ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி நீல்பூனேயும் பிரிட்டிஷ் பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குடிங்கும் நேற்று புதன்கிழமை வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு நேரில் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தனர்.
வவுனியா நிவாரணக்கிராமங்களுக்கு தனித்தனியாக விஜயம் மேற்கொண்ட இவர்கள் அங்கிருந்த மக்களின் தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
இவர்கள் மாவட்ட அரச அதிபர், பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, வவுனியாவில் உள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்தில் கடமையாற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடலை நடத்தியிருந்தனர்.
இடம்பெயர்ந்துள்ள மக்களுடைய சேம நலன்களை கவனிப்பதில் காட்டப்படும் அக்கறை குறித்து விபரமாக அறிந்து கொண்டனர். ஐக்கியநாடுகள் வதிவிட பிரதிநிதி மெனிக்பாம் நிவாரண கிராமத்திற்கும் விஜயம் செய்திருந்தாரென அதிகாரிகள் தெரிவித்தனர்.