அல்லது கடந்து போறாங்க. ஏன்? புலிகள் தண்டனை கொடுத்தால் ( ஏனைய இயக்கங்களும்தான்) மக்கள் எதிர்த்து பேச மாட்டார்கள். அழ மாட்டார்கள். அது சரியென்றே சோத்து மாடு போல தலையாட்ட வேண்டியதுதான்.

    பெண்களுக்கு கருத்தடை ஊசி போடுறதா செய்தி வந்தது? அதுவும் பெயர் சொல்ல விரும்பாத டாக்குத்தர் சொன்னார் என்று. அவர் என்ன டொக்டர். ……… அவரல் செஞ்சிலுவை சங்கத்துக்கு சொல்ல முடியாதா?

    அதற்கு ஒரு சிங்கள டொக்டர் சொன்னார். “அதுகூட நல்லதுதானே? ஏற்கனவே பலமிழந்து போயுள்ள ஒருத்தருக்கு குழந்தையொன்று கிடைத்தால் அந்தக் குழந்தையும் பலவீனமாகவே பிறக்கும். அப்படியான ஊசி 3 மாதத்துக்குத்தான் வேலை செய்யும். அதுக்கு பிறகு ஆரோக்கியமான குழந்தையொன்றை பெற்றுக் கொள்ளலாம்.” என்றார் நக்கலாக. சிங்களவனை மடையன் என்று சொன்ன தமிழன் எவ்வளவு மடையர்களை உருவாக்கி விட்டார்கள் பாருங்க.

    வரும் தமிழர்கள் அனைவரும் செஞ்சிலுவை சங்க உதவியோடேதான் வருகிறார்கள். அவர்கள் அரசுக்கு எதிராகவே கருத்துகளை முன்வைக்கிறார்கள்? அறிக்கைகளாக வெளியிடுகிறார்கள்? நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையென்றால் அங்கு பொது மக்கள் இல்லை. அனைவரும் புலிகள் என்றல்லவா சொல்ல வேண்டும். அரச படைகள் 30 நிமிசத்தில வானம் கடல் நிலம் என்று எல்லா பக்கத்தாலும் குண்டு போட்டு முடிச்சிடுமே?

    தப்பி வந்தவர்கள் காட்டிக் கொடுக்கிறார்கள். யார் புலி ? யார் புலியில்லை என? எனவே சில தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அது உண்மை. அவர்களை உடனே நம்பி வெளியே விட மாட்டார்கள். அதுவும் உண்மை.

    ஆனால் இந்த கெட் வோக் போறது? நிர்வாண சிலுமிசம் ? தொலை நோக்கி கருவி எல்லாத்தையும் 6 – 5 சே…நாலறிவும் இல்லாத உங்கள மாதிரி புலிகள்தான் நம்பும்? எவ்வளவு தூரத்துக்கு உங்கட சட்டலைட் தொலை நோக்கி வேலை செய்யுது thamilan. இனியும் இதுமாதிரி எழுதி உள்ளதையும் கெடுக்காதீர்? அங்க உள்ள பெண்களை இப்படித்தான் சொல்லி பலியாக்கிறார்கள் என்பது குருடனுக்கு கூட புரியும்.

    சிறீலங்கா உடனடியாக செய்ய வேண்டியது, வந்துள்ள மக்களின் கரங்களால் எழுதப்பட்ட உண்மைகளை கொப்பி பண்ணி வானிலிருந்து தூவுவது ஒன்றே? அரசு சரியென்பதல்ல. அவன் எதிரி. புலியே நீ யார்? “நீயா எம்மை மானபங்கப்படுத்துவது? நாங்கள் செய்யாத குற்றத்துக்காக ஏன் கூனிக் குறுகி நடக்க வேணும்? சிந்தித்தாயா? உனக்காக எம் நிலத்தை தந்து உயிர் தந்தோமே? எமக்கு உன் வாழ்த்தா? பாராட்டா?” என்று காறித் துப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை. உனக்கு சிறீலங்கா தேசத்திலருந்து மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழர் மனங்களிலிருந்தும் துடைத்தெறியப்படுவாய். முகாம்களுக்கு தொலைபேசி தொடர்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. நிச்சயம் விரைவில் உண்மைகள் வெளிவரும்.

    உங்கள மாதிரி தமிழனுக்கு தமிழீழம் ஒன்று தேவையா?
    புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் இல்லை
    புலிகளின் தாகம் தமிழரில்லாத தாயகம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தமிழன் அண்ணை உங்கள் புழுகு மூட்டைகளைள வன்னிக்குச் சென்று வந்த பல ஊடகவியலாளர்களே போட்டுடைத்து விட்டார்களே. இன்றுவரை வன்னியில் புலிகளின் பிடிகளிலிருந்து மீண்டு வந்திருக்கும் மக்களோ அல்லது அங்குள்ள முகாம்களுக்கு சென்று மக்களைச் சந்தித்த சமய குருமாரோ ஏனைய அமைப்பினரோ இப்படியொரு குற்றசச்சாட்டை வைக்கவில்லை. மாறாக உம்மைப் போன்ற புலியாதரவாளர்களும் வெளிநாட்டில் சுற்றுலாவிலிருக்கும் கூத்தமைப்பினரும் தான் இப்படிடியான புரளிகளைக் கிளப்பி விடுவதில் முன்னிற்கின்றீர்கள்.

    //எனது சகோதரியும் அவரின் குழந்தைகளும் உறவுகளும் இன்னும் மானத்துடன் வன்னிமண்ணிலேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இனிமேலும் வாழ்வார்கள்.//
    உமது இக்கருத்தே உமது கபட நாடகத்தைப் பறைசாற்றி விட்டதே. வன்னியில் புலிகளின் பிடியிலிருப்போர் மாத்திரம் மானத்துடன் வாழுகின்றார்கள். மற்றவர்களெல்லாம் மானமிளந்தவர்களென காட்டி யாரை ஏமாறற்றப் பார்க்கின்றீர்………….

    Reply
  • thamilan
    thamilan

    பல்லி
    தொலைநோக்கியில் பார்த்த புலிகளுக்கு இராணுவத்தை தாக்குவதென்பது சிறிய விடயம் ஆணால் தாக்கியிருந்தால் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் பல்லி. ஈவிரக்கமற்ற கொடியவர்கள் உடனே அங்குள்ள மக்களைத்தான் கொண்று போட்டிருப்பார்கள். அதனால் தானோ என்னவோ புலிகள் அவர்களை தாக்கவில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஆனால் இந்த கெட் வோக் போறது? நிர்வாண சிலுமிசம் ? தொலை நோக்கி கருவி எல்லாத்தையும் 6 – 5 சே…நாலறிவும் இல்லாத உங்கள மாதிரி புலிகள்தான் நம்பும்? எவ்வளவு தூரத்துக்கு உங்கட சட்டலைட் தொலை நோக்கி வேலை செய்யுது thamilan. இனியும் இதுமாதிரி எழுதி உள்ளதையும் கெடுக்காதீர்? அங்க உள்ள பெண்களை இப்படித்தான் சொல்லி பலியாக்கிறார்கள் என்பது குருடனுக்கு கூட புரியும்.// – மாயா

    மாயா; தமிழன் போன்ற சுயநலமிகளுக்கு யார் எக்கேடு கெட்டாலும் பறுவாயில்லை, அதனால் தங்களுக்கு நன்மை கிடைத்தால் போதுமென்று வாழ்பவர்கள். இதற்காக இவர்கள் இப்படி புரளிகளை மட்டுமல்ல எதையும் செய்யத் தயங்காதவர்கள் கூட. இவர்களின் அநியாயங்களுக்கு முடிவுகாலம் நெருங்கி விட்டது. அப்போதாவது இவர்கள் தங்கள் தவறுகளை உணர்வார்களோ தெரியாது.

    Reply
  • மாயா
    மாயா

    //தொலைநோக்கியில் பார்த்த புலிகளுக்கு இராணுவத்தை தாக்குவதென்பது சிறிய விடயம் ஆணால் தாக்கியிருந்தால் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் பல்லி. ஈவிரக்கமற்ற கொடியவர்கள் உடனே அங்குள்ள மக்களைத்தான் கொண்று போட்டிருப்பார்கள். அதனால் தானோ என்னவோ புலிகள் அவர்களை தாக்கவில்லை.// – thamilan

    உண்மைதான் thamilan . அதனால்தான் சிறீலங்காவின் இராணுவ தரப்பு முக்கியஸ்தர்களான நடேசனும், பத்மநாதனும் மக்களைக் காக்க போர் நிறுத்தம் கேட்கின்றனர். புலி சார்ந்த கோத்தபாயாவும், மகிந்தவும் இல்லை என்கின்றர். எல்லாம் கெதியில சனம் கக்கும். அப்பதான் தெரியும்.

    Reply
  • thamilan
    thamilan

    பார்த்திபன்
    இராணுவத்தின் கொடும்பிடியிலிருக்கும் மக்கள் எப்படி சொல்வார்கள்? ஜோன் ஹோல்ம்ஸ்க்கே மொழிபெயர்க்கிறேன் பேர்வழி என்று சரட்டு வெடி விட்டு காதில் பூச்சுத்தி அனுப்பியவர்தானே எமது உலகநாயகன் மகிந்த. கழுத்தில் கத்தியை வைத்திருப்பவன் சொல்லச் சொல்வதைத்தானே அதன் பிடியில் நிற்பவன் சொல்வான்.

    Reply
  • GNANI
    GNANI

    Tamils race was irritate the colonial rullers thats why they called us mad race,later periyar E.V.RAMASAMY called the same thing as well.
    We proud and violence not listen to others and so on.

    Reply
  • accu
    accu

    தமிழன் நீர் தமிழ்வின் எனும் புலிகளின் பச்சைப்புழுகு இணையத்தை பிரதி எடுத்து பின்னூட்டம் விட்டுள்ளீர். பின் நீர்தான் அதை எழுதியது போல் புலுடா வேற.
    நீர் தமிழன் என்ற பெயரில் எழுத உமக்கே வெட்கமாய் இல்லையா? இன்றைய பிபிசி தமிழோசையைக் கேளும் மக்கள் புலிகளின் கொடுமையை புட்டுப்புட்டு வைப்பதை. அதையும் இராணுவம்தான் பேசவைத்ததென்று கொஞ்சமும் விவஸ்தை இல்லாமல் சொல்லுவீர்கள். 30வருடமாய் உங்கள் பிழைப்பு இப்படித்தானே ஓடுகிறது. வெகு விரைவில் வன்னி மக்கள் இராணுவத்துடன் சேர்ந்து புலிகளை அழிப்பார்கள் அப்போ உம்மைப் போன்ற போலிகளும் முழிபிதுங்குவார்கள். அநியாயம் செய்தவர்களுக்கு மட்டுமல்ல அதற்க்குத் துணைபோனவர்களுக்கும் தண்டனை உண்டு.

    Reply
  • பல்லி
    பல்லி

    தமிழன் ஏன் இந்த வில்லு பாட்டு. ஒரு விடயத்தை பின்னோட்டமாகவோ அல்லது பதில் பின்னோட்டமாகவோ விடுவதுக்கு ஒரு பேப்பரையோ அல்லது பரபரப்பை பரபரப்பாக படித்தால் போதாது. சிறிதேனும் ஈழ பிரச்சனை தெரிய வேண்டும் அத்துடன் சமூக நோக்கு கண்டிப்பாக வேண்டும். நான் எழுதியது பூதகண்ணாடியால் பாக்கும் தூரத்தில் ராணுவம் நின்றால் இந்த விடுப்பு பார்பதை விட்டு விட்டு (மக்கள் நிக்கும் போதல்ல) அதை மக்களுக்கும் தொடர் காட்டுவது போல் காட்டி பிச்சை எடுப்பதை விட தாக்குதல் செய்யலாமே. சிலவேளை அவர்கள் வைத்திருக்கும் பூத கண்ணாடியில் நிர்வானம் மட்டும்தான் தெரியுமோ??

    Reply
  • thamilan
    thamilan

    இதில் பின்னூட்டம் எழுதும் அனைவருக்கும்
    போராட்டம்பற்றியும் ஈழப்பிரச்சனைபற்றியும் நீங்கள் முதலில் விழங்கிக்கொள்ளுங்கள். இன்று துன்பத்தை அனுபவித்து அவலவாழ்வை சுமந்து நிற்கும் மக்களின் இந்த அவலநிலைக்கான முழுமையான பொறுப்பையும் சிங்களவரும் சிங்கள அரசாங்கமும்தான் ஏற்கவேண்டும். தயவுசெய்து வரலாற்றை பாருங்கள் அதன்பின் பேசுங்கள். 1952ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக காலத்துக்குக்காலம் சிங்களவர்களால் எம்மக்கள் மீது கட்விழ்த்து விடப்பட்ட இனவெறி கொலைத்தாக்குதல்களுக்கு புலிகளாகாரணம். 1952 இல் பிரபாகரன் பிறந்து கூட இருக்கவில்லையே அப்படி என்றால்……..?
    புலிகளும் பிரபாகரனும் சுயநலமிகள் அல்ல அவர்கள் சுயநலமிகளாக இருந்தால் கடந்தகாலங்களில் விடுதலை இயக்கங்கள் என்ற பெயரில் இந்திய உளவுத்துறையால் உருவாக்கப்பட்டு பின்னர் தமது பெயர்களுக்கும் செயல்களுக்கும் எந்த தொடர்புமில்லாது காணாமற்போய் இன்று சிறிலங்கா அரசின் ……இவர்களும் சேர்ந்திருப்பார்கள். எமது மக்களுக்கான கடந்த 30 வருடகால போராட்டவாழ்க்கையில் இவர்கள் எதிர்கொண்ட தடைகளும் துன்பங்களும் உங்களுக்கு தெரியுமா?…….. எமது மக்களின் நிலையும் புலிகள் எதிர்கொண்டுவந்த சவால்களும்தெரிய சந்தர்ப்பமில்லைதான். புலிகள் மக்களை கொடுமைப்படுத்துவதாக யார் கூறுகிறார்கள்? வன்னியிலிருந்து வந்த எமது மக்கள் கூறுகிறார்கள் என்றால் அவர்களை அவ்வாறு தயார்படுத்தி கூறவைத்தது யார்? சரி வன்னியிலிருந்து கப்பல் மூலம் அழைத்துவரப்பட்ட அனைத்துமக்களும் சிங்கள அரசால் பாதுகாப்புவலயமென பிரகடனப்படுத்தப்பட்ட இடத்திலிருந்தே அழைத்துவரப்பட்டனர். பாதுகாப்புவலயத்திலிருந்த இந்த மக்கள் எவ்வாறு காயமடைந்தனர்? இதுபற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா சிறிலங்கா அரச இணையத்தளத்தில் இந்தவருட சிறப்பான நகைச்சுவை விருதை தட்டிக்கொள்ள போடப்படும் செய்திகளில் உள்ளது போன்று புலிகளே பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள்மீது செல் தாக்குதல்களை நடாத்தினர் என்ற குழந்தைபிள்ளைதனமான அறிக்கைகளை வாசித்து அதுவே உண்மையென நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். பல்லி….. புலிகளுக்கு பார்ப்பது மட்டும் வேலையாக இருந்தால் சிங்கள அரசு தற்போது நடாத்திக்கொண்டிருக்கும் இந்த யுத்தத்தில் கடந்த இரண்டுவருட காலத்துக்குள் 9368 இராணுவத்தினரை இழந்திருக்காது என்று நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறிங்க?….. .

    Reply
  • BC
    BC

    Thamilan
    புலிகளும் பிரபாகரனும் சுயநலமிகள்.புலிகளும் பிரபாகரனும் இந்த அவலநிலைக்கான காரணத்தை ஏற்று கொள்ள வேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இதில் பின்னூட்டம் எழுதும் அனைவருக்கும்
    போராட்டம்பற்றியும் ஈழப்பிரச்சனைபற்றியும் நீங்கள் முதலில் விழங்கிக்கொள்ளுங்கள். – தமிழன்//

    தமிழன் அண்ணை நீங்கள் மற்றவர்களுக்கு அட்வைஸ் பண்ணுவதை விட முதலில் நீங்கள் ஒழுங்காக ஈழ வரலாற்றையும், போராட்ட வரலாற்றையும் முழுமையாக அறிந்து கொள்ள முயலுங்கள். வெறுமனே தமிழ்வின்னையும் தமிழ்நெற்றையும் பார்த்து விட்டு அது தான் ஈழவரலாறும், போராட்டமும் என்று நினனத்துக் கொண்டு பின்னூட்டம் எழுதினால் நாங்கள் என்ன செய்வது??

    Reply
  • பல்லி
    பல்லி

    தமிழா எமக்கு வரலாறு தெரியாது. எமக்கு தமிழ் தெரியாது. எமக்கு புவியியல் தெரியாது. ஆங்கிலம் தெரியாது. டொச் தெரியாது. சமயம் தெரியாது. பிரன்ஸ் தெரியாது. அட ஏன் விளையாட்டே தெரியாது. ஆனாலும் புலியின் பிறப்பும். அதன் கேடு கெட்ட வளர்ப்பும். அதனால் மக்கள்படும் துன்பமும். தலையின் மாவீரர் உரையும் எல்லாதுக்கும் மேலாக எமக்கு மனித நேயம் சிறிது தெரியும். ஆகவே வரலாறோ அல்லது புல்யாறோ தாங்கள் தேசம் மூலம் சொல்லி தந்தால் பல்லி போன்றோர் படிக்க இலகுவாக இருக்கும். ஆகவே அலுப்பை பாராது இன்றே தொடங்குங்கள் உங்கள் பொறுப்பை.

    Reply
  • mano
    mano

    தமிழன் போன்றவர்களை எமது நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து செல்ல அனுமதித்ததே தப்பு. நாடு மக்கள் சிங்களவன்> தமிழன் அனைவருமே சாக்கடையில் குளித்து எழும்பியவர்கள் என்று சர்வதேசப் பிரசாரம் செய்கிறாரே. வன்னிப் பெண்கள் உயிர்வாழ்வதற்காக எதையும் எதிர்த்துநிற்க முடியாதவர்கள் என்று சொல்கிறாரா? அல்லது இலங்கை இராணுவத்தின் மத்தியில் வாழும் தமிழ்ப்பெண்கள் எல்லாம் அவமானப்பட்டே வாழ்கிறார்கள் என்கிறாரா?
    தமிழன்! புரிந்துகொள்க> இலங்கை இராணுவத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று அவர்களின் ஒழுக்கக் கட்டுப்பாடு> (விதி விலக்குகள் ஒன்றோ இரண்டோ இருக்கலாம்)

    தமிழர் போராட்ட வரலாற்றைப் படியுங்கள்! புலிப்போராட்ட வரலாற்றைப் படித்துவிட்டுப் பேச வேண்டாம். தமிழர் போராட்ட வரலாற்றில் வந்த துரோகிகளே புலிகள் என்பது உங்களுக்கு தெளிவான அறிவிருந்தால் விளங்கிவிடும்.

    Reply
  • மாயா
    மாயா

    //வன்னியிலிருந்து கப்பல் மூலம் அழைத்துவரப்பட்ட அனைத்துமக்களும் சிங்கள அரசால் பாதுகாப்புவலயமென பிரகடனப்படுத்தப்பட்ட இடத்திலிருந்தே அழைத்துவரப்பட்டனர். பாதுகாப்புவலயத்திலிருந்த இந்த மக்கள் எவ்வாறு காயமடைந்தனர்? இதுபற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா சிறிலங்கா அரச இணையத்தளத்தில் இந்தவருட சிறப்பான நகைச்சுவை விருதை தட்டிக்கொள்ள போடப்படும் செய்திகளில் உள்ளது போன்று புலிகளே பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள்மீது செல் தாக்குதல்களை நடாத்தினர் என்ற குழந்தைபிள்ளைதனமான அறிக்கைகளை வாசித்து அதுவே உண்மையென நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.- thamilan on April 4, 2009 12:08 pm //

    பாவம் thamilan. உங்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இறந்த போராளிகளுக்காக கண்ணீர் அஞ்சலிகள். அப்படி இல்லாவிட்டால் எங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இருக்காது. அந்த போராளிகளை புலிகளின் தலைமை உங்களை மாதிரி ஆட்களைப் போலவே மோடர்களாக்கி வைத்திருந்ததையே உங்கள் கருத்துகளால் உணரமுடிகிறது.

    பாதுகாப்புவலயத்திலிருந்த இந்த மக்கள் எவ்வாறு காயமடைந்தனர்? என்று கேட்கிறீர்களே? புதுக்குடியிருப்பையும் கைப்பற்றிவிட்டார்கள். இப்போது மிஞ்சி இருப்பது நந்திக் கடலும், பாதுகாப்பு வலயமும் மட்டும்தானே? அங்கே அப்பாவி மக்களுக்கு பின்னால்தானே உங்கள் வீரர்கள் ஒழித்து நின்று குண்டு வீசிக்கொண்டிருந்தார்கள். அங்கேதானே இப்போதும் நிற்கிறார்கள்? வேறு எங்காவதா? அப்படியானால் காயப்படுவார்கள்தானே? அதைக்கூட யோசிக்க அறிவில்லையா?

    கி.மு : கி.பி என்பது போல பிரபாகரன்தான் போராட்டம் ஆரம்பித்ததாக வரலாறு எழுதிக் கொண்டிருந்தீர்கள். அதற்கு முன் இருந்த அனைத்து இயக்கங்களையும் துரோகிகள் என்றே சொல்லி வந்தீர்கள்? அதை நாங்கள் சொல்லப் போவதில்லை. உங்களிடம் அடிமைகளாக இருந்த அந்த மக்கள் சொல்லப் போகிறார்கள். இதுதான் யதார்த்தமாக நடக்கத் தொடங்கியுள்ளது. உங்களை நம்பியிருந்தோரையே சுட்டும் எரித்தும் கொன்றீர்கள் என்பதை அவர்களே சொல்கிறார்கள் : சொல்வார்கள்.

    அங்கிருந்தவர்கள் பாவம். ஆனால் புலம் பெயர்ந்து வந்தவர்களான நீங்கள் கண்ணிருந்தும் குருடராய் கிணத்து தவளைகளாக இன்னும் இருக்கிறீர்கள்? மந்தைகள் போல் ஓம் போடுவதை புலிகளையும் அதன் வால்களையும் விட எவராலும் செய்ய முடியாது. அப்படி ஒரு … கூட்டம்?

    கொமாண்டோ போல சாயம் பூசிச் சென்று இறந்து கிடக்கும் போராளிகள் படத்தைக் காட்டினால், இராசயன வாயு அடித்துள்ளார்கள் என்று பரப்புரை செய்கிறீர்கள்? 3 – 4 நாள் போரில் கொல்லப்பட்டவனை காட்டினால் பாருங்கள் இராசாயன தாக்குதலால் உருகி உருக்குலைந்துள்ளதை என கதை விடுகிறீர்கள்?

    அவை இராணுவம் வெளியிட்ட படங்கள். அப்படி அவர்கள் இரசாயனம் அடித்திருந்தால் அந்த போராளிகளைக் காட்டுவார்களா? இன்னும் சிங்களவன் மோடன் என்றே நினைத்து ஆய்வு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? அவன் புத்திசாலியாக உலகத்தை வென்று கொண்டு வருகிறான். புலத்துக்கு வந்த புலிகள் தமக்கு ஆதரவான தமிழரையும் இழந்து கொண்டு வருகிறது.

    தமிழகத்தில் உருவான அனுதாப அலையைக் கூட தக்க வைத்துக் கொள்ளத் தெரியாத மோடர் கூட்டம் நீங்கள்? கலைஞரை வசைபாடி, கலைஞர்களை வசைபாடி, தொலைக் காட்சிகளை வசைபாடி குத்தாட்டம் போட்டீர்கள்.

    தமிழகத்தில் அனுதாபத்தில் ஊதிக்கொண்டு வந்த அந்த பலூனையும் வெடிக்க வைத்துவிட்டு ரப்பர் துண்டோடு நிற்கும் சிறுபிள்ளை போல நின்று சொறிந்து கொண்டு நிற்கிறீர்கள்?

    அன்று ஏனைய இயக்கங்களை புலிகள் அழிக்கவில்லை. வளர்த்திருக்கிறீர்கள்? வேதனைகளோடு பல போராளிகளை புலிகளால் இழந்து துரோகி எனும் முத்திரைகளோடும் மெளனமாக தவமிருந்திருக்கிறார்கள். அவர்கள்தான் அந்த மக்களுக்கு நாளை உதவப் போகின்றார்கள். புலிகளால் புலத்தில்தான் புலம்ப முடியும். இனி தாயகத்தில் அதுகூட முடியாத அவலம்?

    வெளிநாடுகளிலும் ஏனைய இயக்கங்களிலிருந்தவர்களே பெரும்பாலும் புலிகளை வழி நடத்தியிருக்கிறார்கள். அதை மறக்க வேண்டாம். அவர்கள் நழுவத் தொடங்கிவிட்டார்கள். அவர்களை இனித்தான் இனங் காணப் போகிறீர்கள். உங்களைவிட எழுத்தாற்றல் மிக்கவர்கள் அரசியல் தெரிந்தவர்கள் இனித்தான் வெட்டிய தடிகளிலிருந்து தளிராக துளிர்க்கப் போவது போல வெளிவரப்போகிறார்கள்.

    தாயகத்தில் புலிகளின் அழிவின் கடைசி அத்தியாயம் இது. பொட்டுவே தலையில் கையில் கைவைத்து அழும் அவலம்? தலைவர் நிலை சொல்ல வேண்டியதில்லை?

    புலிகள் உண்மையாக மக்களுக்காக போராடியிருந்தால் யாழ்பாண – மன்னார் – திருகோணமலை – மன்னார் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும்? அவர்களது குழந்தைகளும் களத்தில் இருக்கிறார்கள்? யாரும் பேச்சே இல்லை. இதுவரை அச்சத்தில் ஏதேதோ செய்தார்கள். இனி இருந்த கொலை பயம் அவர்களை விட்டுப் போய்விடும். இனி யாரும் பேச மாட்டார்கள்? கூட்டணி இனித்தான் புலிக்கு எதிராக பேசப் போகிறார்கள்? அவர்களுக்கும் இனி மரண பயம் போய்விடும்.

    புலத்தில் பூசிய சாயம் போகும் வரை நீங்களும் சற்று ஆடுவீர்கள். அதன் பிறகு கோயில் குளமென்று திரிய வேண்டியதுதான். எத்தனை நாளைக்கு இரசாயனம் அடிச்சு என்று சொல்றது? இந்தியப்படைகள் இறங்கி என்று சொல்லுறது? உலகம் ஒன்று சேர்ந்து என்று சொல்லுறது?

    இருக்கிற இடத்திலயாவது இனி சும்மா இருங்கோ? இங்கும் ஏதாவது செய்தா நிலமை புதுக்குடியிருப்பை விட மோசமாகிடும்?

    Reply
  • மாயா
    மாயா

    கனடாவில இப்பவே புரோகிராம் வைக்க வேணும் என்று புலிகளின் ஒரு சாராரும், புரோகிராம் வைக்கக் கூடாதென்று ஒரு சாராரும் குத்து வெட்டாம்? அடுத்த தலைமையில்லாத தறுதலைக் கூட்டம் இப்ப மிருகத்தனத்தை காட்ட தொடங்கியாச்சு. இனியென்ன நீங்களே உங்களுக்கு அடிபட்டு செத்துப் போவீர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தற்போது சுற்றுலாவில் ஐரோப்பாவில் நிற்கும் கூத்தமைப்பினரும் வேறு சில ஊடகங்கள் மற்றும் சில சுயநலவாதிகள் சேர்ந்து இளையோரை உசுப்பேற்றி அவர்களை அந்தந்த நாடுகளில் சட்டதிட்டங்களை மீறி வன்முறையில் இறங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இளையோருக்கு இதனால் ஏற்படக் கூடிய பிரைச்சினைகளை அவர்கள் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. இளையோரின் வன்முறைகள் தொடர்ந்தால் அவர்களை அந்தந்த நாட்டின் அரசுகள் கைது செய்து இலங்கைக்கே அனுப்பி வைக்கும் நிலையும் ஏற்படலாம். இளையோர் வாழும் நாட்டில் பிரசாயுரிமை பெற்றிருந்தால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாதென்று சிலர் தப்பாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இது தவறான எண்ணம். கடந்த காலங்களில் இப்படி பிரசாயுரிமை பெற்ற பல வேறு நாட்டவர்கள் கூட, அவர்களின் பிரசாயுரிமை திரும்பப் பெறப்பட்டு அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டும் உள்ளனர். கண் கெட்ட பின்பா இளையோர் சிந்திக்கப் போகின்றார்கள்??

    Reply
  • thamilan
    thamilan

    //பாதுகாப்புவலயத்திலிருந்த இந்த மக்கள் எவ்வாறு காயமடைந்தனர்? என்று கேட்கிறீர்களே? புதுக்குடியிருப்பையும் கைப்பற்றிவிட்டார்கள். இப்போது மிஞ்சி இருப்பது நந்திக் கடலும் பாதுகாப்பு வலயமும் மட்டும்தானே? அங்கே அப்பாவி மக்களுக்கு பின்னால்தானே உங்கள் வீரர்கள் ஒழித்து நின்று குண்டு வீசிக்கொண்டிருந்தார்கள். அங்கேதானே இப்போதும் நிற்கிறார்கள்? வேறு எங்காவதா? அப்படியானால் காயப்படுவார்கள்தானே? அதைக்கூட யோசிக்க அறிவில்லையா?//

    மாயா
    புதுக்குடியிருப்பைக் கைப்பற்றியதன் பின் இருக்கட்டும் அதற்கு முன்? 2009 தைமாதம் 26ம் திகதி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பாதுகாப்பு வலயம் எனப்பிரகடனப்படுத்திய உடையார்கட்டு சுதந்திரபுரம் ஆகிய பிரதேசங்களின் மீது ஈவிரக்கமற்று கொடுமையான தாக்குதலை நடாத்தி 1.30 மணிநேரத்தில் 120க்கும் அதிகமான மக்களை கொன்று 1000 க்கும் அதிகமான மக்களை காயப்படுத்திய வீர புருசன் மகிந்தவின் கொலை வெறியை என்னவென்று சொல்வது. அன்றைய சம்பவத்துக்கு அங்கு நின்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டத்தினருமே சாட்சியாக நிற்கின்றனரே? அன்றைய உலகநாயகன் மகிந்தவால் பாதுகாப்பு வலயம் எனப்பிரகடனப்படுத்தப்பட்ட அந்த இடத்தில்தினம் நிவாரணம் எடுப்பதற்காக என அங்கு வந்து நின்ற மக்களில் பெரும்பாலானவர் அந்தத்தாக்குதலில் கொல்லப்பட்டனர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டத்தினரும் அந்தத்தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பியிருந்தனர். வீதிஎங்கும் சிதறிய சதைத்துண்டங்களாலும் உயிரிழந்த சடலங்களாலும் நிறைந்திருந்தது. எங்கும் மரண ஓலம் உயிரிழந்த தமது உறவுகளின் உடலங்களையோ காயப்பட்ட உறவுகளையோ கூட தூக்கமுடியாது அவலப்பட்டு உயிருக்காக அந்த மக்கள் ஒடிய காட்சி என் கண்முன் இன்னும் நிற்கிறது. அந்தச்சம்பவத்தின்போது நானும் அந்தப்பிரதேசத்திலேயே நின்றிருந்தேன். சுமார் 1.30 மணிநேரம் செல்கள் கூவும் ஒலி ஒரு மைக்கிரோ செக்கன்கள் கூட நிற்கவில்லை. இந்தச்சம்பவம் மகிந்த படைகளால் நிகழ்த்தப்பட்ட கொலைவெறி ஆட்டத்தின் ஒரு மிகச்சிறிய உதாரணம் இவர்களின் இதுபோன்ற வீரச்செயல்களை எழுத எனக்கு இந்த ஜன்மம் போதாது. இப்போது இருக்கட்டும் அன்று புலிகளுக்கு நந்திக்கடலும் பாதுகாப்புவலயமுமா இருந்தது?

    Reply