புலிகளின் பிரிவினை வாதத்துக்கு துணைபோகும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தகவல்

krambukkela.bmp

புலிகளின் பிரிவினை வாதத்துக்கு ஆதரவாக இலங்கை ஊடகவியலாளர்களைப் பயன்படுத்தி சர்வதேச ரீதியில் பிரசாரம் மேற்கொண்டுவரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து தகவல் வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, பெனோஸ் என்ற பெயரில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனம் புலிகளின் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு நேரடி உதவி வழங்கியுள்ளமை இப்போது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

துரதிஷ்டவசமான இலங்கை ஊடகவியலாளர்கள் சிலர் இதில் சம்பந்தப்பட்டுளளனர். புலிகளுக்கு ஆதரவாக அவர்களால் எழுதப்பட்ட பல கட்டுரைகள் எம்மிடம் சிக்கியுள்ளன. இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *