உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்களின் விசாரணைகள் பூர்த்தி இடைக்கால அறிக்கை நாளை கையளிப்பு

vaccina.jpgருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக சுகாதார ஸ்தாபன மருந்துவ நிபுணர்கள் குழுவினர் தங்களது இடைக்கால அறிக்கையை நாளை 27ம் திகதி சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்குக் கையளிக்கவுள்ளனர்.

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து ஆராய்வதற்காக கடந்த 22ம் திகதி கொழும்புக்கு வருகை தந்த இம்மருத்துவ நிபுணர்கள் மறுநாள் அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் மாத்தறைக்கு நேரில் சென்று ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

கடந்த 19ம் திகதி மாத்தறை சென் தோமஸ் உயர் தர மகளிர் கல்லூரியின் 8ம் தர மாணவிகளுக்கு ருபெல்லா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப உலக சுகாதார ஸ்தாபனம் இரு மருத்துவ நிபுணர்களை கொழும்புக்கு அனுப்பிவைத்தது.

இவர்கள் மாத்தறையில் ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமைக்கு உள்ளான மாணவிகள் கற்கும் பாடசாலைக்கும், மாணவி களின் வீடுகளுக்கும் நேரில் சென்று விசாரணைகளை நடத்தினர். குறித்த தடுப்பு மருந்து தொடர்பாகவும் பரிசோதனைகளை நடாத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படு கிறது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளையும், பரிசோதனையையும் முடித்துக் கொண்டு இக்குழுவினர் நேற்று கொழும்பு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply to murugan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • murugan
    murugan

    ருபெல்லா தடுப்பூசி விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு தகவல் வெளியிடவேண்டாம் என சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தன்னை மிரட்டினார் என மருத்துவசங்க செயலாளர் டாக்டர் உபுல் குணசேகர தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ருபெல்லா தடுப்பூசி குறித்து தகவல் வெளியிடுவது மருத்துவ சங்கத்தின் கடமையாகும் ஆனால் அமைச்சுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்வகையில் ருபெல்லா தொடர்பில் தகவல் வெளியிடவேண்டாம் என சுகாதார அமைச்சின் உயரதிகாரியொருவர் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்ய எமது சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் கூறினார்.

    Reply