கோவை, கொச்சின் உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்களுக்கான விமான சேவையை இலங்கை ரத்து செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கான விமான சேவையை பாதியாக குறைத்துள்ளது.
இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் முதல் காலிறுதியில் இந்நிறுவனம் சுமார் ரூ. 250 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்தது. அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வைத்திருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஒப்பந்தத்தை முறித்து கொண்டது.
இதையடுத்து இந்நிறுவனம் சிக்கன நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையை வாரத்துக்கு 100 எண்ணிக்கையிலிருந்து 50 ஆக குறைத்துள்ளது. கோவை, கொச்சின், கோழிக்கோடு, ஹைதராபாத் ஆகிய நகருக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது.