வன்னியில் அவலப்படும் மக்களுக்கு அவசர உதவியாக 400 மெற்றிக் தொன் மருந்து மற்றும் உணவுப் பொருள்களுடன் “வணங்கா மண்” கப்பல் எதிர்வரும் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வன்னி நோக்கிப் புறப்படுகின்றது. மனிதாபிமான உதவிகளை அனுப்பும் அமைப்பான “ஏசிரி”யின் பணிப்பாளர் கிரஹாம் வில்லியம் சன்ஸ் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
எதிர்வரும் 31 ஆம் திகதி மத்திய இலண்டனில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வை அடுத்து “வணங்காமண்” முதலாவது பயணத்தை புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி ஆரம்பிக்கும். இந்த நிகழ்வில் புலம் பெயர்ந்த மக்களுடன் பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஆண், பெண் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கப்பல் பயணத்தை ஆரம்பித்து வைப்பார்கள் எனத் தெரிய வருகிறது.
இதேவேளை, மனிதாபிமான உதவிப் பொருள்களை எடுத்து வரும் கப்பல் முல்லைத்தீவுக்குச் செல்ல வசதியாக அது சென்றடையும் நாளில் போரை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் (சர்வதேச மட்டத்திலான) கோரிக்கை ஒன்று விடுக்கப்படும். கப்பல் பிரிட்டனிலிருந்து புறப்படும் வேளையில் அந்தச் சர்வதேசக் கோரிக்கை விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பார்த்திபன்
31ந் திகதி புறப்பட முடியாது போனாலும் அதற்கும் ரெடிமேட் காரணம் வைத்திருப்பார்கள். பிபிசி தமிழ்ச்சேவையில் வணங்காமண் தத்தளித்தது பதில் சொல்ல முடியாமல். எந்தளவில் ஆயுத்த வேலைகள் செய்துள்ளார்கள் என்பது அப்போது தெரிந்தது.
s.s.ganendran
முதலில் புறப்படட்டும் பின்னர் முல்லைத்தீவை செ|ண்றடையட்டும் அதன் பின்னர் புலிகள் அதனை தமக்கு பயன்படுத்தாமல் மக்களுக்கு கிடைக்க வளிசெய்யட்டும் அதன் பின்னர்தான் வணங்கா மண்ணை வரவேற்கமுடியும்
மாயா
வணங்காதவர்கள்
ஏனைவர்களாலும்
வணங்கப்படுவதில்லை
murugan
வணங்கா மண் தான் தமிழருக்கு இறுதித் தீர்வு. ஒரு நாள் ஊரடங்கில் தலைவரை மாறுவேடத்தில் கப்பலுக்கு தூக்கி வந்தாலும் நல்லதுதான்.
visa
தலை நீர்மூழ்கியில் வந்து நடுக்கடலில நிற்கிறாhராம் மகனுடன். அவரை துரக்கி ஆபிரிக்க நாடு ஒன்றில் போடத்தான் இந்த திட்டமெல்லாம். ஆனால் தலை ஏறப்போவது காகித கப்பலில் அப்ப என்ன நடக்கும்….. ?
thurai
புலத்திலிருந்து தமிழீழப் போராட்டத்தை நடத்தியவர்கள், தமிழீழமுமில்லை போரில் பட்ட புண்ணிற்கு மருந்துமில்லாமல் தவிக்கிறார்கள்.
ஆனால் பக்கத்தில் உள்ள இந்தியாவிடம் மருந்து கேட்டிருக்கலாம். இந்தியா சம்மதித்தால் புலத்தில் பிடுங்கும் பணம் கையில் வராமல் போய்விடும்.
இவர்களின் ஏமாற்று வித்தையின் அடையாளச்சின்னமே வணங்காமண்.
துரை
RATHA
DO WHAT EVER YOU WANT WHY DO YOU THINK ABOUT OTHERS
ramanathan
1.கப்பல் புறப்படமுன்னர் என்னநோக்கத்துக்காக வாடகைக்கு அமர்த்துகிறோம் என்ற விளக்கம் கப்பல்நிறுவனத்துக்கு கொடுத்திருந்தால் மட்டுமே கப்பல் கம்பனி அனுமதிக்கும்.
2.கப்பல் எங்கிருந்து புறப்படுகிறதோ அந்தநாட்டின் அனுமதி எடுக்கப்படவேண்டும் ஆக இந்த அனுமதி எடுக்காமலா கப்பல் புறப்படும் திகதி வரை வெளியிட்டுள்ளார்கள்? குறிப்பாக புறப்படும்நாட்டில் அரச திணைக்களத்தில் அனுமதி எடுக்க வேண்டும். இங்கு பிரித்தானிய அரசாங்கம் இந்த மிசனை அனுமதித்துள்ளது என்று பொருள்.
3.கப்பல் புறப்படுவதற்கு முன்னர் கப்பலுக்கான காப்புறுதி,எடுக்கவேண்டும். இதில் கப்பல் போய் சேரவேண்டிய இடத்தின் விபரம் கொடுத்திருக்க வேண்டும். ஆக இந்த அனுமதியையும் எடுத்திருப்பதினாலேயே இந்த ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளது என்று கருதலாம்.
4.கப்பல் சம்பந்தமான பாதுகாப்பு தொடர்பான விளக்கம் கொடுத்திருக்கவேண்டும்(சோமாலிய கடற்கொள்ளையர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு என உதாரணத்துக்கு )
5.இந்த வணங்கா மண்ணில் பயணிப்பவர்கள் புறப்படும்நாட்டில் அதற்கான வீசா அனுமதி எடுத்திருக்க வேண்டும். இந்த விசா இல்லாமலா கப்பலில் உள்ளவர்கள் போகப்போகிறார்கள்?
6.கப்பலில் ஏற்றப்படும் பொருள்களின் சுங்கபரிசோதனை முடிக்கப்பட்டு அதற்கான சுங்க சான்றிதழ் எடுக்கபட்டிருக்க வேண்டும்.
7. இறுதியாக கப்பல் எங்கு போய் சேருகிற இடத்தின் துறைமுக அனுமதி பெற்றுஇருக்க வேண்டும். இங்கு இது ஒரு மனிதாபிமானநடவடிக்கை என்பதால் இதற்கான அனுமதியை உலகம் தான் பெற்றுக்கொடுக்க வேண்டும். எனினும் மேலுள்ள ஏனைய அனுமதியை வழங்கியுள்ள பிரித்தானிய அரசாங்கம் அதற்கானநடவடிக்கையை மேற்கொள்ள உலக மட்டத்தில் அழுத்தங்கள் கொடுக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இங்கு பிரித்தானிய அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் தான் வணங்கா மண் புறப்படுகிறது. அதனை விட கப்பல் செல்லும் மார்க்கம் இன்னும் இரகசியமாகவே இதனை ஒழுங்கு செய்பவர்கள் வைத்துள்ளதாகவும் தெரிகிறது. முன்னர் இதே பகுதியில் பின்னூட்டமிட்ட ஒருவர் சொன்ன தூத்துக்குடியிலிருந்து செல்லலாம்.
விண்ணாதி விண்ணர்களே வணங்காமண் அடங்காபற்று கப்பல் சென்றே தீரும்.
பல்லி
வணங்கா மண்ணில் போக வேண்டியவர்கள்.
(தேசம் தணிக்கை செய்தால் பல்லி பொறுப்பல்ல)
சிவாஜிலிங்கம்.
இடைகாடார்.
டாக்டர் மூர்த்தி.
திவாகர்.
பாஸ்கரன்.
மேதா.
(அறிவிப்புக்காக).
தினேஸ்
துரைரத்தினம்.
அனெக்ஸ்.
(ஊடகம்)
பரபரப்பு.
ஒரு கடுதாசி.
பாலசந்திரனின் ஈழநாடு.
பல்லி மட்டும் சொன்னால் பல்லிக்கு தலைகனம் என சிலர் நினைக்கலாம். அதனால் மிகுதியை அவர்கள் தெரிவு செய்யட்டுமே.
பார்த்திபன்
இராமநாதன் அண்ணை பேசாமல் நீங்களே உந்த பிபிசிக் காரர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கலாம். ஏனெண்டால் பிபிசி கேட்ட கேள்வவிக்கு பதில்கொடுத்தவர் தடுமாறத் தொடங்கிற்றார். இதனால் பிபிசி “வேறு வார்தைகளில் சொல்லப் போனால் கப்பல் மூலமாக உணவுப் பொருட்களை அனுப்ப வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் என்று அனுப்பப் போகிறோம்? எவ்வாறு அனுப்பப் போகிறோம்? என்பது முடிவாகாமல் தெளிவில்லாமல் இருக்கிறது என்று நாங்கள் பொருள் கொள்ளலாமா?” என்று முடிக்க வேண்டி வந்தது.
27ந் திகதி புறப்பாடு என்றார்கள். பின்பு கடலில் தண்ணி காணாததால் போகவில்லைப் போலும். இப்ப 31ந் திகதி புறப்பாடு எனக் கேள்வி. அண்டைக்குப் பார்த்து காற்று கீற்று ஏதாவது பலமாக வீசினாலும் வீசும். கப்பல் செல்லும் மார்க்கம் இரகசியமாகவே வைத்திருக்கின்றார்கள் என்று எப்படி நீங்கள் எழுதுகின்றீர்கள். ஊகமா அல்லது உங்களுக்கும் அது தெரிந்து விட்டதா?? உங்களுக்குத் தெரிந்து விட்டால் பின்பு எப்படி இரகசியமாகும்?? இப்ப நீங்களும் சேர்ந்து (காகிதக்)கப்பல் விடுறீங்க. பார்ப்பம் எங்கே போய் நிற்குமெணடு.
BC
ராமனாதனின் கதை மாதிரி புலன் பெயர்ந்தவர் பணத்தைச் சுத்துவதற்கான பல கதைகளை ஏற்கெனவே கேட்டுவிட்டோம்.
மாயா
என்னதான் கரணம் அடிச்சாலும் பிரபாவின் தேர்வில் யதார்த்தத்தைப் பார்க்கும் மகிந்த கப்பலை நடுக்கடலுக்கு வந்து வெடிக் கொழுத்தி வரவேற்க ரெடியாம்.
மகிந்தவின் வரவேற்பில் வணங்கா மண்
பிரபாவுக்கு வாயில மண்ணாகும். (போனால்)
இதோட இருக்கிற மிச்ச சொச்ச வால்களுக்கும் உண்மை விளங்கவேணும். இல்லையென்றால் சோறு சாப்பிட கொடுக்க இயலாது? அதையும் தடை செய்ய ஓடித்தரியிரார்கள்.
மாவிலாறு தண்ணியை மறிச்சு பட்ட வேதனை புலத்தில உணவு பொருட்களை பகிஸ்கரித்து தொடர பார்க்கிறார்கள்?
சிறீலங்காவில இருந்து கொண்டு வரும் பொருட்களை ஆபிரிக்காவில இருந்து கொண்டு வரும் பொருட்கள் என்று லேபள் ஒட்ட கொண்டு வாறவங்கள் ரெடியாம்? லேபளை பார்த்துதானே பகிஸ்கரிப்பு. அரிசி – தேயிலையை பரிசோதிக்க லேப்போடவா திரியவா போறாங்க? பாஸ்போட்டே இல்லாம வந்தவனுக்கு இதெல்லாம் சிம்பள்.
சிறீலங்கா ஐடியையும் – பிறப்பு – கல்வி பத்திரங்களையும் எப்ப எரிக்க வீதிக்கு இறங்க போறாங்க? அதையுமில்ல இவங்க செய்ய வேணும்.
என்ன இருந்தாலும் கனடா : இங்கிலாந்து : அவுஸ்திரேலியா : பிரான்ஸ் நாடுகளில குடியுரிமை பெற்றவங்களுடைய வாக்குகள் தேவைப்படும்
அரசியல் கட்சிகள் அந்த வாக்குகளை எதிர்பார்த்து சற்று பேசியே ஆகவேண்டும்.
புலிக் கொடியோடையும் பிரபாகரன்ட படத்தோடையும் திரிஞ்சு அதையும் கெடுத்துப் போட்டாங்க. மக்கள் வீதிக்கு இறங்கியது மக்களை காப்பாத்தவா?
பிரபாகரனை காப்பாத்தவா? அப்ப அங்க மக்கள் சாவதும் பிரபாவை காப்பாத்தவல்லவோ?
ஒருவன் செத்து முழு சமூகத்தையும் காப்பாத்துறவன் வீரன்.
ஒருவன் வாழ முழு சமூகத்தையும் கொல்லுறவன் கோழை.
பார்த்திபன்
//வணங்கா மண்ணில் போக வேண்டியவர்கள். – பல்லி//
பல்லி போக வேண்டியவர்கள் எனகக் குறிப்பிட்டு சில பெயர்களை இணைத்துள்ளீர்கள். அவர்களில் ஐரோப்பிய ஊடகவியலாளர்கள்(வானொலி, தொலைக்காட்சி) சிலரைச் சேர்க்காததை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அதுசரி இறுதியில் இவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” விருதா அல்லது “நோட்டுப்பற்றாளர்” விருதா வழங்கப்படும்.
santhanam
பல்லி டென்மார். சுவீடன்: நோர்வே ஆகியநாடுகளிலிருந்தும் வணங்கமண் புறப்படுகிறது இது நோட்டுக்கு ஆப்பு. எப்டி தலைவரின் ஆதரவுகள் இதில் யாரை பல்லி அனுப்பலாம்.
மாயா
//பல்லி போக வேண்டியவர்கள் எனகக் குறிப்பிட்டு சில பெயர்களை இணைத்துள்ளீர்கள். அவர்களில் ஐரோப்பிய ஊடகவியலாளர்கள்(வானொலி, தொலைக்காட்சி) சிலரைச் சேர்க்காததை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அதுசரி இறுதியில் இவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” விருதா அல்லது “நோட்டுப்பற்றாளர்” விருதா வழங்கப்படும்.//
வணங்கா முடிகள் என்றும் வைக்கலாம் சீமான் அது தமிழில் முக்கியமான நல்ல வார்த்தை என்று சொல்லிட்டுத்தான் உள்ளே போனவர். அவரை வெளியே எடுக்க யாரும் வீதிக்கு இதுவரை இறங்கவில்லையே? பாவம். இனியாவது உணர்வாரோ தெரியாது? அறிவுமதி மற்றும் பாதர் கஸ்பார் போன்றவர்கள் உணர்ந்ததால்தான் மெளனமாக இருக்கிறார்கள்?
பார்த்திபன்
//ஒருவன் செத்து முழு சமூகத்தையும் காப்பாத்துறவன் வீரன்.
ஒருவன் வாழ முழு சமூகத்தையும் கொல்லுறவன் கோழை. – மாயா//
அப்ப அந்த ஒருவனைக் காப்பாற்ற கொடி பிடிச்சு கூப்பாடு போடுறவையை என்னெண்டு சொல்லலாம்??
பல்லி
பார்த்திபன் சிங்கபூர் மகாநாடு தடுமாறி கொழும்பில் உள்ளதை வைத்து கலகலப்பாக முடிந்து விட்டது. இதில் ரிபிசி யில் தாம் போய் மகானாட்டில் தமிழர் நலன் பற்றி கொட்டாவி விடுவோம் என இறுமிய பலர் அங்கு போகாமல் புலம் பெயர் நாட்டிலேயே கொறட்டை விட்டதாக கொழும்பு செய்திகள் வாந்தி எடுக்குது. இதில் சிரம என்னவெனில் மகிந்தா கடசி நேரத்தில் போக்குவரத்து பொறுப்பை அம்மானிடம்கொடுத்து விட்டாராம். அம்மானோ இங்கு வாழும் சிலருக்கு தொல்லை பேசியில் பணமாக அனுப்புவதா?? அல்லது விமானசீட்டை எடுத்து அனுப்பட்டா என கேட்டதால் பலர் மகாநாட்டு ரூபத்தில் ஏழரை வந்து விட்டதாக எண்ணி மகாநாட்டையே ரத்து செய்து விட்டனராம். இறுதியில் இரு அமைச்சர் (ரவுடிகள்) முன்னிலையில் மகாநாடு நடந்தது. மகாநாட்டுக்கு போன பலரும் இரு அமைச்சர் கண்ணையுமே பார்த்து விட்டு வந்தனராம். இறுதியில் ஜயா சங்கரி ஏதோ பேசபோக தோழர் கடுப்பேத்த மகாநாடு இனிதே முடிவுபெற்றது. இதில் உள்ள சரி தவறை திருத்தவும்.
பல்லி
சந்தானம் பல்லியை மட்டும் வம்புல மாட்டலாமா?
தாங்களும் பல்லிக்கு பேச்சு துனைக்கு வரலாமே.
பல்லி
//ஒருவன் செத்து முழு சமூகத்தையும் காப்பாத்துறவன் வீரன்.
ஒருவன் வாழ முழு சமூகத்தையும் கொல்லுறவன் கோழை.//
ஒருவன் செத்து முழு சமூகத்தையும் காப்பாத்துறவன்? இனதுரோகி.
ஒருவன் வாழ முழு சமூகத்தையும் கொல்லுறவன்? தேசிய தலைவன்
இதை சொல்லுவது பல்லியல்ல. பரபரப்பு பரபரப்பு பரபரப்பு.
santhanam
எந்த மாநாடு நடத்தினாலும் ராஐபக்சே தமிழ்நாட்டுமுதல் அமைச்சர் போலதான் ஏன்என்றால் இலங்கையின் சகல அதிகாரங்களும் டெல்லியிடம் தான் உள்ளது உலகத்தின் அனைத்து இலங்கையின் விடயங்கள்களும் இந்தியாதான் கவனிக்கிறது.
பார்த்திபன்
இராமநாதன் அண்ணை பார்த்தீங்களா 31ந் திகதியும் உங்க வணங்காமண் நாமம் போட்டு விட்டதே. கைவசம் நிறைய வைத்திருப்பார்கள் போலுள்ளது. அட நாமத்தைத்தான் சொல்கின்றேன்.