புதுக் குடியிருப்பு கிழக்குப் பிரதேசத்தில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று நடைபெற்ற கடும் மோதலென்றில் புலிகளின் முக்கிய நான்கு தலைவர்கள் கொல்லப்பட்டனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோத அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறியதாவது.
புதுக்குடியிருப்பு கிழக்குப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் மீது நேற்று அதிகாலை 5.30 மணியளவில் புலிகள் தீவிர தாக்குதல் நடத்தினர். படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 30 க்கும் அதிகமான புலிகள் கொல்லப்பட்டனர். இவர்களுள் வரதர் அண்ணன், காதர், சூரியன் மற்றும் ஈழவன் ஆகியோர் அடங்குவர்.
கிழக்கில் வாகரைப் பிரதேசத்தில் படையினர் நேற்று நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது 5 கிலோ கிறாம் எடைகொண்ட கிளேமோர் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது
புலிகளின் பிடியிலிருந்து இதுவரையில் 55286 பொது மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
சாலை தெற்குப் பிரதேசத்தில் படையினரின் பயன்பாட்டுக்கான பாலமொன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதன் அமைப்புப் பணிகள் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் பிரிகேடியர் கூறினார்
பல்லி
பிரபாகரன். பொட்டர். சூசை. சொர்ணம். இவர்கள்தானே. அப்படி சொல்லுங்கோ ஒரு கிராமத்தையே மகிந்தா தங்களுக்கு எழுதி தருவார். அதை விட்டு நால்வர். ஜவர் என மொட்டையாய் சொன்னால் எப்படி.