இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிரதம செயலாளர் டீ.கே.ஏ. நாயர் இன்று இலங்கை வரவுள்ளதாக இணைய தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் அழைப்பை ஏற்றே அவர் இங்கு வரவுள்ளார் எனவும் இலங்கை- இந்தியாவுக்கிடையிலான அபிவிருத்தி, பொருளாதாரம் தொடர்பாகவே இவரது விஜயத்தின் போது கலந்துரையாடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.