இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் ஹஸன் விராஜுதா இன்று இலங்கை வருகிறார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் இவர், அமைச்சர் ரோஹித போகொல்லா கமவுடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோரை நாளை 30 ஆம் திகதி இவர் சந்தித்துப் பேசவுள்ளார். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் விசா தவிர்ப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள்.
இதேவேளை, இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர், “இந்தோனேஷிய வெளிவிவகாரக் கொள்கையும் ஏசியானும், “எனும் தொனிப்பொருளில் விரிவுரை நிகழ்த்துவார். கொழும்பு, சர்வதேச உறவுகளுக்கான கதிர்காமர் நிலையத்தில் இந்த சொற்பொழிவு இடம்பெறும்.