பாகிஸ்தானின் வடமேற்கே கூட்டம் நிறைந்த பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகை ஆரம்பமான நேரத்தில் தற்கொலை குண்டுதாரி தாக்கியதில் குறைந்தபட்சம் 56 பேர் கொல்லப்பட்டும் 80 பேர் காயமடைந்தும் இருக்கின்றனர்
இந்நிலையில் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், இறந்தவர்கள் தொகை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடைபெற்றபோது மேற்படி பள்ளிவாசலில் 250 பேர் வரை வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் உக்கிரத்தில் பள்ளிவாசல் கட்டிடம் சேதமடைந்தது. ஆப்கானிஸ்தான் செல்லும் பாதையில் அமைந்துள்ள கைபர் கணவாய் அருகே இருக்கும் ஜம்ருத் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.