படை வீரர்களின் நலன் கருதி பாதுகாப்பு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நமக்காக நாம் எனும் நிதியத்துக்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தையும் உள்ளடக்கிய 35 வர்த்தகர்கள் 45 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த நிதி கையளிக்கப்பட்டது.
தொழில் உறவுகள், மனிதவலு அமைச்சின் செயலாளர் மஹிந்த மத்திஹேஹெவவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நன்கொடை அன்பளிப்பு வைபவத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் கலந்துகொண்டதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.