ராமதாசுடன் சந்திப்புக்கு ஜெயலலிதா போட்ட திடீர் நிபந்தனை

jaya-ram.jpgஅதிமுக வில் சேர முடிவெடுத்து விட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் இணைய நேற்று பாமக பொதுக்குழுக் கூட்டம் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு வருகிறது பாமக.

பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதாவை, ராமதாஸ் சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நேற்று நடைபெறவில்லை. அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்தும் பாமக முடிவு குறித்து எந்தவித ரியாக்ஷனும் வெளியாகவில்லை. இதனால் பாமக தரப்பில் லேசான பீதி பரவியது.

மத்திய அமைச்சர்கள் அன்புமணியும், வேலுவும் ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகு சந்திக்கலாம் என்று ராமதாசுக்கு ஜெயலலிதா திடீர் நிபந்தனை போட்டதால் தான் இந்தச் சந்திப்பு நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. நாளை இருவரும் டெல்லி சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தரவுள்ளனர். இதையடுத்து ராமதாஸ் நாளை காலை 10 மணிக்கு ஜெயலலிதா சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் தரப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to Pon Kulendiren Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Kusumpan
    Kusumpan

    ஜெயலலிதா புலியெதிர்ப்பு வாதிமட்டுமில்லை ஈழஎதிர்ப்பு வாதி என்பதே உண்மை. இன்றை இந்திய அரசியலில் புலிப்புயல் வீசுவதால் இதை எதிர்த்துப் பிரயோசனம் இல்லை என்று அடங்கிப் போய்விட்டார். இந்தப் புலியெதிர்ப்பு அம்மையாருடன் எப்படி புலியாதரவாளரான வை கோ வும் இராமதாசும் இணைந்து செயற்பட முடியும். இது பெரும் அரசியல் சுத்துமாத்து என்று எப்போ இந்தியருக்குப் புரியும். இன்று கருணாநிதியை வசைபாடுபவர்கள் நாளை ஜெயலலிதா வந்தால் என்ன நடக்கும் என்பதை இருந்து பார்க்கட்டும். தி.மு.க + அ.தி.மு.க இவர்களைத்தவிர வேறு மாற்றுவழில்லாமல் சிறுகட்சிகள் இவர்களுடன் இணைவதைத்தவிர வெறு வழியில்லை. இதற்குத்தான் மாற்றுக்கருத்துக்களும் கட்சிகளும் அவசியம் என்பது. இன்றும் சிறுசிறுகட்சிகள் இன்றும் பொதுவேலைத்திட்டத்தை முன்வைத்து அரசியலில் ஒரு மாற்றுக்கட்சியாக தம்சுய கருந்துக்களும் செயலபடலாமே. பூனைக்கு மணிகட்டுவது யாரென்று யோசிக்காது கட்டுங்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அடடா அம்மா தொகுதிப் பங்கீட்டின் போது தான் ஆப்பு வைப்பா என்று எதிர்பார்த்தேன். ஆரம்பமே ஆப்பா!! முடியலைடா சாமி….

    Reply
  • Pon Kulendiren
    Pon Kulendiren

    தமிழ்நாட்டு அரசியல் ஒரு மசாலா கலந்த அரசியல். சுயநலம் கலந்த அரசியல். குடும்ப விருத்தி; சாதி; பணவிருத்தி; பதவி ஆசை எல்லாம் கலந்த கலவை. ஏமாற்றுவதில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் வல்லவாகள். வாக்காளிகள் ஏமாளிகள். தீக்குளிப்பு ஒரு அரசியல் கண்துடைப்பு.

    Reply