இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகளில் இடம்பெறும் யுத்தத்தால் கைத்தொழில் துறை வளர்ச்சியடைந்த நாடுகளில் பொதுமக்கள் புகலிடம் கோருவது அதிகரிக்கும் என்று அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் (யு.என்.எச்.சி.ஆர்) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
கடந்த வருடம் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் கைத்தொழில்துறை வளர்ச்சியடைந்த நாடுகளில் புகலிடம் கோரி 2008 இல் 3 இலட்சத்து 83 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். இது 2007 ஐ விட 12 சதவீதம் அதிகமாகும் என்று அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார். ஆப்கான், சோமாலியா நாடுகளிலிருந்தே அதிகளவு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து புகலிடம் கோருவோர் விண்ணப்பங்கள் கடந்த வருடம் 24 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. புலிகளுடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்தும் அரசு விலகிக்கொண்டதைத் தொடர்ந்து யுத்தம் மீண்டும் ஆரம்பித்ததால் இலங்கையிலிருந்து புகலிடம் கோருவோரின் தொகை அதிகரித்திருப்பதாக யு.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.