சர்வதேச நிதியத்திடம் கடன்பெறுவது தொடர்பிலான முக்கிய பேச்சுவார்த்தை யொன்று நேற்றும் இடம்பெற்றதாக அமைச்சர் சரத் அமுனுகம பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், பாரிய நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படமாட்டாதென சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நாடு நிதிநெருக்கடியை எதிர்நோக்கும் வேளையில் ஆட்சியைப் பிடிக் கும் தந்திரோபாய நோக்கிலேயே ஐக்கிய தேசி யக் கட்சி இது தொடர்பில் பல்வேறு விமர்ச னங்களை முன்னெடுக்கிறது. உலகின் பொருளாதார நெருக்கடியைக் கருத் திற்கொண்டு சர்வதேச நாணய நிதியம் இலகு கடன் திட்ட மொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டின் பொருளா தாரத்தைக் கருத்திற்கொண்டு இலங்கையும் இக்கடனைப் பெறத் தீர்மானித்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சின் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், யுத்தம் நிறைவடைந்ததும் பல்வேறு துறைகளும் பாரிய அபிவிருத்தி காண்பது உறுதியெனவும் தெரிவித்தார்.
அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, மேல் மாகாணத்தைப் பொறுத்தவரை இன்று இந்தியா, சீனா போன்ற அபிவிருத்தி இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் பாரிய அபிவிருத்திகளுக்குச் செலவிடவே சர்வதேச நிதியத்திடம் கடன் பெறுகிறது.
சர்வதேச நாணய நிதியத்திடம் பெறவுள்ள கடன் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்படுகின்றன. இம் முறை கடன் பெறப்போவது வழமையான நிபந்தனைகளுடனல்ல என்பது தெளிவுபடுத்திக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்