கிறீன் ஓசன் கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மற்றும் ஒரு தொகுதியினர் திங்கட்கிழமை, 30 மார்ச் 2009 புல்மோட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
544 பேர் இவ்வாறு கப்பல் மூலம் கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்கள் இந்தக் குழாமில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை பிற்பகல் புதுமாத்தளனிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் புல்மோட்டையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.