சர்வதேச காசநோய் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. காச நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்தி நோய் பரவுவதைத் தடுப்பதுடன், நோய்க்கான சிகிச்சை முறைகள் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் வருடந்தோறும் மார்ச் மாதம் 24ம் திகதி சர்வதேச காசநோய் விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
இலங்கையில் இம்முறை சர்வதேச காச நோய் தினத்தை அனுஷ்டிப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையங்களின் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
காசநோய் பற்றி வரலாறு, நோய்க்காரணி, அதன் அறிகுறிகள், நோய்பரவும் விதம், அதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் நோய்பரவுவதைக் கட்டுப்படுத்துவதற் கான வழிவகைகள் பற்றி மக்களைத் தெளிவுபடுத்து வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, காசநோய் தொடர்பாக பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் சுகாதார அமைச்சு கல்வியமைச்சுடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்துள்ளது.