5 ஆண்டு வேட்டி துவைப்பார்-5 ஆண்டு சேலை துவைப்பார் – விஜயகாந்த்

vijayakanth1.jpgஜெயலலிதாவுக்குப் பின்னால் ரோபோ போல நிற்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் ஐந்து ஆண்டுகளுக்கு வேட்டி துவைப்பார். ஐந்து ஆண்டுகளுக்கு சேலை துவைப்பார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் நக்கலடித்துள்ளார். தூத்துக்குடி தேமுதிக வேட்பாளர் எம்.எஸ்.சுந்தரை ஆதரித்து நேற்று காலை செய்துங்கநல்லூரில் பிரசாரம் செய்தார் விஜயகாந்த்.அப்போது அவர் கூறுகையில்,

கூட்டணி வைத்துக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதால் நான் மக்களோடும், தெய்வத்தோடும் மட்டும் கூட்டணி வைத்துள்ளேன். நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்புங்கள்.மூப்பனார் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் சொல்லை நான் கேட்டிருப்பேன். காலையில் ‘டிவி’ பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அம்மா (ஜெ.,) முன்பாக ஒருவர் விரைப்பாக நின்றுகொண்டிருந்தார்.

அவர், ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார்; அடுத்த ஐந்து ஆண்டுகள் சேலை துவைப்பார். அவரது பெயரை நான் சொல்லாமலே உங்களுக்குப் புரியும். அந்த அளவுக்கு எல்லாம் நான் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

அவரைப்போல நான் யார் முன்னும் நிற்க விரும்பவில்லை; மக்களாகிய உங்கள் முன் நிற்கிறேன். கருணாநிதியின் பின் நின்றுகொண்டு காங்கிரசார் எப்படி காமராஜர் ஆட்சியை ஏற்படுத்தமுடியும். எம்.ஜி.ஆர்., காலத்தில் பிரபலமான ஒரு கோஷத்தை நாள் கேள்விப்பட்டுள்ளேன். மகன், ‘பிள்ளையோ பிள்ளை’ என நடிக்கிறான். அப்பன், ‘கொள்ளையோ கொள்ளை’ என அடிக்கிறான் எனச் சொல்வர். அந்தக் கொள்ளை தற்போதும் தொடர்கிறது. தமது பிள்ளைகளுக்காக தமிழகத்தையே துண்டாடிவிட்டார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது முக்கியமல்ல. மக்களாட்சியை கொண்டு வருவோம். மக்களின் ஆசி பெற்ற வேட்பாளர் என்று எனது வேட்பாளரை அறிவிக்கிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திராவிடக் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. எனக்கு பின்னால் அவர்கள் பிரசாரத்திற்கு வருவார்கள். எதை நம்ப வேண்டும், எதை நம்பக் கூடாது என்று உங்களுக்கு தெரியும்.

Show More
Leave a Reply to kamal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • sitharama iyer
    sitharama iyer

    mr viyaraj naidu (vijaykanth)acting better in real life then screen.i really dont understand how people fooled by them all the time.this election will teach this actors a leason.you know they cant even speak in tamil,and want to rule tamil nadu,its very,very sad.

    Reply
  • kamal
    kamal

    விஜயகாந்த் என்னவெல்லாம் கதைக்கிறீங்கள்.தேர்தல்தான். போட்டிதான். அதுக்காக ஏன் இந்த தரங்கெட்ட பேச்செல்லாம்?;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது முக்கியமல்ல. மக்களாட்சியை கொண்டு வருவோம்.- விஜயகாந்த் //

    உண்மைதான் இப்போ உங்க மனைவியும் மச்சானும் கட்சியிலே முக்கிய பொறுப்பு வகிக்கினம். அப்புறம் நீங்க ஆட்சிக்கு வந்தால் உங்க மொத்த குடும்பமும் தமிழ்நாட்டைக் குத்தகைக்கு எடுத்துடுவீங்க என்பதைத் தானே சொல்லுறீங்க. மொத்தத்தில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //எதை நம்பக் கூடாது என்று உங்களுக்கு தெரியும்//
    கப்டன் இதை உங்கள் பேச்சுக்கும் சேர்த்துதானே சொன்னீர்கள்.

    Reply