கனணி மயப்படுத்தப்பட்ட புதிய சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் அறிமுகம் – விநியோக நடவடிக்கைகளை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.

licence.jpgகனணி மயப்படுத்தப்பட்ட புதிய சாரதி அனுமதிப் பத்திரம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சகல தகவல்களையும் உள்ளடக்கிய இப்புதிய சாரதி அனுமதிப்பத்திர விநியோக நடவடிக்கைகளை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.

போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் கொழும்பு, வேரஹெரயிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற இது தொடர்பான வைபவம் நடைபெற்றது.

ஸ்மார்ட் கார்ட்| எனும் பெயரிடப்பட்ட இந்த சாரதி அனுமதிப் பத்திரத்தில் தேசியக் கொடி, அரசாங்க இலச்சினை,  சாரதியின் புகைப்படம்,  இரகசிய தகவல்களை சேகரிக்கும் அடையாளம்,  சாரதியின் பெயர், தொடர் இலக்கம், பிறந்த திகதி, விநியோகிக்கப்படும் திகதி,  காலாவதியாகும் திகதி, விநியோகித்த உத்தியோகத்தர்,  அடையாள அட்டை இலக்கம் மற்றும் வாகனங்களின் வகைகள் போன்ற விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் அநுராத விஜேதுங்க தெரிவித்தார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    பயனுள்ள செயல்தான் பாராட்டலாம்.
    ஆனால் பணம் வேண்டி கொண்டு களவாய் வாகனம் ஓட்ட தெரியாதவர்களுக்கு சாரதி பத்திரம் கொடுப்பதை அடியோடு நிறுத்த வேண்டும்.

    Reply