![]()
பார்வையற்றவர்கள் தேர்தல்களின்போது வாக்களிப்பதற்காக நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரைத் தம்முடன் அழைத்துச் செல்லும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களுடனும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
lama
உங்களுக்கு தொடர்ந்து வாக்கு வேட்டையில் ஒரே கண்ணாயிருக்கிறியள். வன்னியில் நடக்கும் கொலையில் மக்களை கொல்வதை தடுத்து நிறுத்துங்கோ- இப்ப சாகிற மக்களின் இரத்தம் யார் யாரின் கைகளில் உள்ளது என்பது மிக முக்கிய விடயம்.
chandran.raja
உண்மையில் தடுத்து நிறுத்தும் தகமை பிரபாகரன் கையிலேயே உள்ளது. ஆயுதமுனையில் தடுத்து நிறுத்தியுள்ள தமிழ்மக்களை விடுவிப்பேர்களாயின் ஒர்யிரு நாட்களிடையோ ஒரு சில மணத்தியாலங்களிடையோ இந்த கொடுரயுத்தம் முடிவுக்கு வந்துவிடும்.தமிழ்மக்கள் விடுதலையாவார்.தேசியதலைவரும் விசாரணைக்கு அழைத்தச் செல்லப்பட்டு விடுவார். மக்கள் மீளவும் இயல்பு வாழ்வுக்கு திரும்பிவிடுவர் இது தான் யதார்தம். அப்படி நிலைமையிருக்கையில்….
வாக்கு என்பது இந்த சமூகத்தில் எனக்கும் பங்குயிருப்பதை வெளிப்படுத்துவதே! மக்களுக்கு பாடுபடுவதையும் அவர்களுக்காக வாழ்வோம் என்பதை உறுதிசெய்வபவன் தேர்தலில் போட்டியிடமுடியும். வாக்குகளை அதிகாரகார முறையில் தடுத்து நிறுத்துபவனும் கையை வெட்டுபவனும் சமூகத்தின் துரோகியாகவே கணக்கிடப்படுவர். அவர்களுக்கான தீர்ப்புகளும் எதிர்காலத்தில் வழங்கப்படும். டக்கிளஸ் தேவானந்தா குறையுள்ளவர் தான். அவர விட புத்திசாலிகளை ஈழத்தமிழரிடையே தேடமுடியாதும் கிடைக்கமுடியாதும் தான் இன்றைய நிலை.
பல்லி
தமிழர் வாழ்வில் தங்கள் இரு கண்களையும் இறுக்க மூடிகொண்டு. பார்வையற்றவர்களுக்கு வேலை வாய்ப்போ அல்லது வாழ்க்கை வசதியோ
செய்யாது ஓட்டு போட உதவுவது தங்களுக்கு பார்வை உள்ளவர்களிடம் இனி ஓட்டு கிடைக்காது என தாங்கள் பயம் கொள்வது பல்லிக்கு புரிகிறது. சரி சரி காது கேக்காதவர்களுக்கு உங்கள் அமைப்பின் செயல்பாடுகள் அடங்கிய ஒலிபதிவையும் கொடுக்க ஆவனை செய்யுங்கோ.