தனியார் தோட்டங்களால் அரசாங்கத்துக்கு மூவாயிரத்து 11 மில்லியன் ரூபா நஷ்டம் – அமைச்சர் டியு குணசேகர

deu-gunasekara.jpgநாடளாவிய ரீதியிலுள்ள பாரிய தோட்ட நிறுவனங்கள் கடந்த பத்து வருடங்களில் அரசாங்கத்துக்கு எதுவித கட்டணமும் செலுத்தாத நிலையில் உள்ளன என்றும் இதனால் அரசாங்கத்துக்கு மூவாயிரத்து 11 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதெனவும் அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டியு குணசேகர தெரிவித்தார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளின் நிலைப்பாடு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கும் முகமாக தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்

நாடளாவிய ரீதியில் 23 பாரிய தோட்டங்கள் உள்ளன. அவற்றில் மூன்றைத்தவிர ஏனையவை தனியார் நிறுவனங்களாகவே இயங்கி வருகின்றன. இவ்வாறு இயங்கி வரும் 20 தோட்டங்களும் கடந்த பத்து வருடங்களாக அரசாங்கத்துக்கு எவ்வித கட்டணமும் செலுத்தவில்லை. சில தோட்ட நிறுவனங்கள் அவற்றின் முகாமைத்தவக் கட்டணமாக வருமானத்தின் 50 வீதத்தை ஒதுக்கியுள்ளன. அதேவேளை அந்தத் தோட்டங்களின் விவரங்கள் திரட்டப்படுவது தெரிய வந்ததும் அவை முகாமைத்துவ கட்டணத்தை 20 வீதமாகக் குறைத்து கணக்குகளைத் தயாரித்துள்ளன.

சில தோட்ட நிறுவனங்கள் மீள் நடுகைக்காக பெருமளவில் கடனுதவி பெற்றுள்ளதுடன் மீள் நடுகை மேற்கொண்டதற்கான எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இவ்வாறு 10047 மில்லியன் ரூபா கடனாகப் பெறப்பட்டுள்ளது. எனினும் இந்தக்கடன் தொகைக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

காணி மறுசீரமைப்பு ஆணைக்கழுவினால் சுவீகரிக்கப்பட்ட காணியின் அளவு 4 இலட்சத்து 8487 ஹெக்டயர் ஆகும். இந்த ஆணைக்குழுவினால் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளின் அளவில் குளறுபடிகள் நிலவுகின்றன. ஆணைக்குழுவின் பதிவுகளின் எண்ணிக்கைக்கும் பெற்றுக்கொண்ட நிறுவனங்கள் தெரிவிக்கும் எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் தென்படுகிறது.

இவ்வாறு பாரிய குளறுபடிகள் தெண்படுவதாக கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை உப குழு அதன் அறிக்கை ஊடாக சில சிபாரிசுகளை முன்வெத்துள்ளது. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு  மறுசீரமைக்கப்பட வேணடும். தோட்ட நிறுவனங்களுக்குரிய காணியின் அளவை 5000 ஏக்கருக்கு மட்டுப்படுத்தல், சிறிய தோட்ட உரிமையாளர்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்தல், விசேட தேடுதல் நடவடிக்கைப் பிரிவொன்றை உருவாக்கல் போன்றவை முன்வைக்கப்படட சிபாரிசுகளில் முக்கியமானவைகளாகும்.

அமைச்சர் டியு குணசேகர தலைமையிலான அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா,  ஜீவன் குமாரதுங்க,  சமல் ராஜபக்ஷ ஆகியோரும்  இடம்பெறுகின்றனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *