தென்னா பிரிக்க அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 22 முடிவடைந்த 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியுடன் ஸ்டீவ் பக்னர் டெஸ்ட் நடுவர் பணியில் இருந்து விடைபெற்றார். மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த 62 வயதான ஸ்டீவ் பக்னர் 128 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியவர் என்ற பெருமையும் பக்னரையே சாரும் இதற்கு அடுத்தபடியாக தென்னாபிரிக்காவின் ருடீ கேட்சன் 99 டெஸ்ட்களில் நடுவராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி நேற்று ஸ்டீவ் பக்னரின் 20 வருடகால டெஸ்ட் நடுவர் பணி முடிவுக்கு வந்தது. பக்னர் முதல் முறையாக 1989 ஆம் ஆண்டு கிங்ஸ்டனில் நடைபெற்ற இந்தியமேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது நடுவராக செயல்பட்டார்.
அடுத்து இங்கிலாந்து மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் வரும் பார்படோசில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாவது மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஸ்டீவ் பக்னர் நடுவராக செயல்படவுள்ளார். இதனை தொடர்ந்து அவர் சர்வதேச நடுவர் பணியில் இருந்து விடைபெற திட்டமிட்டுள்ளார்.