நடிகர் வடிவேலுக்கும் விஜயகாந்துக்கும் மோதல் இருந்து வருகிறது. வடிவேலு வீட்டின் முன் கார் நிறுத்தியது தொடர்பாக தேமுதிக தொண்டர்களுக்கும் வடிவேலுக்கும் இடையே 2007-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. தலைவர் படத்தில் நடிக்க மறுக்கிறாய், இப்போது எதிர்த்து வேறு பேசுகிறாயா என்று கேட்டு தன்னை விஜயகாந்தின் ஆட்கள் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார் வடிவேல்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்த், வடிவேல் சண்டை பூதாகரமானது. இந்நிலையில் வடிவேலு வீட்டின் மீது ஒரு கும்பல் கற்களை வீசி மிரட்டி சென்றது. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்றார் வடிவேலு.
இந்த சம்பவத்துக்கு விஜயகாந்த்தான் காரணம் என்று சொன்னார். ஆனால் விஜயகாந்த் இதை மறுத்தார். எனினும் வடிவேலு சமாதானம் அடையவில்லை. திருமங்கலம் இடைத்தேர்தலில் விஜயகாந்த் காணாமல் போய்விடுவார் என்று வடிவேலு கூறினார். மக்களவை தேர்தலில் அவர் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றும் விஜயகாந்துக்கு சவால் விட்டார். நகைச்சுவை நடிகனை அழவைத்து வேதனைப்படுத்தியவருக்கு தகுந்த பாடம் புகட்டுவேன் என்றும் வடிவேலு சொல்லி வந்தார்.
தற்போது தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், வடிவேலு – விஜயகாந்த் விவகாரமும் சூடு பிடித்துள்ளது. 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள விஜயகாந்த் எல்லோருக்கும் முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் தேமுதிகவுக்கு எதிராக வடிவேலு பிரசாரத்தில் குதிக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வடிவேலு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.
பல்லி
வடிவேலுவின் பிரசாரம்தான் விஜயகாந்துக்கு பலமாக மாறும் .இது வடிவேலு வெடிவேலு என்பதால் அல்ல அவரது பழிவாங்கும் செயல் எதிரிக்கு வெற்றியை இலகுவாக்கி விடும்…………. ஒருநல்ல நகைசுவை நடிகன் கேவலபடலாமா??